ஈஷா யோகா மையம் சென்ற சுப ஸ்ரீ என்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்பு, காவல்துறையினர் தீவிர விசாரணை,
ஈஷா யோகா மைம் நடத்திய பயிற்சிக்குச் சென்று மாயமான பெண் 14 நாள்களுக்குப் பின் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி பழனிகுமார். பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் அவரது மனைவி சுபஶ்ரீயும் (வயது 34) ம் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார்.
அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையுமுள்ளது., கடந்த நான்காண்டுகளுக்கு முன் சுபஶ்ரீ சைலன்ஸ் ?... என்கிற யோகா பயிற்சியை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் மேற்கொண்டுள்ளார். மேலும்
அதைத்தொடர்ந்து மற்றொரு பயிற்சிக்காக டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி கோயமுத்தூர் ஈசா யோகா மையத்துக்கு வந்துள்ளார். அப்போது அவரது கணவர் காலை 6 மணியளவில் அவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியுடன் இந்த பயிற்சி முடிந்த நிலையில் அவரை மீண்டும் அழைத்து செல்ல அவரது கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையத்துக்கு அதிகாலை 6 மணிக்கே வந்து காத்திருந்தவர் முற்பகல் 11 மணியாகியும் சுபஶ்ரீ வராத நிலையில், அவரது செல்லுலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் அவருக்கு அழைப்பு செல்லாத நிலையில் ஈஷா யோகா மையத்தினர் காலையிலேயே பயிற்சியை அனைவரும் முடிந்துவிட்டுச் சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதனால் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சரி பார்த்தபோது காலையிலேயே ஈசா யோகா மையத்தின் மற்றொரு கேட் வழியே வெளியேறிய சுபஶ்ரீ, வாடகை காரில் லிப்ட் கேட்டு செம்மேடு பகுதிக்குச் சென்ற தகவல் தெரிந்தது.வேறொரு எண்ணிலிருந்து தனக்கு வந்த அழைப்பை பழனிக்குமார் தொடர்பு கொண்டு கேட்டபோது, “என் கணவரிடம் பேச வேண்டுமென பெண் ஒருவர் சொல்லிவிட்டு, அழைப்பை எடுக்கவில்லை எனக் கூறி சென்றுவிட்டார்” என அந்த எண்ணில் அப்போது பேசிய நபர் கூறியுள்ளார் என தகவல் கூறப்படும் நிலையில் .
அதன் பின்னர் சுபஶ்ரீயை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், பழனிக்குமார், மனைவி சுபஶ்ரீ மாயமானது குறித்து ஆலாந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காணொளிக் காட்சிகளை வைத்து காவல்துறையில் விசாரணையை தொடங்கினர். பயிற்சியின் போது கையில் செல்போன் மற்றும் உடமைகளுடன் சென்றிருந்த சுபஶ்ரீ, பயிற்சிக்கு பின் வெளியே வரும் போது கையில் எதுவுமில்லாமல் வெள்ளை நிரத்தில் துறவி போல உடை அணிந்து காணப்பட்டார்.
மேலும், அவர் சாலையில் ஓடுவது போலிருக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியதற்கிடையில், சுபஶ்ரீயை கண்டுபிடிக்க. ஆறு காவல்துறை ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படையும் அமைககப்பட்டது.
அவரது புகைப்படம் அனைத்துப் பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஈசா யோகா மையத்தின் பயிற்சிக்குச் சென்று மாயமான நிலையில் 14 நாள்களுக்கு பிறகு மாயமான பெண் சுபஸ்ரீ, நேற்று காலை செம்மேடு காந்திநகர் அருகிலுள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் அந்த உடலை மீட்டனர். இறந்தது சுபஸ்ரீ தான் என அவரது கணவர் மோதிரம் மற்றும் ஈசாவின் அடையாளம் அவரது கையில் அணிந்திருந்ததை வைத்து உறுதிப்படுத்தினார். சுபஸ்ரீயின் உடலை அங்கிருந்து மீட்டு, காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுபஸ்ரீ தற்கொலையா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா ?என்ற தெரியாத நிலையில் கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வகுப்பிற்குச் சென்ற பெண் காணாமல் போனது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , வழக்கு விசாரணையில் உள்ளதால் சில தகவல்களை வெளிப்படையாகக் கூற முடியாதெனவும் சனிக்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
கோயமுத்தூர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.. மிகவும் பலம் பொருந்திய நபராக கடந்த பத்து வருடத்தில் மாறிப்போன ஜாவா ஜக்கி என்ற ஜக்கி வாசுதேவ் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த எல்லாவற்றிலும் ஆசைப்பட்ட துறவி? இந்த நிகழ்வு அரசியல் தலையீடு இன்றி நடந்து உண்மை வெளிவந்தால் தமிழக அரசுக்கும் ,காவல்துறைக்கும் நற்பெயர் வரும் தற்போது தமிழகத்தில் போலிச் சாமியார்களின் நடவடிக்கைகள் பல வகையில் புதிது புதிதாக. வெளிவரும் நிலை உள்ளது. இது உண்மையான ஆன்மீக வாதிகளை கவலை கொள்ள வைக்கிறது.
கருத்துகள்