இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததில்
பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் விசாவில், விமானத்தில் சென்னைக்கு வந்தவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததையடுத்து, பெண் சுங்க இலாக்கா அதிகாரிகள், இலங்கை பெண் பயணிகளை தனி அறைக்கு அழைத்து சென்று, தீவிரமாகச் சோதனையிட்டபோது, அவர்களுடைய ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 4 சிறிய பார்சல்களைக் கைப்பற்றினர். அதை பிரித்துப் பார்த்த போது, உள்ளே தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர். 4 பார்சல்களிலும் 859 கிராம் தங்கப் பசை இருந்தது. அதை பறிமுதல் செய்து, இரண்டு இலங்கைப் பெண் பயணிகளையும் கைது செய்தனர். அதேபோல், துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க இலாக்கா அதிகாரிகள் சோதனையிட்டபோது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை நிறுத்தி அவருடைய உடமைகளை சோதனையிட்ட பின்னர், தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த, இரண்டு பார்சல்களில் 378 கிராம் தங்க பசை மற்றும் 89 கிராம் தங்க செயின் இருந்ததை கண்டுபிடித்ததையடுத்து அதைப் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அந்தப் பயணியையும் கைது செய்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் ரூபாய் .66.5 லட்சம் மதிப்புடைய 1.33 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பேசப்படும் நிலை.
...
கருத்துகள்