முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வில்லிசையை அடுத்த தலைமுறை நோக்கிக் கொண்டு செல்லும் அச்சங்குன்றம் மாதவி

 " மெய் தவத்தில் நின்றரக்கன் விரல் தூண்ட வரம் வாங்கிச்

செய்ய சிவனார் தனைவிரட்டத் திருமாலிடமே மகிழ்ந்து

செல்லதையல் வடிவாய் பெண் வேஷம் கொண்டு சத்தியம் செய்து

வரமளித்த ஐயன் கதைதனைப்பாட ஆனைமுகன் காப்பானே".

(கதைக் : காப்பு)  ஐந்து கலைஞர்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பங்கு பெறுவர்

கடத்தின் அதாவது மானாமதுரை மண் பானை மேலே வில் இணைக்கப்பட்டிருக்கும். வீசும் கோலை நாணின் மேல்     வீசுவதற்கு     ஏற்றவாறு     உயரம் அமைக்கப்பட்டிருக்கும். தேங்காய், பழம், வெற்றிலையும் களிப்பாக்கும், வைத்து கற்பூரம் காட்டி  வில்லின் முன் படைக்கப்படும்.


மேடையில் அனைத்துக்     கலைஞர்களும் அமர்ந்ததும்  கற்பூரம் காட்டிய பின், தங்கள் இசைக்கருவிகளை ஒரு சேர இயக்குவர். இஃது ‘இராஜ மேளம்’ எனலாம்் காப்புப் பாடலுடன் கதை தொடங்கும்.வில்லுப்பாட்டில் வரும் கதைகள் கீழ்காகண்டவாறு அமையும்:- தொன்மைக் கதைகள் எனவும், நாட்டுப்புறக் கதைகள் எனவும், தெய்வக் கதைகள் எனவும், சமூகக் கதைகள் ஏனவும், வரலாற்று வீரர்களின் கதைகள் எனவும், நடப்பியல் நிகழ்வுகள் உள்ளிட்டவைகளாகும்.


இதில் ஐயன் கதை, வள்ளியம்மன் கதை, பார்வதியம்மாள் கதை, மார்க்கண்டேயன் தவசு, ஹரிச்சந்திரன் கதை, கிருட்ஷ்ணசாமி கதை, பெருமாள்சாமி கதை, மாஹாகாளியம்மன் கதை, இராமாயணக் கதைகள், சுடலைமாடன் கதை, நீலி கதை, முத்துப்பட்டன் கதை, சின்ன நாடான் கதை, தோட்டுக்காரி அம்மன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, கான்சாகிபு சண்டை , கட்டபொம்மன் கதை, காந்திமகான் கதை ஆகியவை குறிப்பிடத்தக்க வில்லுப்பாட்டுக்களாகும்.

மக்களிடம் மிகவும் பிடித்த ‘ஹரிச்சந்திரன் கதை’யைக் காண்போம்:-

ஹரிச்சந்திரன்  தன் நாட்டையும் மனைவி, மகனையும் பிரிந்தும் வாழ்கிறான். ஹரிச்சந்திரன், தன்னையே விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, சுடுகாடு காக்கும் பணியின் போதும் உண்மைக்காக கொண்ட கொள்கை தவறாமல் இருக்கிறான். கடைசியில் தனது வாய்மை மற்றும் சத்தியம் மூலம் வெற்றி காண்கிறான்.

ஹரிச்சந்திரன் கதையில் துயரம் மிகுந்த காட்சிகள் வில்லுப்பாட்டிற்கு மிகவும் ஏற்ற சூழலைத் தருவதால் அந்தக்கதை வில்லுப்பாட்டுக்கென விரும்பப்படுகிறது.  சொல்லும் வில்லிசை கலந்த  வில்லுப்பாட்டுக் கலையில் ‘வில்’ என்னும் இசைக்கருவி முதன்மை பெறுவதே     இசைப் பங்களிப்பின் முக்கியத்துவம்  புரியும். அதனால் ‘வில்லிசை’ எனப் பெயர் பெறுகிறது.

வில், உடுக்கை, கடம், தாளம், கட்டை உள்ளிட்ட  இசைக்கருவிகள்  இடம் பெறுகின்றன.  நாடகத்தன்மையுடன் கதை கூறிச் செல்லும் முறைமைக்குக் கதைக் கூற்றரங்கு அது ஆங்கிலத்தில்  Narrative Theatre எனப் பெயர். வில்லுப்பாட்டு முழுக்க இவ்வடிவத்துக்கான கூறுகளைக் கொண்டிருக்கிறது. கதைக் கூற்றரங்கில் ஒரு கதையின் பல்வேறு பாத்திரப்படைப்புக்களின் இயல்புகளையும்     மிகச் சிறந்த முகபாவனைகளுடன் குறிப்பிட்ட குழுவினர் நடித்துக் காட்டும் பாங்கு, பார்வையாளர்களை மிகவும் ஈர்க்கும் வண்ணம் அமைகிறது. முகபாவனைகள் முகத்தில் அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப மாறும் உணர்ச்சி வேறுபாடுகளை காட்டும் கலைஞர்களைத்தான் மக்கள் விரும்பிய காலம் முன்பிருந்தது


இக்கலையானது, பாண்டிய நாட்டின்  தென்   மாவட்டங்களில் அம்மன் கோவில் மற்றும் கொடை விழாக்களிலும் இப்போதும் நடைபெறுகின்றது. தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் அவ்வப்போது காணலாம்.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படும் நாட்டுப்புற கலைகளுள் வில்லுப்பாட்டு தனி சிறப்புக்குறியதாகும். இங்கு நடைபெறும் கிராமியத் திருவிழாக்கள் மற்றும் கோவில் கொடை விழாக்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் முக்கிய இடம்பெறும். இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகளும், அதிலிருந்து எழுப்பப்படும் ஓசைகளும் வித்தியாசமானது. இந்த நிகழ்ச்சியில் கிராமிய இசைக்கருவிகளின் இசையுடன் முற்காலப் 18 புராணங்கள், கோவில் ஸ்தல வரலாற்று நிகழ்வுகள், கிராம தேவதைகளின் வரலாற்றுக் கதைகள் மற்றும் பிற கதைகள் வாய்மொழியாகப் பாடப்படும்.  வில்லுப்பாட்டுக் கலைக்கு வரலாற்றில் மிகச் சிறப்பானயிடமுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறையினர் வரை ஓரளவிற்கு அனைவரும் தெரிந்து வைத்திருக்கும்  கலையான வில்லுப்பாட்டு, தற்கால நாகரிக வளர்ச்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதனால் அடுத்த தலைமுறையினர் இதனை நேரில் கண்டு ரசிப்பதென்பது அரிதாகத் தானிருக்கும்.


வில்லுப்பாட்டை நிகழ்த்தும் கலைஞர்கள் தற்போதும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழ்கிறார்கள். பொதுவாக இந்தப் பகுதிகளில் உள்ள கோவில்களில் தை, ஆடி, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் அதிகளவில் நடக்கும் கொடை விழாக்கள்  என்பதால், அந்தக் காலக்கட்டத்தில் இவர்களுக்குக் கடுமையான கிராக்கிகளும் நிலவும். இதற்காகக் கோவில் கொடை விழா தொடங்கப் போவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு ஊர் மக்கள் விரும்பும் கலைஞர்களை முன்பதிவு செய்து விடுவார்கள். அதில் தற்போது தென்காசி மாதவி குழுவினர் முதன்மை பெறுகின்றனர். கிராமத் தெய்வ வழிபாடுகளுக்குப் பெயர் பெற்ற திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கணக்கற்ற பல கிராம தெய்வங்களின் கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் நடைபெறும் கொடை விழாக்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி வைப்பது இன்று வரை ஒரு முக்கியமான சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை,திண்டுக்கல், தேனி,புதுக்கோட்டை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் வள்ளி திருமணம் எனும் தெருக்கூத்து நிகழ்வு போல திருநால்வேலி தாமிரபரணி பாயும் பகுதி மக்களின் வட்டார வழக்கு மொழி வில்லுப்பாட்டு நிகழ்வும் வருகிறது. இத்தனை சிறப்புகள் பெற்ற நாட்டுப்புறக்கலையான வில்லுப்பாட்டின் வரலாற்றையும் அதுபற்றிய சுவாரசியமான தகவல்களையும் பற்றி விரிவாகக் காண்போம்.


முற்கால ஆதி மனிதர்கள் காடுகளில் விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதனை பின்பற்றிய பிற்காலத்தில்  ஆட்சி செய்த சிற்றரசர்களும், ஜமீன்தாரர்களும் காட்டிற்குச் சென்று வேட்டையாடுவதை தங்கள் வீரத்தின் வெளிப்பாடாகக் கருதினார்கள். இப் பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன் தனது சகாக்களுடன் வேட்டைக்குச் செல்கிற போது காட்டில் நீண்ட தூரம் சென்று வேட்டையாடியதால் ஏற்பட்ட களைப்புத் தீர அனைவரும் ஒரு இடத்தில் இளைப்பாறுகிறபோது மன்னர் பொழுதுபோக்கிற்காகத் தனது சகாக்களை அழைத்துப் பாட்டுப் பாடச் சொல்கிறார். மன்னரை ரசிக்க வைக்க அவருடன் சென்ற வீரர்கள் தாங்களுடன் வைத்திருந்த வில், அம்பு, தண்ணீர் கொண்டு சென்ற குடங்களை இசைக்கருவிகளாக மாற்றித் தங்களுக்கு தெரிந்த பயிற்சி இல்லாத குரலில் பாடல் பாடினார்கள். அந்தப் பாடலும் ரசிக்கும் படி இருந்து விட, அதில் மயங்கிய மன்னர் பின் தன் அரண்மனைக்கு வந்த பின்பும், அந்தக் கருவிகளைப் பயன்படுத்தி, தனது வீரர்களைப் பாடச் செய்து அரசவை மண்டபத்தில்  அடிக்கடி கேட்டு மகிழ்ந்தாராம். அதற்குப் பின் வந்த காலத்தில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட வில், போர்க்களத்தில் முக்கியமான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டது. அப்போது போர்க்களத்தில் போர் புரிந்து களைப்படைந்த வீரர்களை உற்சாகப் படுத்த, அவர்களே தங்கள் ஆயுதமான வில்லை தலைகீழாகக் கவிழ்த்தி அதில் ஒலியெழுப்பும் வண்ணம் மணிகளை கோர்த்து, அதன் மூலம் இசை எழுப்பிப் போர் வீரர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கமளிக்கும் வகையில், முற்காலத்தில் நடைபெற்ற போரில் பங்குபெற்ற தங்களின் முன்னோர்கள் மற்றும் இதிகாச, புராணக் கதைகளில் வரும் போர்க் கதைகளை தங்களுக்கு தெரிந்த பயிற்சி இல்லாத குரலில்  சப்தமாகப் பாடினார்களாம். இந்த எழுச்சிமிக்க வரலாற்றை பாடலாகக் கேட்கும் வீரர்களுக்கு உள்ளுக்குள் தைரியம் மற்றும் வீரம் பெருக்கெடுக்க, போர்க்களத்தில் வீரமாகப் போராடினார்களாம். இப்படி நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த இந்த இசை நிகழ்ச்சி பின் அனைவருக்கும் பிடித்துப் போய்விட அதனை அடிக்கடி நடைபெற வழிவகை செய்ததன் மூலம் தான் இந்த நாட்டுப்புறக் கலையான வில்லுப்பாட்டு பிறந்ததாகவும் செவிவழிச் செய்தியாகக் கூறப்படும்  வில்லுப்பாட்டு அல்லது வில்லிசை நாட்டுப்புறக் கலைகளில் தனிச்சிறப்புடன் திகழும் தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு, துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாக காலப்போக்கில்  பயன்படுத்தப்படும் உடுக்கை, வில்லுக்கடம், தாளம், வீசுகோல், கட்டை என்பனவாகும். திரைப்படத்தில் வில்லுப்பாட்டினை அறிமுகம் செய்த பெருமை  மறைந்த  கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனைச் சேரும்.


‘காந்திமகான் கதை’ இவரின் சிறப்பான படைப்பு. கொத்தமங்கலம் சுப்பு, கண்டரமாணிக்கம் குலதெய்வம் இராஜகோபால், பத்ம விருது பெற்ற காலம்சென்ற சுப்பு ஆறுமுகம் போன்றோர் குறிப்பிடத்தக்க வில்லுப்பாட்டுக் கலைஞர்களாவர்கள்.                     காலம்சென்ற சுப்பு ஆறுமுகம் தன் வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்தார். இவர் வில்லுப்பாட்டினை கடந்த தலைமுறையில்  மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் மற்றும் சுப்பையா பிள்ளை போன்றவர்களிடம் கற்றார். 1975 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், சங்கீத நாடக அகாடமி விருதினையும் பெற்றார்.2022 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதியில் காலமானார். சுப்பு ஆறுமுகம் தனது பதினாறாம் வயதில் 'குமரன் பாட்டு' என்ற நூலை எழுதியிருக்கிறார்.என்பதும் .  வில்லிசை வேந்தர் என்று போற்றப்படும் அளவிற்கு உலகம் முழுவதிலும் வில்லிசை பாடி வந்தார்.2021 ஆம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.வில்லுப்பாட்டுக் கலைஞர்களாக அக்காலத்தில் 

கன்னங்குளம் ஸ்ரீ. குருசாமி நாடார், கன்னங்குளம் ஸ்ரீ. சந்தோஷ் நாடார், தோவாளை சுந்தரம் பிள்ளை, கலைவாணர்  என். எஸ்.கிருஷ்ணன், கண்டரமாணிக்கம் குலதெய்வம் இராஜகோபால், யாழ்ப்பாணம் சின்னமணி, உடப்பு பெரி. சோமாஸ் கந்தர், கவிஞர் சுப்பு ஆறுமுகம், திருப்பூங்குடி ஆறுமுகம், லடிஸ் வீரமணி, நாச்சிமார்கோயிலடி இராஜன், திருநெல்வேலி புலிக்குட்டிப் புலவர் முத்துசாமித் தேவர், கோவில்பட்டி. சோக்கல்லோ சண்முகநாதன் போன்றோர் பல காலங்களில் இருந்தாலும் தற்போது  மக்கள் மத்தியில் வளரும் கலைஞராக தென்காசி மாதவி வில்லுப்பாட்டு  பிரபலமாகிறது..  அழிந்து வரும் கலை இந்த தென்காசி, அச்சங்குன்றம் மாதவியால் காலைவடிவாக அடுத்த தலைமுறை நோக்கி  தூக்கிச் செல்லப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம