பயணத்திற்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்ட.63 பயணிகள் கடந்த ஆண்டு விமானத்தில் பயணம் செய்யத் தடை
உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் கடந்த ஓராண்டில் 63 பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது
பயணத்திற்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்ட மற்றும் தொந்தரவு செய்ததற்காக கடந்த ஓராண்டில் 63 பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானப் பயணிகள் முகக்கவசம் அணியாதவர்கள் அல்லது விமான ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் ஆவார்கள்.
விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநராக கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
26.11.2022 அன்று, நியுயார்கில் இருந்து புதுதில்லி வந்த AI-102 விமானம்
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநருக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
விமான பைலட்டின் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
6.12.2022 அன்று, பாரிஸிலிருந்து புதுதில்லி வந்த விமானம் AI-142 விமானம்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
இத்தகவலை விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜென்ரல் வி கே. சிங் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.
கருத்துகள்