இந்தியாவில் நதிப்பயண சுற்றுலா சிறக்க உலகின் மிக நீளமான நதிக் கப்பல் 'கங்கா விலாஸ்' வழி வகுக்கும் : திரு சர்பானந்தா சோனோவால்
வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் வரும் 13ந்தேதி தொடங்கிவைக்கப்படவுள்ள எம்வி கங்கா விலாஸ் என்னும் உலகின் மிக நீளமான நதிக் கப்பல், இந்தியாவின் நதிக் கப்பல் சுற்றுலாவின் புதிய யுகத்துக்கு வழிவகுக்கும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார். இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள 5 மாநிலங்களில் உள்ள 27 நதிகளில் 3,200 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை இந்த சொகுசு கப்பல் பயணிக்கும். இந்த சேவை தொடங்கப்படுவதன் மூலம் நதி பயணத்தின் பயன்படுத்தப்படாத இடங்களுக்கு வழி பிறக்கும் என்று திரு சோனோவால் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், நமது வளமான நதி அமைப்பு வழங்கும் அபரிமிதமான செல்வத்தை ஆராய்ந்து வருகிறோம். சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஊக்கமளிக்கும் முடிவுகளுடன் பலனைத் தந்துள்ளதால், உள்நாட்டு நீர்வழிகள் வழியாக நிலையான வளர்ச்சிக்கான இந்த பாதை மிகப்பெரிய ஊக்கத்தைப் பெற்றுள்ளது. எம்வி கங்கா விலாஸ் பயணமானது, நாட்டின் மிகப்பெரிய சுற்றுலாவைத் திறப்பதற்கான ஒரு படியாகும். இந்தியாவின் பல்லுயிர் பெருக்கம், ஆன்மீகம், கல்வி, நல்வாழ்வு, கலாச்சாரம் மற்றும் செழுமை ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்க முடியும் என்பதால், நமது வளமான பாரம்பரியம் உலக அரங்கில் மேலும் உயரும். காசியில் இருந்து சாரநாத் வரை, மஜூலியில் இருந்து மயோங் வரை, சுந்தர்பன்ஸ் முதல் காசிரங்கா வரை, இந்த பயணமானது வாழ்நாள் முழுவதும் ஒரு அனுபவத்தை அளிக்கும். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்த அற்புதமான முயற்சி, இந்தியாவில் நதிக் கப்பல் சுற்றுலாவில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும், கொள்கை மற்றும் நடைமுறையின் மூலமாகவும் கிழக்குப் பகுதியைச் செயல்படுத்துவதற்கான நமது அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
எம்வி கங்கா விலாஸ் கப்பல், நாட்டின் சிறந்தவற்றை உலகுக்குக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய இடங்கள், தேசிய பூங்காக்கள், நதி தொடர்ச்சி மலைகள் மற்றும் பீகாரில் உள்ள பாட்னா, ஜார்கண்டில் உள்ள சாஹிப்கஞ்ச், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா, வங்காளதேசத்தின் டாக்கா மற்றும் அஸ்ஸாமின் குவாஹாட்டி போன்ற முக்கிய நகரங்கள் உட்பட 50 சுற்றுலா தலங்களுக்கு 51 நாட்கள் பயண திட்டமிடப்பட்டுள்ளது. எம்வி கங்கா விலாஸ் கப்பல் 62 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்டதாகும். இது மூன்று தளங்கள், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் திறன் கொண்ட 18 அறைகளைக் கொண்டுள்ளது, சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்கமுடியாத மற்றும் ஆடம்பரமான அனுபவத்தை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. மாசு இல்லாத வழிமுறைகள் மற்றும் சத்தத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. கங்கா விலாஸின் முதல் பயணமானது சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த 32 சுற்றுலாப் பயணிகளுடன் வாரணாசியிலிருந்து திப்ருகர் வரை மேற்கொள்ளப்படும். கங்கா விலாஸ் கப்பல் திப்ருகருக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நாள் மார்ச் மாதமாகும்
கருத்துகள்