வருவாய்த் துறையின் மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியத்தின் 29 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு விருது
வருவாய்த் துறையின் மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியத்தின் 29 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருதுகளைப் பெறுகின்றனர்
வருவாய்த் துறையின் மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் சிறப்பான சேவையைப் பாராட்டி குறிப்பாக அச்சுறுத்தல்களை கடந்து துணிவுடன் பணியாற்றும் சேவையை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வருவாய்த் துறையின் மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியத்தின் 29 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மண்டலத்தில் இடம் பெற்றுள்ள கோவை மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) கண்காணிப்பாளர் திரு ஜே ஃபெட்ரிக் சர்குரு தாஸ், சென்னை மண்டல பிரிவைச் சேர்ந்த வருவாய்ப் புலனாய்வுத் துறை இயக்குநரகத்தின் மூத்தப் புலனாய்வுத் துறை அதிகாரி திரு ஏ முரளி, கோவை சிஜிஎஸ்டியின் முதன்மை ஆணையர் அலுவலக ஆய்வாளர் திரு வி மகேந்திரன் உள்ளிட்ட 29 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தின் போது விருதுகள் வழங்கப்படும்.
கருத்துகள்