மத்திய இரயில்வே அமைச்சகத்தின் இரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. இதற்கு முன்பு ரயில்வே வாரியத்தின் உள்கட்டமைப்பு உறுப்பினராக திரு அனில் குமார் லஹோடி பதவி வகித்து வந்தார்.
1984-ஆம் வருட இந்திய ரயில்வே பொறியாளர்கள் பிரிவைச் சேர்ந்த திரு லஹோடி, 36 வருட பணி காலத்தில் மத்திய, வடக்கு, மத்திய வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மேற்கு ரயில்வேகளிலும், ரயில்வே வாரியத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்தார். மேற்கு ரயில்வேயின் பொதுமேளாளராகவும், மேற்கு ரயில்வேயின் பொது மேலாளராகவும் பல மாத காலம் அவர் பணியாற்றினார். பொது மேலாளராக அவர் பதவி வகித்த போது அதிக சரக்குகளை கையாண்டு ரயில்வே துறை சாதனைபடைத்ததோடு, அதிக எண்ணிக்கையிலான கிசான் ரயில்களும் இயங்கின. ரயில்வேயின் வருவாயை அதிகரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளையும் அப்போது அவர் மேற்கொண்டார்
கருத்துகள்