வருமான வரித்துறை:
இ - வெரிஃபிகேஷன் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
வருமானவரித்துறை (புலனாய்வு மற்றும் குற்றவியல் விசாரணைப் பிரிவு) சென்னை மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சில் இணைந்து, சென்னை மண்டலத்தின் பட்டயக் கணக்காளர்களுக்கு 03.01.2023 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இ - வெரிஃபிகேஷன் திட்டம் 2021, மற்றும் அதிக பண மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகள் தொடர்பாக தாக்கல் செய்யப் படவேண்டிய படிவங்கள் குறித்த கலந்தாய்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் பி.வி.பிரதீப் குமார், வருமான வரி இயக்குனர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்வு காணொலிக் காட்சி மூலமும் தென்னிந்திய பட்டயக் கணக்காளர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.
கருத்துகள்