முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வன்னியர்கள் தனி இடஒதுக்கீடு குறித்த ஒரு பொதுவான பார்வை.

வன்னியர்கள் 10.5சதவீதம்


உள்ஒதுக்கீடு பெறப்பட்ட வழிமுறை.



1989 ஆம் ஆண்டில் 108 ஜாதிகளை இணைத்து 20 சதவீதம் MBC இட ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தில்   அப்போது முதல்வர் டாக்டர்  கலைஞர் மு.கருணாநிதி யுடன்  வன்னியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில்  கையெழுத்திட்டு வாங்கிக் கொடுத்தவர் சி என் ஆர்


பிறகு அந்த 20 சதவீதம் எம்பிசி இட ஒதுக்கீட்டில் வன்னிய சமுதாயத்துக்கு  சரியான பங்கீடு கிடைக்கவில்லை என்று 1990 ஆம் ஆண்டிலிருந்து  லிருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஆட்சியாளர்களைக் கேட்டு அது நடக்கவில்லை என்றதும் 2009 ஆம் ஆண்டில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎன்ஆர் 15 சதவீதம் உள் ஒதுக்கீடு 20 சதவீதத்திலிருந்து கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.  2012 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்றார்.அந்த வெற்றியை நடைமுறைப்படுத்த. 


2010 ஆம் ஆண்டில் சிஎன்ஆர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  W.P. No. 14025 of 2010. 


 பலமுறை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இறுதியாக வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.  2012 ஆம் ஆண்டில் உள்ஒதுகீடு செயல்படுத்த நீதிமன்ற ஆணையும் பெற்றார். 





அந்த நீதிமன்ற ஆணையின் படி, 2012 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அரசாணை எண் GO MS No.35 பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையைக் கேட்டு  வெளியிட்டது.  



 2012. அம் அண்டில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் இதற்கு முன் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம்  உள்ஒதுக்கீடும் அருந்ததியர்களுக்கு 3.0 சதவீதம் உள் ஒதுக்கீடும் கொடுத்த வழிமுறை தரவுகளின் அடிப்படையில் 10.5 சதவீதம் பரிந்துரை செய்தது.



அதைச் செயல்படுத்தாத தமிழ்நாடு  அரசை எதிர்த்து சிஎன்ஆர் 2015 ஆம் ஆண்டில் நீதிமன்றம் சென்று முறையிட்டு 30 நாட்களுக்குள் செயல்படுத்துமாறு  சென்னை உயர்நீதிமன்றத்தில்  இறுதியானையைப் பெற்றார்.




2011 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை அதிமுக அரசுக்கு ஆதரவு கொடுத்தவர் சி என் ஆர். அந்த ஆதரவுக் காலத்தில் இத்தனை வழிமுறைகளையும் சட்ட போராட்டத்தில் மூலம் சிஎன்ஆர் அதிமுக அரசைச் செய்ய வைத்தார். பிறகு அன்றைய முதலமைச்சர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா  இறந்ததால் 10.5 சதவீதம்  உள் ஒதுக்கீடு கிடப்பில் போடப்பட்டது. பின்  எடப்பாடி கே.பழனிச்சாமி  மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு வன்னியர் பொதுச்சொத்து வாரியத்துக்கான 41 வது சட்டத்தை குடியரசுத்தலைவர்  கையெழுத்துடன் ஒப்புதல் பெற்று சட்டப் போராட்டத்தின் மூலம் சட்டமாக்கியவர் சிஎன்ஆர் 2019- அலாம் ஆண்டில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.  இராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு சி என் ஆர் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.





 பிறகு 2020 ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியில் மிகப்பெரிய உண்ணாவிரதப்  போராட்டத்தை சிஎன்ஆர் தலைமையில் நடத்தினார். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  1ஆம் தேதி மருத்துவர் ச் ராமதாஸ் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் அறிவித்தார்.  20 சதவீதம்  தனி ஒதுக்கீடு சாத்தியமில்லை என்றதும்  உள் ஒதுக்கிட வேண்டும் என்றார்.  





2021 ஆம் ஆண்டு 3 ஆம் தேதியில் தமிழ்நாடு அரசுக்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் சி என் ஆர் வழக்குத் தொடுத்தார். 

பிப்ரவரி மாதம்  26 ஆம் தேதியில் 10.5 சதவீதம்  உள்இடஒதுக்கீடு அதிமுக அரசால் தேர்தல் அறிவிப்புக்கு முன் கொடுக்கப்பட்டது.பின்  திமுக ஆட்சியில் வந்ததும் 10.5 சதவீதம் நடைமுறைப்படுத்த சட்டத்தை சட்டமன்றத்தில் 2021-ஆம் ஆண்டில்  நிறைவேற்றியது.

சகோதர சமுதாயத்தின் தவறான புரிதலால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு மார்ச்சில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஏழு காரணங்களைச் சொல்லி தடையுத்தரவு பிறப்பித்து.

10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்குத் தடை நீதிமன்றம்_கேள்வி.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடைவிதித்த 184 பக்கத் தீர்ப்பில் கேட்ட கேள்வி, ஏன் CN.Ramamurthy Vs Tamilmadu govt 2015 உள்ஒதுக்கீட்டு ஆவணத்தை இடஒதுக்கீடு கொடுத்தபோது மறைத்தீர்கள் எனக் கேட்டுள்ளது. அதனால் 10.5 சதவீதம் கொடுத்தது உள்நோக்கத்திற்காக என்றது.

அதன் பிறகு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வாதிட்டது. அந்த வாதத்தில் சிஎன்ஆர் கொடுத்த சட்ட ஆவணங்களை வாதிட்டு அதனுடன் பொதுவான வாதங்களை அதிகமாக வைத்தது.

பிறகு உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பில்,  மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை தடை உத்தரவுக்காக சொன்ன ஏழு காரணங்களில் ஆறு காரணங்கள் தவறென்று உச்சநீதிமன்றம் சொல்லி நீக்கியது. ஒரே ஒரு காரணம் மட்டும் சரி என்றும் அந்த காரணத்தின் சரியான தரவுகள் ஏதாவது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  சமுதாய பயன்படுத்த சரியான தரவுகளை வைத்து மீண்டும் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுவரை உள் ஒதுக்கீடு செயல்படுத்தப்பட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. 

இதன் பிறகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  சிஎன்ஆரிடம் 10.5 சதவீதத்துக்கான அனைத்து சட்டப் போராட்ட ஆவணங்களையும் மேலும் உரிய தரவுகளையும் ஒரு புத்தகமாகக் கேட்டிருந்தார். 

அனைத்து சட்ட போராட்ட ஆவணங்களையும் தரவுகளையும் ஒரு புத்தகமாக தமிழ்நாடு  முதல்வரிடம் அக்டோபர் மாதம் 2022- ஆம் ஆண்டில் 10.5 சதவீதம்  மீண்டும் நடைமுறைப்படுத்த வழங்கினார். 

இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுக்கு மூன்று மாதங்களுக்குள் உரிய தரவுகளை சரி செய்து 10.5 சதவீதம்   நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார். 

சிஎன்ஆர் சமூகநீதிபடி அனைத்து சமுதாயமும் பாதிக்காத வண்ணம் சட்டப் போராட்டத்தை கையில் எடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து  2010 ஆமத ஆண்டிலிருந்து இன்றுவரை போராடுகிறார். 

 சகோதர சமுதாயம் இந்த உண்மையான போராட்டத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றும்  அனைத்து சகோதர சமுதாயத்துடனும் இணக்கமாக வாழ வேண்டும் என்பது தான் சிஎன்ஆரின்  தலையாய கொள்கையாகும். 

அதனால் தான் இன்று வரை சிஎன்ஆர் அறிவாயுதம் ஏந்திப் போராடுகிறார்.என் கருத்தை முன் வைத்த நிலையில்  இவர்களைப் போலவே மற்ற பெரிய சமுதாயத்தில் உள்ள அனைவரும் தனி இடஒதுக்கீட கேட்டால் என்ன நிலைமை வரும் என்பதற்கு அவர்களே பதில் கூறினால் சரியாக இருக்கும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பீகாரில் துவங்கியது போல தமீழ் நாட்டில் துவங்க வேண்டும் என்பதே இங்குள்ள பொதுநீதி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...