"ஊழல் செய்கிறவன் மனமோ அழுக்கு! ஊழல் செய்கிறவன் நம் நாட்டிற்கே இழுக்கு..! கிடப்பிலே இருக்கின்றன பல வழக்கு..!
பெரிய தண்டனைகளை வாங்கிக் கொடுத்து எடுக்கணும் சுளுக்கு!. தற்போது நல்ல மருந்துமில்லை, மருத்துவருமில்லை, புரையோடிக்கிடக்கும் ஊழல் நோய் ,. ஊழல் பெருச்சாளிகள் தெருக்களைக் காலிசெய்தன, பலசமயங்களில் மனித உருக்களாய் மாறுகின்றனவாம், ஊழலில் தின்றது அவர்களுக்குச் செரிக்குமா என்பது கூடத் தெரியாதாம். நின்று கொறித்தது ஒன்று, தடியோடு தேடிய சிறுவனுக்கு விளக்கினேன், பெருச்சாளியைக் குனிந்து தேடாதே தம்பி , அது சிக்காது அண்ணாந்து பார் !
ஒழுக்கம் யாவும் தரைமட்டம் ஊழல்களுக்குப் பரிவட்டம்! அழுக்குகளுக்கும் அவர்களின் அள்ளக்கைகளுக்கும் பெரும் பதவி, ஆனால் இனி ஊழல் செய்தால் எவரானாலும் தண்டனை என்ற பயம் வரவேண்டும். அதுவே தீர்வாகும்.
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 , பொதுவாக லோக்பால் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டமாகும், இது " சில முக்கிய பொதுப் பணியாளர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மசோதா லோக்சபாவில் 2011 ஆம் அண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாஸ் மசோதா, 2011 என சபையில் நிறைவேற்றப்பட்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு.
மறுநாள் நள்ளிரவு வரை நீடித்த விவாதத்திற்குப் பிறகு , 2012 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று, ராஜ்யசபாவின் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்களுடன் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று ராஜ்யசபாவிலும் மறுநாள் மக்களவையிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்க ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
2011 ஆம் ஆண்டில், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் ஊழல் புலனாய்வு குறியீட்டில் இந்தியா 95 வது இடத்தைப் பிடித்தது . இந்தியாவில் ஊழலுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகி, வளர்ச்சியை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் குளோபல் ஃபைனான்சியல் இன்டெக்ரிட்டி வெளியிட்ட அறிக்கையின்படி , வரி ஏய்ப்பு , குற்றம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய ஊழல் ஆகியவற்றின் காரணமாக இந்தியா 462 பில்லியன் டாலர் சட்டவிரோத நிதிப் பாய்ச்சல்களை இழந்துள்ளதாகவும், உள்ளது தரவுத் தகவல்
இச் சூழலில்தான் பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பிரபல நீதிபதி முகுல் ரோஹத்கி ஆகியோர் அடங்கிய குழுவால் 17 ஆம் தேதி மார்ச் மாதம் 2019 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஸ் இந்தியாவின் முதல் லோக்பாலாக நியமிக்கப்பட்டார்.
ஊழல் இலஞ்ச இலாவண்யம் செய்த பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களை மாநில அளவில் ஒரு சுயாதீன புகார் ஆணையம் விசாரிக்கிறது.
ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ன் கீழ் உள்ள அனைத்து ஊழல் வழக்குகளும் அதில் அடங்கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 1976 ன் மூலம் நிதியளிக்கப்பட்டது அல்லது பொதுமக்களிடமிருந்து நிதியைப் பெறுகிறது. பிரதமர், நீதித்துறை மற்றும் பாராளுமன்றம் அல்லது குழுவில் ஒரு எம்.பி.யின் எந்த நடவடிக்கையும் விலக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் 1988 ஊழல் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதமர் உட்பட ஒரு பொது ஊழியர் செய்யும் குற்றங்கள் அடங்கும். லோக்பால் 30 நாட்களுக்குள் முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டும். முதன்மையான வழக்கு எதுவும் இல்லை என்றால், விஷயம் முடித்துவிடும். முதன்மையான ஒரு வழக்கின் அடிப்படையில், லோக்பால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பொருத்தமான மன்றத்தை வழங்கிய பிறகு விசாரிக்கிறது. எழுத்துப்பூர்வமாக காரணங்களைத் தெரிவித்த பிறகு விருப்பமான ஆறு மாத கால நீட்டிப்புடன் ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். ஒரு பொது ஊழியருக்கு எதிரான புகாரை விசாரிக்க லோக்பால் எந்த அனுமதியும் தேவையில்லை.
வழக்கு விசாரணை லோக்பால் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்யும் இயக்குனரின் தலைமையில் ஒரு வழக்கு விசாரணைப் பிரிவை அமைக்கலாம் (லோக்பால் பரிந்துரையின் பேரில் மத்திய அரசால் அமைக்கப்படும்). சோதனைகள் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட வேண்டும், எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
அரசு ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்ய எந்தவிதமான அனுமதியும் தேவையில்லை. லோக்பால் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்து, அறிக்கையின் நகலை தகுதிவாய்ந்த அதிகாரிக்கு அனுப்புகிறது. தமிழ்நாட்டில் 1983 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநிலம் முழுவதுமாக மொத்தம் 1,635 ஊழல், இலஞ்ச இலாவண்ய வழக்குகள் நிலுவையிலுள்ளது. இவற்றை விசாரணை நீதிமன்றங்கள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். தேவையில்லாமல் ஊழல் வழக்குகளைத் தள்ளி வைக்கக்கூடாது. ஊழல் வழக்குகளை நீண்ட காலம் தள்ளி வைத்திருப்பது அவற்றை நீர்த்துப் போகச் செய்துவிடும்.
அதோடு மட்டுமல்லாமல் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடும். மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தப்பி விடுவார்கள் என நீதிபதிகள் தங்களது வேதனையை சமீபத்தில் வெளிப்படுத்தினர். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியரைத் தண்டிக்க, இலஞ்சம் கேட்டதற்கான நேரடிச் சாட்சியம் அவசியமில்லை. மேலும், இலஞ்சப் புகாரளித்த நபர் இறந்து விட்டாலோ, பிறழ்சாட்சியாக மாறினாலோ பொது ஊழியருக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணையைச் சந்தர்ப்ப சூழ்நிலை உள்ளிட்ட பிற சாட்சியங்களைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென்றும் இலஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை விசாரணை நீதிமன்றங்கள் எந்தவிதக் கருணையும் காட்டாமல் மிகவும் கண்டிப்புடன் விசரணையை நடத்தவேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் இலஞ்சம் பெறுவது தொடர்பாக தற்போது அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றம்: அரசின் ஊழியர்கள் அனைவரும் அரசு சார்பாக மக்களுக்கு சேவை அளிப்பதற்காக நியமிக்கப்படுகின்றனர். அரசுத் துறை அலுவலகங்களில் மக்கள் பணிகளை மேற்கொள்ள வரும் போது அரசு ஊழியர்களில் சிலர் இலஞ்சம் கேட்பதாகப் புகார்கள் தொடர்ந்து எழுகிறது. இதற்காக அரசு ஊழல் தடுப்புச் சட்டத்தை வகுத்து, அதனை செயல்படுத்தியும் வருகிறது. . தமிழ்நாடு லோகாயுக்தா சட்டம், 2018 (சட்டம் எண்.33 2018):
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 ஆம் ஆண்டின் பிரிவு 63 க்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018 ஐ நிறைவேற்றியுள்ளது. அச் சட்டத்தின் கீழ் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சட்டம் 13.11.2018 அன்று G.O. (Ms) No.153, P&AR (N-SPL) Dept, 13.11.2018 நாள் அன்று நடைமுறைக்கு வந்தது. மத்திய சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு அரசு ஊழியர் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டி, அட்டவணை-V, (விதி 22, தமிழ்நாடு லோக்ஆயுக்தா விதிகள், 2018) இல் பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவத்தில் புகார் இருக்க வேண்டும். .16 of 2018 (பிரிவு 2(1)(d), தமிழ்நாடு லோக்ஆயுக்தா சட்டம் பார்க்கவும்) தமிழ்நாடு லோக்ஆயுக்தா சட்டத்தின் 12 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வகை அரசு ஊழியர்களுக்கு எதிராக புகார்களை அளிக்கலாம். 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 2-ஆம் பிரிவின் வரையறைக்கு உட்பட்ட பொது ஊழியர்களான மாநில அரசு ஊழியர்களான அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் இச் சட்டத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டவர்கள்.
ஊழல் குற்றச்சாட்டு மட்டுமின்றி ஊழலைத் தூண்டிவிடுதல், கையூட்டளித்தல், கையூட்டுப் பெறுதல், ஊழல் சதிச் செயலில் ஈடுபடுதல், பொது ஊழியரின் நடத்தை மற்றும் செயல் எதையும் இதன்மூலம் விசாரிக்க முடியும். ஆனால் ஏ, பி, சி, டி என எந்தப் பொது ஊழியர்கள் மீதான புகார் குறித்தும் முதல்நிலை விசாரணை நடத்தி அதன் பிறகு முடிவு செய்ய வேண்டும் லோக் ஆயுக்தாவில் அளிக்கப்படும் ஒரு புகார், குற்றம் நடைபெற்ற தேதியிலிருந்து 4 ஆண்டுகளுக்குள் கொடுக்கப்படவில்லை என்றால் அதன் மீது விசாரணை நடத்த நமது மாநில அளவில் முடியாது. ஆனால் மத்திய அரசு வெளியிட்ட லோக்பால் காலவரம்புக்கு உட்படாதது. உரிமையியல் நீதிமன்றங்கள் எதுவும் லோக் ஆயுக்தாவின் செயல்பாடுகளில் குறுக்கிடவே முடியாது. புகாருக்குள்ளான நபருக்குத் தேவையான சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும். லோக் ஆயுக்தா என்பது தன்னாட்சி அதிகாரம் பெற்ற, சுதந்திரமான அமைப்பாகும். இதில் அரசியல் தலையீடே கிடையாது. ஒருவர் மீது புகார் மனு அளித்தால் அதில் முகாந்திரம் இருக்கிறதா என்பதை 6 வாரத்துக்குள் முடிவு செய்து, 6 மாதங்களுக்குள் வழக்கை முடித்து விட வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை விசாரணை வரம்புக்குள் எல்லோருமே வருகிறார்கள். அவர்கள், மீது எந்தப் புகார் இருந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். இந்தச் சட்டம் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்பால் அம் மாநில முதல்வரான எடியூரப்பா பதவி விலக நேர்ந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து 2 முதல்வர்கள் மாறியது, எடியூரப்பா தனிக் கட்சி தொடங்கியது, பிறகு பாஜகவில் இணைந்தது என கர்நாடகத்தின் அரசியல் போக்கே மாறியதற்கு அந்த மாநில லோக் ஆயுக்தாவே காரணம்.லோக் ஆயுக்தா சட்டத்தின் கீழ் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது
கர்நாடக மாநிலத்தில் பெங்களுரூவில் குமாரசாமி முதல்வராக இருந்த காலத்தில் சுரங்கத்துறைச் செயலாளராக கங்காராம் படேரியா பணியாற்றியபோது, சுரங்க முறைகேட்டில் ஈடுபட்ட ஜந்தாகல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் கங்காராம் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி எழுந்த புகாரை சிறப்புப் புலணாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரித்த நிலையில், லோக் ஆயுக்தா சட்டத்தின் கீழ் அவர் அப்போது உடனடியாகக் கைது செய்யப்பட்டார். கைதான கங்காராம் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் சிறையிலடைக்கப்பட்டார்.
அவர் 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கங்காராம் படேரியா அப்போது கர்நாடகா மாநிலத்தில் முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றியவர்.
மேலும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி நடத்தப்பட்டு வந்த இவ் வழக்கில் முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் சில அதிகாரிகள் மீது சிறப்பு புலணாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டப்பிரிவு 2 (1) (E) ன் படி, ஊழல் தடுப்பு சட்டம், 1988 (மத்திய சட்டம் எண் 16/2018 ன்படி திருத்தியவாறு)ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமொன்றைப் புரிந்த அரசின் பொது ஊழியர்களுக்கெதிரான புகார்களை தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்ட விதிகள், 2018 ன் விதி 22 ன் படி அட்டவணை V ல் கண்ட படிவத்தில் அளிக்க வேண்டும். தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் அடங்கிய உள் பிரிவுகள்: (Various wings of Tamil Nadu Lokayukta)
1) நீதித்துறை பிரிவு (Judicial Wing): இது ஒரு பதிவாளரின் தலைமையின் கீழுள்ளது.
2) நிர்வாகப் பிரிவு (Administrative Wing): இது ஒரு செயலாளரின் தலைமையின் கீழுள்ளது.
3) விசாரணைப் பிரிவு (Inquiry Wing) இதில் ஒரு இயக்குநர் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையின் கீழுள்ளது.லோக் ஆயுக்தா அலுவலகம் அனைத்துப் பணி நாட்களிலும் பகல் பத்து மணி முதல் பிற்பகல் ஐந்து நாற்பத்தைந்து மணி வரை செயல்படும். பிற்பகல் ஒன்று பதினைந்து முதல் இரண்டு மணி வரை மதிய உணவு இடைவேளையாகும். நீதிமன்றம் போலவே பணி நேரங்களாகும். கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவுக்கு எதிரான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளை ரத்து செய்ய மறுத்து 2020-ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மேல்முறையீடு காரணமாக உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது,( பி.எஸ். எடியூரப்பா VS கர்நாடகா மாநிலம் ).
ஊழல் தடுப்புப் பிரிவை விமர்சித்த கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார் உச்சநீதிமன்றம்ஊழல் தடுப்புப் படை மீது கடும் விமர்சனங்களை முன் வைத்த நிலையில் வழக்கின் விசாரணையை அப்போது கூடுதலாக மூன்று நாட்கள் ஒத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்தேசுக்கு கோரிக்கை வைத்தது.
பெங்களூரில் நிலப் பிரச்சனையில் சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக ஒப்பந்த ஊழியர் சேத்தன் மற்றும் துணைத் தாசில்தார் மகேஷ் ஆகியோர் 5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இரண்டு பேரிடம் ஊழல் தடுப்புப் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது மாவட்ட. ஆட்சித் தலைவர் மஞ்சுநாத் மீதும் இலஞ்சப்புகார் எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் தாசில்தார் மகேஷ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சந்தேஷ் விசாரித்தார். இந்த விசாரணையின்போது நீதிபதி சந்தேஷ் ஊழல் தடுப்பு படையைக் குறை கூறினார். அதாவது வழக்கு விசாரணையை ஊழல் தடுப்பு படையினர் சரியாக மேற்கொள்ளவில்லை எனக்கூறிய நீதிபதி, ஊழல் தடுப்பு படையின் கூடுதல் டிஜிபி சீமந்த்குமார்சிங்கையும் கடிந்து கொண்டார். இது அப்போது சர்ச்சையானது. இதற்கிடையே பெங்களூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மஞ்சுநாத் பின்னர் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக மஞ்சுநாத் ஜாமின் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதி சந்தேஷ் விசாரித்து மறு தேதிக்கு ஒத்திவைத்தார். அப்போதும் சில கருத்துகளைக் கூறினார். அதில், ‛‛கர்நாடகா மாநில ஊழல் தடுப்புப் படைக்கு ஊழல் கறை படியாத நல்ல நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க உருவாக்கப்பட்ட ஊழல் தடுப்பு படைக்கு அதில் தலைமைச் செயலாளர் கவனம் செலுத்த வேண்டும் அந்த அதிகாரிகள் மீது நம்பகத்தன்மை இருக்க வேண்டும். மேலும் ஊழல் தடுப்பு படை குறித்து கருத்து தெரிவித்ததற்காக எனக்கே இடமாற்றல் எனும் மிரட்டல் வருகிறது. அதற்கு நான் பயப்படமாட்டேன்'' என்பன உள்ளிட்ட பல கருத்துகளை தெரிவித்தார்.
ஊழல் தடுப்பு பிரிவை விமர்சித்தார்.
இதற்கிடையே தான் ஊழல் தடுப்பு படையில் கூடுதல் டிஜிபி சீமந்த் குமார் சிங், நீதிபதி சந்தேசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உச்சநீதிமன்றத்தை நாடினார். அந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தியது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்தேஷ் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்றம் அப்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி மற்றும் ஹிமா கோலி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் லோக் ஆயுக்தா நடுவராகவும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை நீதித்துறை உறுப்பினர்களாகவும் நியமித்து தமிழ்நாடு அரசு அப்போது உத்தரவிட்டதுடன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோரை உறுப்பினர்களாக வும் நியமனம் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக லோக் ஆயுக்தா செயல்பட ஆரம்பித்தது. பலமுறை உச்ச நீதிமன்றம் அவகாசம் கொடுத்தும் லோக் ஆயுக்தாவுக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலிருந்த தமிழ்நாடு அரசு இருந்து வந்த நிலையில் இறுதியாக பிப்ரவரி மாதம், 11 ஆம் தேதி நடந்த விசாரணையில், 16 வார காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைப்பில் உறுப்பினர்களை நியமித்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள்