ஒன்றுபட்ட இந்தியாவின் 74 வது குடியரசு தினத்தை
யொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை
குடியரசு தினமான இன்று தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இன்று காலை தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது."குடியரசு தினத்தையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
குடியரசு தினத்தையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“குடியரசு தினத்திற்கு வெகுவான நல் வாழ்த்துக்கள். இம்முறை இவ்விழா சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா காலத்தில் கொண்டாடப்படுவதால் இவ்விழாவும் சிறப்பு வாய்ந்தது. நாட்டின் மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க நாம் ஒற்றுமையாக முன்னேற விரும்புகிறோம்.
இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான குடியரசுதின வாழ்த்துக்கள்!”பத்ம விருது பெற்றவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
பத்ம விருது பெற்றவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பத்ம விருது வழங்கப்பட்டோருக்கு வாழ்த்துக்கள். நாட்டிற்கு இவர்களின் வளமான மற்றும் பன்முகப் பங்களிப்புக்காகவும் நமது வளர்ச்சிப் பாதை விரிவாக்கத்திற்கு இவர்களின் முயற்சிகளுக்காகவும் இந்தியா இவர்களைப் போற்றுகிறது.சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் கோலாகலமாகக் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
தங்களுக்கான விருப்பங்களையும் இலக்குகளையும் நிர்ணயித்து அதற்காக திட்டமிட்டு அவற்றை அடைவதற்கு கடுமையாக பாடுபட வேண்டும் என்று அவர் மாணவர்களை வலியுறுத்தினார். இந்த விழாவில் உரையாற்றிய தலைமை விருந்தினர் திருமதி டி. ருக்மணி, குடியரசு தினம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பை வலியுறுத்தும் நாள் என்பதை எடுத்துரைத்தார். தாய்க்கு மதிப்பளிக்க மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இது தாய் நாட்டை மதிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
குடியரசு தின விழாவையொட்டி "வேற்றுமையில், ஒற்றுமை" என்பதை விளக்கும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மாணவர்களின் தேசப்பற்று மிக்க எழுச்சி உரைகள் இடம்பெற்றன. யோகாவில் தங்களின் திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர். குழு நடனங்களும் சேர்ந்திசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
முன்னதாக பள்ளியின் முதல்வர் டாக்டர் எம். மாணிக்கசாமி வரவேற்புரையாற்றினார். விழா நிறைவில் துணை முதல்வர் திரு ராஜேஷ்குமார் மிஸ்ரா நன்றி கூறினார்.புதுதில்லி கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாக் கொண்டாட்ட அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த வந்தே பாரதம் என்ற கலாச்சார நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது
புதுதில்லியில் உள்ள கடமைப்பாதையில் இன்று நடைபெற்ற தேசிய அளவிலான குடியரசு தினக் கொண்டாட்டத்தில், கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் இடம்பெற்றிருந்த வந்தே பாரதம் என்ற கலாச்சார நிகழ்ச்சி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்ச்சிக்காக, பெண் சக்தி என்ற கருப்பொருளின் அடிப்படையில், தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டு, அதில் இருந்து 479 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட அணிவகுப்பில், கலைஞர்கள் தங்கள் தன்னிகரில்லாத் திறமைகளை வெளிப்படுத்தினர். இது, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கொள்கையின் அடிப்படையில், இந்தியாவின் பல்வேறு கலாச்சார மற்றும் கலை பாரம்பரியத்தை வெளியிடுத்துவதாக அமைந்திருந்தது.
வந்தே பாரதம் நிகழ்ச்சிக்கு இசைஞானி இளையராஜாவின் மகள் ராஜா பவதாரணி இசையமைத்திருந்தார். அவருடன் அலோக்நந்த தாஸூம் இணைந்து, ஹிந்துஸ்தானி, கர்நாடக மற்றும் ஜாஸ் இசைகளின் உட்கூறுகளை உள்ளடக்கிய இசையை வடிவமைத்திருந்தனர்.
கடமைப்பாதையில் நடைபெற்றிருந்த இந்த அணிவகுப்பில், கலாச்சார அமைச்சகம் சார்பில், பெண் கடவுள் சக்தியை வெளிப்படுத்தும் விதமாக பிரம்மாண்ட கடவுள் உருவமும் இடம்பெற்றிருந்தது. இதில் பல்வேறு நாட்டுப்பற நடனக்கலைஞர்களின் கண்கவர் நடனமும் இடம்பெற்றிருந்தன.
இந்த வந்தே பாரதம் நடன விழாவானது, மத்திய பாதுகாப்பு மற்றும் கலாச்சார அமைச்சகங்களின் கூட்டு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த நடனங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, உலகிற்கு வெளிப்படுத்தியதுடன், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கொள்கையை மக்களிடையே முன்னிறுத்தும் முயற்சியாகவும் அமைந்திருந்தது.
இதற்காக நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் உள்ள கலைஞர்களை அடையாளம் காண ஏதுவாக, 2022 அக்டோபர் 15ம் தேதி 2-வது கட்ட நடனப் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாநிலம், மண்டல மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 17 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட நாட்டுப்புற நடனக் கலைஞர்களுக்கு மட்டுமே இந்தமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு 2022 டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில், பிரம்மாண்ட இறுதிப் போட்டி நடத்தப்பட்டது.குடியரசு தினவிழாவில் பங்கேற்றமைக்காக அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியிக்கு பிரதமர் நன்றி
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்று சிறப்பித்த எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்- சிசிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 74-வது குடியரசு தின விழாவில் அதிபர் எல்-சிசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், பங்கேற்று சிறப்பித்தமைக்காக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்- சிசிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கடமைப்பாதையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாக் காட்சிகளை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
தில்லி கடமைப்பாதையில் நடைபெற்ற இன்றைய குடியரசு தினவிழாவின் காட்சிகளை பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தொடர் ட்விட்டர் பதிவுகளையும் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் குடியரசு தினவிழா நடைபெற்றதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய. பின்னர், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்
"நாம் சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளாகிறது. நீண்ட சுதந்திரப் போராட்ட களத்தில் முன்னனி வீரர்களைத் தவிர, பல வீரர்கள், வீராங்கனைகள் வரலாறு அறியப்படாமலே போனது. அவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக அவர்களின் வாழ்கையை ஆவணப்படுத்தும் கடமை நமக்குள்ளது.
தமிழ்நாட்டில் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அந்நியர்களை இந்த மண்ணைவிட்டு விரட்ட தியாகங்கள் செய்துள்ளனர். இதில் பலரது தியாகங்கள் அறியப்படாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தது ஒரு அறியப்படத சுதந்திர போராட்ட வீரரை அடையாளம் கண்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் ஒரு வருடம் முடிவில் ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் சிறப்பிக்கப்படுவார்கள். எனத் தெரிவித்துள்ளார்.சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார்கள்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேநீர் விருந்தை புறக்கணித்துவிட்ட விசிக, ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது.
விசிகவைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்த. கருத்தில் “ஆளுநர் ஆளுநராக இல்லை, ஆர்எஸ்எஸ்காரராக செயல்படுகிறார். எனவே தேநீர் விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கவில்லை, புறக்கணிக்கிறோம்” என தெரிவித்திருந்தனர். சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு இரயில் நிலையத்தில் SS பொறுப்பு - தர்மேந்திரகுமார்சௌத்ரி ,
ஸ்டேஷன் மாஸ்டர் - கமலேஸ்குமார் ராம் , P.MAN- யு.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் அழைப்பில் பப்ளிக் ஜஸ்டிஸ் செய்தி ஆசிரியர் குடியரசு தினத்தில் கலந்து கொண்ட நிகழ்வு சிவகங்கை சமஸ்தானம் மேதகு இராணி DSK மதுராந்தகி நாச்சியார் அவர்களின் ஆளுமைக்கு உட்பட்ட சிவகங்கை மன்னர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான மன்னர் மேல்நிலைப்பள்ளியில் இன்று 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதுகள் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மறைந்த சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகிய 6 பேருக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, இன்போசிஸ் நிறுவனத் தலைவரும் நாராயணமூர்த்தியின் மனைவியும், பிரிட்டிஷ் பிரதமரின் மாமியாருமான சுதா மூர்த்தி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.பெரிய அளவில் அறியப்படாத பலரில் தமிழ்நாட்டின் இருளர் சமூகத்தின் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் எவ்வித கல்வி அறிவுமின்றி, உலகம் முழுவதும் சுற்றி, பல விஷ பாம்புகளை இருவரும் நேர்த்தியாக பிடித்து, விஷ முறிவு துறைக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வரும். இவர்கள்
இந்திய இருளர்கள் இருவரும்
வாழ்க்கையையே சமூக சேவைக்கு அர்ப்பணித்த ஓய்வுபெற்ற நூலகரான பாலம் கல்யாண சுந்தரம், மருத்துவர் கோபாலசாமி வேலுசாமி, கலைத்துறையைச் சேர்ந்த கே.கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியில் 74 வது குடியரசு தின விழா
சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் பள்ளியின் ஆசிரியை விசாலாட்சி வரவேற்புரையாற்றினார் வழங்கினார். நிர்வாக இயக்குனர் . அருண்குமார் தலைவர்களை நினைவுபடுத்தும் வகையில் எம் பள்ளி மாணவ மாணவிகள் தேசிய தலைவர்களின் வேடங்களில் அன்னை தெரசா, நேதாஜி சுபாஷ் சந்ரபோஸ், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, இராஜேந்திர பிரசாத் மற்றும் பாரதியார்) உள்ளிடட பலரது வேடமிட்டு பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.சென்னை வருமானவரித் துறை அலுவலகத்தில் குடியரசு தின விழா
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் 74-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி வருமானவரித் துறையின் முதன்மை தலைமை ஆணையர் திரு ஆர். ரவிச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மூத்த அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ரவிச்சந்திரன், சுதந்திரத்துக்காக பாடுபட்ட பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மாவீரன் அழகுமுத்து கோன், தீரன் சின்னமலை, வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார், வேலு நாச்சியார் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.
நாட்டில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்று கூறிய அவர், மூன்று ஆண்டுகளில் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் போது, தமிழ்நாடு நாட்டின் ஜிடிபி பங்களிப்பில் பெரிய மாநிலமாக மாறும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலக வளாகத்தில் உள்ள அகரம் குடியிருப்பு பகுதியில் மரம் நடும் இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார் என்று சென்னை வருமானவரி அலுவலக கூடுதல் ஆணையர் திரு வி.வித்யாதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்