முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை விமர்சித்தாரென அவரது மகள் கருத்து

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை விமர்சித்தாரென அவரது மகள் அனிதா போஸ் பிஃபாஃப்


ஒரு தனியார்‌ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஜனவரி மாதம் 23 ஆம் தேதியன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களைப் போற்ற பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிட்டதற்காக வலதுசாரி அமைப்பை அவர் பாராட்டியதுடன் அவர் சில விஷயம் குறித்து  சாடினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126 வது பிறந்தநாளை கொல்கத்தாவிலுள்ள ஷஹீத் மினார் எனுமிடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் அதன் சர்சங்க சாலக் மோகன் பகவத் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். அதுகுறித்து குறிப்பிட்டவர், "என் தந்தை ஒரு பக்தியுள்ள ஹிந்துவாக இருந்தாலும், எல்லா மதங்களையும் மதித்து, அனைவரும் ஒன்றாக வாழ முடியும் என நம்பியவர். ஆர்எஸ்எஸ் அதை நம்புகிறதென்று நான் நினைக்கவில்லை, ”என அவர் கூறினார். “ஆர்எஸ்எஸ் அமைப்பு என் தந்தை நேதாஜியின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால், அது இந்தியாவுக்கு நல்லது. நேதாஜி மதச்சார்பின்மையை நம்பினார், ஆர்எஸ்எஸ் இந்து தேசியவாதக் கருத்துக்களை முன்வைக்க விரும்பினால், அது நேதாஜியின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாது. அதற்கு நேதாஜி பயன்படுத்தப்பட்டால் நான் பாராட்ட மாட்டேன்,” எனக் கூறினார். மேலும் 


“நிச்சயமாக அவர்கள் நேதாஜிக்கு வெறும் உதட்டளவில் பேசவில்லை என்று நினைக்கிறேன். அவருடைய 126 வது பிறந்தநாளை அவர்கள் கொண்டாடுவதை நான் மதிக்கிறேன். இந்தியத் துணைக்கண்டத்தின் நன்மைகளுக்கு, நேதாஜியின் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும்,” என தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் கூறினார் மேலும்  கூற்றுகளுக்கு பதிலளித்தார் மற்றும் நேதாஜி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை விமர்சித்தார் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்றும் கூறினார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவம் துவங்கிய பின்னர், அது வளர்ச்சி கண்ட நிலையில்    ஜப்பானிலிருந்து ஜெர்மனிக்குச் சென்றபோது விமான விபத்தில் ஜெர்மனியில் இறந்து போனார் என்பது தான்  பலருக்கும் தெரியும். அவர் மரணத்தில் என்ன மர்மம் இருக்கிறது ? என்பது குறித்து அரசும் தற்போது ஆய்வுகள் நடத்தும் நிலையில், அப்போதய காலத்தில் நேதாஜி ஒரு ஜப்பானியப் பெண்ணை மணந்தார்.


அந்தப் பெண்ணுக்கும் நேதாஜிக்கும் ஒரு மகள் பிறந்தார். அவர் தான் அனிதா போஸ் பிஃபாஃப் ஆவார், இந்தியாவில் அப்போது ஒரிசா என்றும் தற்போது  ஒடிசா  மாநிலத்திலுள்ள கட்டாக்கில், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  23 ஆம் நாள், வங்காளத்தின் , ஹிந்துக் குடும்பத்தில், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். அவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்காள மன்னர்களின் சேனாதிபதியாக அதாவது  படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுவழியாகும்


அவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவருக்கு 8 ஆண் பிள்ளைகளும், 6 பெண் பிள்ளைகளும் கொண்ட குடும்பத்தில், ஒன்பதாவதாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். தந்தை ஜானகிநாத் போஸ்,தாயார் பிரபாவதி தேவி, மனைவி எமிலி செங்கல், மகள் அனிதா போஸ் ஆவார்  1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியன்று தைவான் நாட்டில்  விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970 ஆம் ஆண்டில்  இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து வந்து 1985 ஆம் ஆண்டில் இறந்து விட்டதாகவும் பலவேறு வித கருத்துக்களும் .


1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14. ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை எந்தவிதமான  விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்த நாட்டு அரசு தெரிவித்திருப்பது, நேதாஜி சுபாஸ்சந்திர போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டிய நிலையில். இந்திய அரசால் நியமிக்கப்பட்டு அதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. இந்த நிலையில் தற்போது நாளை அவரது பிறந்தநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அதை முன்னெடுத்து  தற்போது நடந்த  ஒரு விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவரும் வீராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் தலைவருமான முன்னால் மத்திய சட்ட அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி  பேசிய போது "ஜெர்மனியில் ஒரு சர்வாதிகாரி ஹிட்லர். இத்தாலியில் ஒரு சர்வாதிகாரி முசோலினி இந்தியாவில் பாஜக வில் இருக்கிறவர்கள்  அத்தனை பேரும் ஹிட்லர், முசோலினியைப்  போலவே இருக்கிறார்கள்.நான் ஜனசங்கம் மூலம் அரசியலில் நுழைந்தேன், நானாஜி தேஷ்முக் மற்றும் தத்தோபந்த் தெங்கடி ஆகியோரால் நான் அரசியலில் வளர்ந்தேன். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் மாதவராவ் முலே என்னைப் பதவியில் உயர்த்தினார். ஏபிவி மற்றும் நரேந்திர மோடியால் பாஜக தற்போது பரப்பும் இந்த சித்தாந்த பாரம்பரியத்தை நான் கைவிட மாட்டேன்". எனக் குறிப்பிட்டார் குறிப்பாக டாக்டர் மோகன் பகவத் உடன் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி ராஜ்கோட்டில் நேற்று காலை ஹிந்து தர்ம ஆச்சார்யா சபாவிலிருக்கும் போது, ​​இருவரும் சந்தித்துப்  பேசினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...