மத்திய ஆயுதப் படைகள் (CAPFs), எஸ்எஸ்எஃப், அசாம் ரைபிள்சில் உள்ள ரைபிள் மேன் (பொதுப் பிரிவு), காவலர் ( பொதுப் பணி) மற்றும் சிப்பாய் தேர்வு, 2022
மத்திய ஆயுதப் படைகள் (CAPFs), எஸ்எஸ்எஃப், அசாம் ரைபிள்சில் உள்ள ரைபிள் மேன் (பொதுப் பிரிவு), காவலர் ( பொதுப் பணி) மற்றும் சிப்பாய் தேர்வு, 2022-ஐ மத்தியப் பணியாளர் தேர்வாணையம் கணினி முறையில் நடத்துகிறது. தெற்கு பிராந்தியத்தில் 3,69,376 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தேர்வு 20 மையங்களில் உள்ள 21 இடங்களில் நடைபெறுகிறது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில், குண்டூர், கர்நூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர், சீராளா, விஜயநகரம் போன்ற இடங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத், வாரங்கல், கரீம்நகர் போன்ற இடங்களிலும், தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய இடங்களிலும் நடைபெறும்.
தெற்கு பிராந்தியப் பகுதியைப் பொறுத்தமட்டில் இந்தத் தேர்வு 10.01.2023 முதல் 13.02.2023 வரையில் 19 நாட்கள் நடைபெறும். நாள் ஒன்றுக்கு 4 ஷிப்டு முறைகள் பின்பற்றப்படுகிறது. 1-வது ஷிப்ட் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், 2-வது ஷிப்ட் காலை 11.45 மணி முதல் 12.45 மணி வரையிலும், 3-வது மாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரையிலும், 4-வது ஷிப்ட் மாலை 5.15 மணி முதல் மாலை 6.15 வரை நடைபெறுகிறது.
மின்னணு அனுமதிச்சீட்டு, sscsr.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கு 4 நாட்களுக்கு முன்பாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு 044-2825 1139 என்ற தொலைபேசி எண்ணிலும், 94451 95946 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு சென்னை மத்தியப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தின் இணை செயலாளர் மற்றும் மண்டல இயக்குனர் திரு கே.நாகராஜா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்