ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் நேற்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 26 ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாமென இடைக்காலப் பொதுச்செயலாளராக கூறிவரும் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் ஒரு முதல் நிலவரம்
காங்கிரஸ் கட்சியில் யார் வேட்பாளர் என்பதைக் குறித்து திமுக ஸ்டாராங்காக முடிவெடுத்த பிறகு அதை தட்ட முடியாமல் ஏற்க வேண்டியாதாகிவிட்டது வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிலை, இடைக்காலத் தேர்தலை திமுக அரசின் கெளரவப் பிரச்சினையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்ப்பதன் விளைவிது.
தங்கள் அணி வெற்றி பெறுவதற்காக திமுக கையாளும் முதல் அஸ்திரம் இது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனே தனக்கு 74 வயதாகி உடல் நலனும் சரியில்லை. பல உடல் நலப் பிரச்சினைகள் இருப்பதால் நான் நிற்கவில்லை. என் இரண்டாவது மகனுக்கு வாய்ப்பு தாருங்களெனக் கேட்ட நிலையில், தற்போது அவர் வலுக்கட்டாயமாக களமிறக்கப்பட்டுள்ளார்.
மிகவும் பரிச்சயமான, துணிச்சலான, அதிரடிப் பேச்சுக்கு சொந்தக்காரர், ஈரோடு கிழக்குத் தொகுதியை எடுத்துக் கொண்டால், அங்கு மக்கள் ராஜன் என்ற காங்கிரஸ்காரர் தொகுதி மக்களிடம் நன்கு பெயரெடுத்த களச் செயற்பாட்டாளர் எனவும் பல ஆண்டுகளாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அயராது பணியாற்றி தொடர்ந்து வாய்ப்புக்காக முட்டி மோதி வருகிறார். நியாயப்படி அரசியலே வேண்டாம் என விலகி தொழில் செய்து கொண்டிருந்த இளைய மகனை வம்படியாக இழுத்து வந்து சீட் கேட்ட ஈ.வி.கே.எஸ்,இளங்கோவன் இளைஞரான மக்கள் ராஜனுக்கு தாருங்கள் எனக் கேட்டிருந்தால், அது காங்கிரஸின் எதிர்காலத்திற்கே சிறப்பாக இருக்கும்.
எந்த தொகுதி மக்களுக்கும் ஒரு நல்ல களச் செயற்பாட்டாளர் தான் தேவைப்படுவாரே அன்றி, வெற்று பேச்சு வீணரல்ல! உண்மையில் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களைக் கடந்து யதார்தத்தை தரிசிக்கும் மனநிலையில் அரசியல் தலைமைகளும் இல்லை. நல்ல தரமான மீடியாக்களும் இல்லை! நிச்சயமாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு பளபளக்கும் அட்டைக் கத்தி தானே அன்றி, செயல் வீரல்ல எனற வாதம் புறம்தள்ள முடியாது.
இந்த இடைத் தேர்தலுக்கு திமுக கடும் முஸ்தீபுகளைச் செய்யத் தொடங்கிவிட்டது. 33 பெருந்தலைகளைக் கொண்ட ஏகபப்ட்ட அமைச்சர்களை உள்ளடக்கிய – தேர்தல் பணிக்குழுவும் அறிவிக்கப்பட்ட நிலை,
கள்ளக் குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரமும், அதைத் தொடர்ந்து பள்ளிக் கூடத்தை தீவைத்து எரித்து, அதை தலித் இளைஞர்கள் மீது திசை திருப்பிய விவகாரம், வேங்கை வயல் குடி நீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் முத்துராஜா எதிர் ஆதிதிராவிட மோதல் போன்ற மக்கள் இதயங்களை உலுக்கும் எந்த விவகாரத்திலும் நீதியை நிலை நாட்ட, குற்றவாளிகளை தண்டிக்க களம் காணாத – குறைந்தபட்ச அக்கறை கூட இல்லையே என்ற விவாதமும் மக்கள் மத்தியில் வருகிறது, தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் ரோடு, ரோடாக வலம் வர உள்ளனர்.
தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை சந்திக்க தயாராகும் பலருக்கும் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே கிடையாதெனவும்,
ஏழையின் சொல் அம்பலத்தில் ஏறாது நிலை தான். ஊடகங்களுக்கு இனி நல்ல தீனி கிடைக்கும். தேர்தல் முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லை, நிதர்சனங்களை நினைத்துப் பார்க்க யாருக்கு இனி நேரம் இருக்கப் போகிறது பார்க்கலாம்.
கருத்துகள்