மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகில் செம்பதனிருப்பு கிராமத்தில் பொங்கல் பரிசு
தொகுப்பில் தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ள கரும்புகளை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு செய்த ஆய்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா உடனிருந்தார். சீர்காழி தாலுகா பகுதிகளில் நவீன மயமாக்கப்பட்ட நியாய விலைக் கடை மற்றும் சீர்காழி நகர கூட்டுறவு வங்கியிலும் ஆய்வுகள் செய்தார்
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு கொள்முதல்
பணியை கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் கண்காணிப்புக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும். விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். அங்கு தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படும்
நல்ல நிலை உள்ள செங்கரும்பை தேடி எடுத்து கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கிய விவசாயிகள் கரும்புக்கு உண்டான தொகை அதிகபட்சமாக போக்குவரத்துச் செலவுகள் உட்பட ஒரு கரும்புக்கு ரூ.33 வீதம் , ரூ.72.38 கோடி நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நியாயமான விலையில் தரமான கரும்பை பொங்கல் தொகுப்புடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் எக்காரணத்தைக் கொண்டும் இடைத்தரகர்கள், வியாபாரிகள், பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அரசு அறிவுறுத்தியுள்ளதெனத் தெரிவித்ததுடன் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள்