குடியரசுத் தலைவர் பிப்ரவரி 12 முதல் 13 வரை உத்தரப் பிரதேசத்தில் பயணம் மேற்கோள்கிறார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2023 பிப்ரவரி 12 முதல் 13 வரை உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார்.
பிப்ரவரி 12, 2023 அன்று, லக்னோவில் நடைபெறும் உத்தரப்பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு-2023-ன் நிறைவு அமர்வில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்கிறார். அன்று மாலை, லக்னோவில் உள்ள லோக் பவனில் உத்தரபிரதேச அரசு அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் நடத்தும் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
பிப்ரவரி 13, 2023 அன்று, லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார். தில்லி திரும்புவதற்கு முன், அவர் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்வதுடன் வாரணாசியில் கங்கா ஆரத்தியில் கலந்து கொள்ளவுள்ளார்.
கருத்துகள்