37.14 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கம், ரூ.38. 47 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றினர்
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூரிலிருந்து 6.01.2023 அன்று சென்னை வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தனர். அப்போது 760 கிராம் எடையிலான 37.14 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை அவர் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சுங்கத்துறையினர் அதனை மீட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் கொழும்பிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த இரண்டு பெண் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்ததில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 38.47 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை கூடுதல் ஆணையர் திரு கே பி ஜெயகர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்