இராணுவப் பொறியாளர் பிரிவின் பயிற்சி அதிகாரிகள், குடியரசுத்தலைவரை சந்தித்தனர்
ராணுவப் பொறியாளர் பிரிவின் பயிற்சி அதிகாரிகள், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜனவரி 5,2023) சந்தித்தனர்.
இவர்களிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்தியாவின் அமிர்த காலத்திலும், இந்தியா ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள காலத்திலும், நீங்கள் இந்த பிரிவில் இணைந்திருக்கிறீர்கள். புதிய கண்டுபிடிப்புகளுக்கும், தீர்வுகளுக்கும் உலகம் இந்தியாவை எதிர்நோக்கியிருக்கும் காலமாகும் இது. ராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோரக் காவல்படை மற்றும் ராணுவத்தில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும், பொறியியல் சார்ந்த உதவிகளுக்கு முக்கியமானவர்களாக இருப்பவர்கள் ராணுவ பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆவர் என்று கூறினார்.
கட்டுமானத்துறையும், அதற்கான தொழில்நுட்பங்களும், அதிக வேகமாக மாறி வருகின்றன என்று குறிப்பிட்ட குடியரசுத்தலைவர் பொருளாதார வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் இந்தத் துறை பெரும்பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். திட்ட நிர்வாகத்திற்கான நவீன கருவிகளைப் பயன்படுத்தி அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவது, ராணுவப் பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆழமான பங்களிப்பை செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார். தங்களின் எதிர்காலத் திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு, கருவிகள் பயன்பாடு போன்ற நவீனத் தொழில்நுட்பங்களைப் பயனப்டுத்துமாறு பொறியாளர்களைக் குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார். இது வடிவமைப்பில் கூடுதல் திறனுக்கு பயன்படுவதோடு கட்டுமானத்திற்கான கால அளவையும் குறைக்க உதவும் என்று அவர் கூறினார்.
குஜராத்தின் காந்திநகரில் முதன் முறையாக 3D பிரிண்டட் ஹவுஸ் கட்டுமானப் பணிகளை ராணுவப் பொறியியல் பிரிவுகள் நிறைவு செய்திருப்பது குறித்து அவர் மகிழ்ச்சித் தெரிவித்தார். குறைந்த செலவுடனான இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேதங்களை தவிர்ப்பதற்கு ராணுவப் பொறியாளர்கள் உதவ வேண்டும் என்று குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார்.
கருத்துகள்