மக்களுக்காக ஒரு கட்சி என ஹிந்துஸ்தான் நேஷ்னல் கட்சியின் தமிழ்நாடு அமைப்பு உதயம், அதன் தமிழ்நாட்டின் தலைவராக பழனி என் .பத்மநாபன் நியமனம்.
மக்களுக்காக அவர்கள் உறுவாக்கிய கட்சியின் கொள்கை
அறிக்கையில் பாஜகவின் செயல் திட்டம் பல உள்ளது அது குறித்த விபரம் வருமாறு :-
'நமது தேசத்தின் முக்கிய வருமான ஆதாரம் விவசாயம் என்பதால், காலத்தின் தேவைக்கேற்ப விவசாயிகளுக்கு முதலிடம் கொடுக்கப்படும்.
விவசாயப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகிக்க சட்டம்,
நீர்நிலைகள் பாதுகாப்பு. திட்டவட்டமான சட்டம்
நம் நாட்டின் நதிகளை தெய்வமாகக் கருதி பாதுகாக்க ஒரு சட்டம்
நாடு முழுவதும் நீர்த்தேக்கங்கள் கட்ட நடவடிக்கை,
நாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் உறுதியாக இணைக்க நடவடிக்கை,
குடிநீர் வியாபாரத்தை தடை செய்யும் சட்டம்,
காடுகளைப் பாதுகாப்பதற்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள்,
உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை,
கடலோரப் பகுதிகளை பாதுகாக்க, மீனவர்களின் கோரிக்கையை ஏற்று உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும்.
நமது தேசம் இந்துஸ்தான் என்று அழைக்கப்படும்
அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம்
நமது தேசத்தின் கலாச்சாரங்கள், வரலாறுகள், இதிகாசங்கள், மற்றும் தொன்மையான அம்சங்களை உலக மக்களுக்கு மாற்றும் வகையில் அமைக்கவும், செயல்படவும் மேற்கொள்ளப்படும்.
நமது நாட்டு இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்லும் மோகத்தைப் போக்க, நம் நாட்டிலுள்ள தொழில், வேலைவாய்ப்பு, முன்னேற்றம், வருமானம் போன்ற பிரச்னைகளை மனதில் கொண்டு சட்டங்கள் உருவாக்கப்படும்.
மாற்று எரிபொருளை உருவாக்க இளம் விஞ்ஞானிகளை ஊக்குவித்தல்
நமது கோவில்களை அரசு நிர்வாகத்திடமிருந்து விடுவித்தல்,
நமது கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிரந்தர வருமானம் மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அந்தந்த கோவில் நிர்வாகக் குழுக்களுக்கு ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர்கள் குழு அமைக்க ஏற்பாடு.
அனைத்து துறைகளிலும் ஐம்பது சதவீத பெண்களின் பங்கேற்பு சட்டம்.
பொருளாதார அடிப்படையில் மட்டுமே அரசின் சலுகைகளை வழங்கச் சட்டம்
ஒரு குடிமகனுக்கு ஒரு வீடு என்பதை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டம்,
கோவில் வருமானத்தை பெரும்பான்மை சமூகத்தினரின் கல்வி மற்றும் மருத்துவத்திற்குப் பயன்படுத்த வழிவகை செய்யப்படும்
அனைத்து மக்களுக்கும் கல்வி இலவசம்,
ஜாதி, மத வேறுபாடின்றி தகுதியின் அடிப்படையில் மட்டுமே வாய்ப்புகள் அமையும்,
பட்டப்படிப்பு முடிந்தவுடன் இளைஞர்களுக்கு ஐந்து வருட கட்டாய இராணுவ சேவை,
வறுமை என்ற சொல்லைக்கூட அகராதியிலிருந்து மறையச் செய்வதே இதன் நோக்கம்
லஞ்சத்தை ஒழிக்க கடுமையான சட்டங்கள்,
இளைஞர்களை சுயதொழில் செய்து பொருளாதாரத் தன்னிறைவடைய ஊக்குவித்தல்,
அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் இலவசமாக ஆய்வகங்கள் அமைக்க வேண்டும்'. என ஆட்சி அதிகாரம் பெற்ற கட்சி தேர்தல் அறிக்கை போல அக் கட்சியின் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான கட்சி..மக்களுக்கான தொடர்புக்கு உள்ள தகவலில்
என். பத்மநாபன், மாநிலத் தலைவர் கட்சித் தலைமை அலுவலகம் முகவரி:- எண். 103/68, கல்லூரி சாலை, நங்கநல்லூர், சென்னை-600114, இந்தியா. தொலைபேசி +91 9952251882. ஆகும்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் கட்சிகளை கீழ்க்காணும் வகைகளில் பிரித்துள்ளதில். அவை;
தேசியக் கட்சிகள் எனவும், மாநிலக் கட்சிகள் எனவும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அடங்கும். ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமா? அதற்கு , மொத்த நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி இடங்களில் 2 சதவீத இடங்களில் அதாவது 11 இடங்கள், குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது நாடாளுமன்ற மக்களவை அல்லது மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீதம் வாக்குகள் பெறுவதோடு, 4 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அதற்கு தேசியக் கட்சி எனும் அங்கீகாரம் வழங்கப்படும். மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற. வேண்டுமானால்:-
மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். நாடாளுமன்ற
மக்களவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும். மாநில
சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தத் தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும்.
மாநிலத்தில் பதிவாகும் வாக்குகளில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேசியக் கட்சிகளாகவும், மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, வேறு சில கட்சிகள் தங்களை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன, அக்கட்சிகளில்.தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட தமிழர் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மாநில திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ் தேசியக் கட்சி, சமூக சமத்துவப் படை, சக்தி பாரத தேசம், தேசிய நலக் கட்சி, நமது திராவிட இயக்கம், மாநில கொங்கு பேரவை, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், காமராஜர் ஆதித்தனார் கழகம், ஹிந்துஸ்தான் தேசிய கட்சி, விஜய டி.ராஜேந்தரின் இலட்சியத் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 22 கட்சிகள் செயலற்ற கட்சிகளாகத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் முக்கியக் கட்சிகளாக
திராவிடர் கழகம் (தேர்தலில் பங்கெடுப்பதில்லை) திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), மற்றும் தற்போது ஏதிர்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக), தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக), அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மையம், இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா), தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ், தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ், காமராஜர் தேசிய காங்கிரஸ், அனைத்திந்திய பார்வார்டு பிளாக், அகில இந்திய பார்வர்டு பிளாக் (Information), ஜனநாயக பார்வர்டு பிளாக், தேசிய பார்வர்டு பிளாக், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), பகுஜன் சமாஜ் கட்சி, அப்துல் கலாம் இலட்சிய இந்தியா கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழக கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, மார்க்சிய பெரியரிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், புரட்சி பாரதம் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்து மக்கள் கட்சி, சிவ சேனா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்தியக் கிறித்துவ முன்னணிக் கழகம், இந்தியன் ஒன்றிய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்தியக் கிறித்துவ முன்னணி, புதிய தமிழகம், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், கொங்கு தேச மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, மக்கள் தமிழ் தேசம் கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, ஆகியவை அடங்கும்.
இப்படி உள்ள நிலையில் இந்தியத் திருநாட்டில் தற்போதய நிலையில் உயர் நீதிமன்றம் சில கருத்துக்களை சமீபத்தில் தெரிவித்துள்ளதில் 'ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்ய வேண்டுமா அதில் குறைந்தது 25 ஆயிரம் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்கிற யோசனை சரிதான். ஒரு சிலர், தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவரிடம் அதிருப்தியடைந்து தனது ஜாதி அல்லது மதம் சார்ந்த சிலரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு புதிய கட்சியைத் தொடங்குகிறார்கள். அத்தகைய கட்சிகளால் எந்தப் பயனும் உண்டா இல்லையா என்பதை தேர்தல் தான் முடிவு செய்யும். ஆகவே, உயர்நீதிமன்றத்தின் யோசனை வரவேற்கத்தக்கதே. இப்போது . யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியைத் தொடங்கலாம் என அனுமதி வழங்கியதன் விளைவாக அரசியல் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளின் எண்ணிக்கை அளவுக்கதிகமாகி விட்டன. அதன் விளைவாக ஏற்படுகின்ற குழப்பங்கள் மிக அதிகம். அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு உறுப்பினர் எண்ணிக்கையை உயர்நீதிமன்றம் நிர்ணயித்திருப்பது சரியானது. உறுப்பினர் எண்ணிக்கை வரையறையோடு, ஒருவர் ஒரு கட்சியில் மட்டுமே உறுப்பினராக இருக்க முடியும் என்பதையும் கட்டாயமாக்க வேண்டும். அவர் ஜாதி அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களில் என பலவாக இருக்கக்கூடாது. ஒருவரின் கட்சி சார்ந்த உறுப்பினர் அட்டை எண்ணுடன் அவரது ஆதார் எண்ணையும் இணைப்பதன் மூலம் அதைச் செய்ய முடியும். அதன் மூலம் சிறு சிறு கட்சிகள் நடத்தி சில தனி நபர்கள் அரசியல் வியாபாரம் செய்வதைத் தடுக்க முடியும். அரசியல் வியாபாரத்தை முடக்க இதுவே சிறந்த சரியான வழி. சில கட்சிகளில் லட்சக்கணக்கிலும், சில கட்சிகளில் கோடிக்கணக்கிலும் உறுப்பினர்கள் இருப்பதாக் கூறிக்கொள்ளும் கட்சிகளே தேர்தல் காலத்தில் மிகவும் சிரமப்படுகின்றன. அதற்கு மாநாடு கூட்டம் என்றால் கூட கொடி, தோரணங்கள் கட்டவும் ஆட்களை அழைத்து வரவும் கூட சில ஒப்பந்ததாரர்கள் வந்துவிட்டார்கள் இக்காலத்தில் கட்சிகளின் கொள்கை மற்றும் திட்டம் அக்கட்சியை சார்ந்த சில ஆயிரம் உறுப்பினர்களே உள்ள கட்சிகள் என்ன செய்ய முடியும்? ஒரு அரசியல் கட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு பணபலம் மட்டும் போதாது. தொண்டர் பலமும் தேவை. தேர்தல் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாத கட்சிகளைத் தடை செய்வதே நல்லது.என்ற கோரிக்கை வலுவாக வரும் சூழ்நிலையில்.
இது விரைவில் சட்டமாக்கவோ அல்லது திட்டமாகவோ வருவது கண்கூடு
பல சிறிய கட்சிகள், தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகளுடன் பேரம் பேசுவதையும், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நோட்டாவுடன் போட்டி போடும் சிறிய கட்சிகளால் வாக்குகள் சிதறி, தகுதியான பலர் வெற்றி வாய்ப்பைக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழந்திருக்கின்றனர். இது போன்ற கட்சிகள், தேர்தல்ஆணையத்துக்கும் இடையூறாக இருப்பதால் உயர்நீதிமன்றத்தின் யோசனை முற்றிலும் சரியே என்ற விவாதமும் தற்போது எழுகிறது .
குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதன் மூலம் "லெட்டர் பேட்' கட்சிகள் என்று சொல்லக்கூடிய மக்கள் செல்வாக்கு இல்லாத சிறிய கட்சிகள் உருவாவதைத் தடுக்க முடியும். இதனை சட்ட வடிவமாக்கினால், அவ்வப்போது, குறிப்பாக, தேர்தல் நேரத்தில் புற்றீசல் போல புதிது புதிதாக உதயமாகும் அரசியல் கட்சிகளுக்கு அணை போடலாம். எனப் பலரும்,
இந்த யோசனை ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் பிழைத்திருப்பதற்குக் காரணம், பலகட்சி அரசியல் முறைதான். பின்னர் இரு கட்சி ஆட்சி முறை என்பார்கள். அதன்பின் எதிர்க்கட்சிகள், நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு என்று கூறி தடை செய்வார்கள். ஆட்சியாளர்களுக்கு எதிரான குரல் யாருக்கும் கேட்காமலேயே போகும். நீதிமன்றங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுவது துரதிருஷ்டவசமானதெனச் சிலரும் கருத்துக்களைக் கூறிவரும் நிலையில். மற்றும் சிலர் இது நியாயமற்றது பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் வாக்காளர்கள் இருக்கும் நம் சமுதாயத்தில், கட்சியைப் பதிவு செய்ய இருபத்தைந்தாயிரம் பேராவது உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது நியாயமற்றது. இதனால் காலப்போக்கில் நல்ல கட்சிகள் தங்களது அங்கீகாரத்தையும் இழக்க நேரிடும். இப்போதே பணம் படைத்தவர்களால் மட்டுமே நமது ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட முடிகிறது. இந்த யோசனை ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்யும். ஊழல் மற்றும் வசூல் வேட்டைகளால்
சிறிய அரசியல் கட்சிகளால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உள்ளூரில் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டால் அக்கட்சியினர் அதில் தலையிட்டு இரு தரப்பினரிடமும் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கின்றனர். வணிகர்களிடம் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வசூல் வேட்டையில் நடத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகளிடம் பேரம் பேசி வாக்குகள் இல்லாத பல கட்சிகள் பணத்தைச் சுருட்டுகின்றனர். எனவே, அரசியல் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கைக்கு வரையறை தேவைதான். என்பது இன்னும் சிலர் கருத்து.
உயர்நீதிமன்ற யோசனை சரியே. அதிக உறுபினர்கள் இல்லாத சிறிய கட்சிகள், தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகளுக்கு வாக்குச் சாவடியிலும் வாக்கு எண்ணிக்கையின் போதும் மட்டுமே உதவுகின்றன. அதற்கான பலனையும் பெற்றுக் கொள்கின்றன. மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன் அளிக்காத, இந்த சின்னஞ்சிறு கட்சிகள், முறைகேடான பணப் பரிமாற்றத்திற்கும், முறைகேடான அரசியல் நடவடிக்கைகளுக்குமே பயன்படுகின்றன எனவும். உயர்நீதிமன்றத்தின் யோசனை சரியே.
மேலை நாடுகளைப் போன்று இரண்டு கட்சிகள் மட்டுமே என்பதை நம் நாட்டில் செயல்படுத்த இயலாது. ஒரே மாதிரியான கொள்கையைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியிலேயே பல பிரிவுகள் இருக்கின்றன. இதனால் கொள்கைக்காக வேறு வேறு கட்சி என்ற வாதம் அடிப்பட்டு போகிறது. கட்சித் தலைமையோடு முரண்பாடு ஏற்பட்டு புதிய கட்சியைத் தொடங்குவது இப்போது இயல்பாகி விட்டது. எனவே, உயர்நீதிமன்ற யோசனை சரியே.
சிறிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் போது நீண்டு விடும் வேட்பாளர் பட்டியலால் அரசுக்கு தேர்தல் நடைமுறைச் செலவுகள் கூடுகிறது. அப்படியே தேர்தலில் உதிரிக் கட்சிகள் வென்று ஒன்றிணைந்து ஆட்சியமைத்தாலும் நாளாவட்டத்தில் கருத்து வேற்றுமைகளால் ஆட்சிக் கவிழ்ப்பு, குதிரை பேரம், கட்சித் தாவல் போன்ற நடவடிக்கைகளால் ஜனநாயகமே கேலிக்குரியதாகிறது. எனவே, உயர்நீதிமன்றத்தின் யோசனை வரவேற்கத் தககதே, தேர்தல் காலத்தில் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து ஒன்றிரண்டு இடங்களை அளித்து அங்கீகாரம் பெற வைத்துவிடுகின்றன. இப்போது உயர்நீதிமன்றம் கூறியுள்ள யோசனை மிகப் பொருத்தமானது. இருபத்தையாயிரம் பேர் மட்டுமல்ல ஐம்பதாயிரம் உறுப்பினர்கள் ஒரு கட்சியின் அங்கீகாரத்திற்குத் தேவை என்றாலும் வரவேற்கத்தக்கதே.
ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்ய அதில் 25 ஆயிரம் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற யோசனை சரியே. சிலர் தமக்கு செல்வாக்கு இருப்பதாக நம்பி, ஆரம்பித்த கட்சிகள் பலவும் மக்களால் ஏற்றுக்கொள்ளாமல் போனதே கடந்த கால வரலாறு. அதில் மக்கள் விரும்பி ரசித்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் துவங்கிய கட்சியும் ஊருக்கு பத்து பேரை சேர்த்துக்கொண்டு, ஜாதி, மதம் போன்ற செல்வாக்குகளை நம்பித் தொடங்கப்படும் கட்சிகள் சமூகத்திற்குப் பெரும் தொல்லையே. எனவே, புதிய கட்சிப் பதிவுக்கு, உறுப்பினர் எண்ணிக்கையில் வரையறை தேவைதான். என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் இந்த வேளையில் ஹிந்துஸ்தான் தேசியக் கட்சியின் தலைவராக பழனி பத்மநாபன் பொறுப்பேற்ற நிலையில் அக் கட்சி வளர்ச்சி கண்டு பல கிளை அமைப்புகள் உறுவாகி தேர்தல் நோக்கி தமிழ்நாடு முழுவதும் பயணப்படுமா? அல்லது மடிப்பாக்கம், நங்கநல்லூர்,மயிலாப்பூர்,கும்பகோணம், என்ற வட்டத்தில் தான் இருக்குமா? என்பது வருங்காலத்தில் காணலாம். ஆக அக்கட்சியை வலுப்படுத்த பலதரப்பட்ட மக்கள் வரவு மட்டுமே தற்போது முக்கியம். அதோடு பணமும் தான் கட்சி வளர்ச்சிபெறத் தேவை. இந்த இரண்டும் தான் ஹிந்துஸ்தான் நேஷ்னல் கட்சியை வளர்க்கும். இதுவே இங்கு பொதுநீதி.
கருத்துகள்