எட்டு வயதுச் சிறுவன் ரிஷி ஷிவ் பிரசன்னா
மூன்று ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை உருவாக்கி சாதனை செய்தார். இரண்டு வயதிலேயே வாசிக்கக் கற்றுக் கொண்ட ரிஷி ஷிவ் பிரசன்னா, மிக வேகமாக புத்தகங்களை வாசிக்கிறார். அதன் விளைவாக 5 வயதிலேயே ஹாரி பாட்டர் புத்தகத்தை வாசித்து முடித்தார்.இதனிடையே ரிஷி ஷிவ் பிரசன்னாவுக்கு IQ சோதனை செய்யப்பட்ட போது கிடைத்த மதிப்பெண் பலருக்கும் ஆச்சரியத்தை உறுவாக்கியது. உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் IQ 130 ஆக இருந்த நிலையில், ரிஷி ஷிவ் பிரசன்னாவின் மதிப்பெண் 180 ஆக வந்திருக்கிறதன் மூலம் அறிவுசார் சமூகம் எனும் மென்சாவில் உறுப்பினரானார்.
எட்டு வயதில் குடியரசுத் தலைவரிடம் பால புரஷ்கார் விருது பெற்ற ரிஷி ஷிவ் ஐன்ஸ்டீனை விட அதிக IQ லெவல். ரிஷி ஷிவ் பிரசன்னா சாதனை படைத்திருக்கிறார் 8 வயதாகும் ரிஷி ஷிவ் பிரசன்னா.சிறு வயதிலேயே மூன்று ஆப்களை டிசைன் செய்து
மத்திய அரசு சார்பில் புதுமை, சமூக சேவை, கல்வி, விளையாட்டு , கலை, வீரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பிரிவுகளில் சாதனைகள் படைக்கும் குழந்தைகளுக்கு பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிற வகையில் இந்தாண்டில் 8 வயதான சிறுவன் பெங்களூரு ரிஷி ஷிவ் பிரசன்னா பால் புரஸ்கார் விருது பெற்றுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் நேரடியாக பால் புரஸ்கார் விருதினை ரிஷி ஷிவ் பிரசன்னா பெற்றுள்ளார்.
மென்சா அமைப்பில் சேரும் போது ரிஷி ஷிவ் பிரசன்னாவுக்கு 4.5 வயது மட்டுமே. மென்சா அமைப்பு என்பது லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது தரப்படுத்தப்பட்ட IQவில் 98 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்காக மட்டுமே திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து 5 வயது முதல் கம்ப்யூட்டரில் கோடிங் கற்றுக்கொண்ட இவர் IQ Test App என்ற அப்ளிகேஷனையும் குழந்தைகளுக்காக டிசைன் செய்திருக்கிறார். அதன்பிறகு Countries of the world என்ற அப்ளிகேஷனையும் வெளியிட்டிருக்கிறார். பின்னர் 6 வயதான போது கொரோனா பரவலின் போது பெங்களூருவை சேர்ந்த மக்களுக்கு உதவ CHB என்ற அப்ளிகேஷனையும் கண்டுபிடித்திருக்கிறார்.எதிர்காலத்தில் விஞ்ஞானியாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், புத்தகங்களை வாசிப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.. இந்த நிலையில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கைகளில் இருந்து பால் புரஸ்கார் விருதினை ரிஷி ஷிவ் பிரசன்னா பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் ரிஷி ஷிவ் பிரசன்னா, அதில் அறிவியல் சார்ந்த செய்திகளை பகிர்ந்து வருகிறார்.
கருத்துகள்