சென்னை துறைமுகம் ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் துறைமுகக் கழிவுகளை அகற்றி சாதனை
சென்னை துறைமுகம், கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதி துறைமுகக் கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொண்டது. எம்.வி. ஃபேன் அம்பர் கப்பல் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த தூய்மைப் பணியில் மொத்தம் 11,486 டன் துறைமுகக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் அதிகளவில் துறைமுகக் கழிவுகள் அகற்றப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 13.01.2017 அன்று எம்.வி குளோரியஸ் சன்ஷைன் கப்பல் உதவியுடன் 9ஆயிரத்து 300 டன் துறைமுகக் கழிவுகள் அகற்றப்பட்டு ஏற்கனவே படைக்கப்பட்ட சாதனை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
இந்த சாதனைக்கு வழிவகுத்த துறைமுக அதிகாரிகள் மற்றும் இறக்குமதி நிறுவனங்களுக்கு துறைமுக ஆணைய தலைவர் திரு சுனில் பலிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் துறைமுக ஆணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்