தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து
தெரிவித்துள்ளார். பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகிறோம். பொங்கல் திருநாளில் நமது வீரத்தை ஜல்லிக்கட்டு விழாவாக கொண்டாடுகிறோம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இச் சூழ்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்க்க தமிழ்நாடு ஆளுநர் வர உள்ளதாகத் தகவல் உள்ள சூழல் குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்.
தமிழ்நாட்டில் நாளை ஜனவரி மாதம்15 ஆம் தேதி முதல் பொங்கல் விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண உலகெங்குமுள்ள சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆளுநர் நேரில் பார்க்க வர உள்ளதாகத் தகவல் வெளியானது.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தினை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் ஆய்வு செய்தனர்..பின் செய்தியாளர்களிடம் பேசிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் 'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலோசனை குழு முன்னிலையில் நடைபெறுகிறது.. மதுரை மாவட்டத்தின் மூன்று ஊர்களிலும் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமலும் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பாக விளையாடிய காளைகளின் பட்டியல்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தக் காளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. காளைகள் பதிவு ஆன்லைன் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியான மாடுகள் பங்கேற்க வழிவகை செய்து பரிசு வழங்குவதில் எந்த ஒரு குளறுபடியும் இருந்ததில்லை.இனி வருங்காலங்களிலும் இருக்காது. கடந்த ஆட்சியில் நடந்த குளறுபடி தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரை நீதிமன்றம் அழைத்தனர். ஆளுநர் ஜல்லிக்கட்டு பார்வையிட வந்தால் அவருக்குத் தேவையான முழு பாதுகாப்பை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் வழங்கும்' என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஆளுநர் டெல்லியில் இருப்பதால்.. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்க்க வர வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது.
கருத்துகள்