முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதானிக்கு நெருக்கடி. சௌகிதாருக்குத் தலைவலி, மக்கள் பணம் ஸ்வாகா!. .

அதானிக்கு நெருக்கடி.‌ சௌகிதாருக்குத்  தலைவலி.  மக்கள் பணம் ஸ்வாகா!. 


  அதானி குழுமத்தின் பொருளாதாரக் குற்றங்களை  விசாரணை செய்து நாட்டுக்கும், மக்களுக்கும் தீங்கிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவும், மிகச் சாதாரண நபர் இதில் தவறு செய்திருந்தால்  அவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு கைது செய்து வழக்கு பதிவு செய்திருப்பர்கள் என்பதே ஏல்லோரும் அறிந்த உண்மை  உண்மை.‌  பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில்   அதானி குழுமம் பாதுக்காப்புக்கென்று ஏதேனும் தனி சட்டம் உள்ளதா என பல அரசியல் தலைவர்களும்,விமர்சகர்களும் கேள்வியை முன்வைக்கும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் எழும் சந்தேகங்கள் பல,

பங்கு மார்க்கெட் ஒரு வியாபார நிலையில்லா விளையாட்டு 


 நிறுவனம் தரமாக லாபமாக நடந்தால் அதன் பங்குகளைவைத்து நடத்திய விளையாட்டுகள் மறுவிளையாட்டுக்களால்  ஏற்படும் சரிவுகள் அனைத்தும் நிரந்தரமல்ல.   சமாளிக்க முடியும் .

அந்தச் சரிவுகளை எதிர்பார்த்துத் தான் யாருமே பங்குசய சந்தையில் விளையாடுவார்கள் , அந்த முன்னெச்சரிக்கையைச் செய்திருக்காவிட்டால் அது வியாபாரிகளின் சுய பொறுப்பு , அந்த வகையில் 

ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம். உலக அளவில் பொருளாதார சரிவு மற்றும் வளர்ச்சி மதிப்பீடு  அதன் இலக்கு,  அதானி நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தி 88 வினாக்களை முன் வைத்திருக்கிறது, அதற்கு அந்த நிறுவனம்.   பதிலும் சொல்லி இருக்கிறார்கள் .

அதில் சில 

அதானியின் நிறுவனங்களின் மதிப்பு 139.3 மடங்காக உயர்த்திக் காட்ட பட்டிருக்கிறது,  .

அவர்களது கடன்கள் சொத்துக்களை விட அதிகமாகிறது, .

பங்குகள் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது .அது சுமையாகும்,


பல ஊழியர்கள் மேல் வழக்குகள், குற்றசாட்டுகள், வரி ஏய்ப்பு, ஊழல் புகார்கள் நிலுவையில் உள்ளன,

பொது நிறுவனத்தில் மக்களின் நிலைப்பாடு 25 சதம் பங்கில்லாமல், ஷெல் கம்பெனிகள்  மூலம்  அதானியே அதில் நிறைய பங்குகளை வைத்திருக்கிறார் .இது எதிர்கால தவறுகளுக்கு வழி  வகுக்கும், 

பல்வேறுவழிகளில் கிட்டத்தட்ட 74 சதவீதம்  பங்குகளை அதானியே வைத்திருக்கிறார், 

கேத்தன் பரேக் போன்ற பங்கு சந்தை மாயாவிகளை வைத்து மேனிப்புலேட்  செய்து தன்  பங்குகளின் விலையை உச்சத்தில் வைக்கிறார்,  . 

அதானியின் க்ரீன் எனர்ஜி பங்குகள் விவகாரம் செபி யால்  விசாரிக்கப்பட்டு பிரச்சனைகளைச் சந்தித்ததுள்ளது, .


அதற்கு அதானியின் நிறுவனம் 413 பக்கத்தில் பதில்களைக்  கொடுத்துள்ளது.அதன் சுருக்கம்  :

"எங்கள் நிறுவனம் எந்த பித்தலாட்டமும் செய்யவில்லை.ஆதாரமில்லாமல் நிறுவன ஊழியர்களை தவறாக சித்தரிப்பது உள்நோக்கம் கொண்டதைப்போலுள்ளது  .எங்கள்  நிறுவன மதிப்புகளை மிகப்பெரிய  6 ஆடிட்டர்கள் தான் தணிக்கை செய்கின்றனர் . அவர்கள் அறிக்கைப் படிதான் மதிப்புகள் முடிவு செய்யப்பட்டன . 

ஹிண்டன் பர்க் கொடுத்துள்ள விபரங்கள் எங்கும் சென்று தேடி  எடுக்கப்படவில்லை .அவர்கள் கொடுத்த 88 சங்கதிகளில் 65 நாங்களே எங்கள் ப்ரொபைல் விபரத்தில் கொடுத்துள்ளதுதான் .



இதுவரை யாருக்கும் -வரிகள் உட்பட -நாங்கள் பாக்கி வைத்திருக்கவில்லை .அதுவே எங்கள்  நிறுவனங்களின்  தரத்தைச் சொல்லும்.

பொருளாதார வல்லுனர்கள் வியாபார இழுப்புகள்  சொல்லும் தீர்ப்பு :

இந்த குற்றசாட்டுகள் சரியான நேரத்தில் அதானியின் புதிய எப்பிஓ வில்  வரும் நேரத்தில் வேண்டுமென்றே அதை சிதைக்கும் நோக்கத்தோடு வெளியிட்டுட்டிருப்பதாகத் தெரிகிறது .

யாருக்கும் எந்தவிதமான பாக்கியும் வைத்திருக்காததோடு 2016 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு  வரை அதானி குழும நிறுவனத்தின் வங்கி திருப்பிச் செலுத்தும் விகிதம் ஸ்திரமாக இருப்பதால் நிறுவனங்களின் நிலை அசைக்க முடியாதது .

எல் ஐ சி அதானி நிறுவனத்தில் முதலீடு  செய்த  முதலீட்டை எப்பொழுதோ திரும்ப பெற்றுவிட்டது . இப்பொழுதிருப்பது போனஸ்.         எல் ஐ சி  என்ற மாபெரும் நிறுவனமும் சரி அதானி எனும்  உலகப் பணக்காரரால் நிர்வகிக்கப்படும் இணை நிறுவனமும் அசையாது .

 உடனடி உதாரணமாக ஏற்கனவே பெரும் தொகையை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அரபு நிறுவனம் ஓன்று இந்த  விவகாரத்துக்குப்பின் மறுபடியும் பல ஆயிரம் கோடி நேற்று முதலீடு செய்திருக்கிறது 

அதன் பின்னர்  அதானியின் பங்குகள் 100 க்கு மேல் ஓவர் சப்ஸ்கிரைபாகி விட்டது .

இறுதியாக,  உலகத்தாருக்கு நியாயம் சொல்லும் ஹிடேன்பர்க்  நிறுவனம் தங்கள் அறிக்கைகள் பலமான ஆராச்சிக்குப்பிறகு வெளியிடப்படுவதாகவும் இதில் தாங்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவம் பெற்றவர்கள் என்று சொல்கிறது .


இதைச் சுட்டிக்காட்டிய ஒரு பொருளாதார நிபுணர்  

"  2017. ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தான் தலைமுறை தலைமுறையாக அனுபவம் வாய்ந்ததா ?  "  என்று கேட்டிருக்கிறார் .ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டால் சரிவைச் சந்திக்கும்

அதானி குழும நிறுவனங்களை நோக்கி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அடுத்தடுத்து வீசியிருக்கும் தகவல்கள் , இந்தியாவைத் தாண்டி உலக அளவில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களையும் கதிகலக்கியுள்ளது !

பாரதிய ஜனதா கட்சியின் கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் அதானியின் நிறுவனங்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி மிகப்பெரியது, உலகின் முதல் பெரிய பணக்காரர் என்கிற இடத்தையும் கூடப் பிடித்துவிட்டார் அதானி.

இந்த நிலையில், 'பங்குச் சந்தையில் பலவிதமான முறைகேடுகளை நடத்தியதன் மூலமாகவே அதானி குழுமம்  உச்சபட்ச வளர்ச்சியை அடைந்துள்ளது. அரசாங்கத்திலிருக்கும் செல்வாக்கு காரணமாக, பங்குச் சந்தைகளை கண்காணிக்கும் செபி அமைப்பும், அதானியின் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது' என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளால் அதானி குழும நிறுவனங்கள் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான சரிவைச் சந்தித்ததனால் அதானியின் சொத்து மதிப்பு  சுமார் ரூ.1.8 லட்சம் கோடி அளவுக்குச் சரிந்தததையடுத்து உலகின்  பணக்காரர்கள் பட்டியலில் 3 -ஆம் இடத்திலிருந்தவர் 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டு பின் 11-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள தற்போது 15 ஐத் தொடும் நிலை உள்ளதாகத் தெரிகிறது.

 கௌதம் அதானியிண் நிறுவனம்  குறித்து தகவல் தந்த  அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனம் தான் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம், கடந்த 24-ஆம் தேதி வெளியிட்ட 106 பக்க அறிக்கை தான் பங்குச் சந்தைகளையே உலுக்கியுள்ளது.

'அதானி குழும நிறுவனப் பங்குகளில் அதானி குடும்பத்தினர் தான் அதிகளவிலான பங்குகளை வைத்துள்ளனர். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனத்தில் 75 சதவிகிதப் பங்குகள் மட்டுமே அந்நிறுவனத்தின் புரமோட்டர்கள் வசம் இருந்திருக்க வேண்டும். 25 சதவிகிதம் பொது முதலீட்டாளர்களிடம் இருக்கவேண்டும்.

ஆனால், அதானி நிறுவனங்களில் எஃப்ஐஐ (வெளிநாட்டு முதலீடு) மூலமாக வெளியிலிருந்து செய்யப்பட்ட முதலீடும் அதானி குடும்பத்தினருக்குச் சொந்தமான மோசடி நிறுவனங்கள் மூலமாகவே செய்யப்பட்டிருக்கின்றதன் காரணமாக 75 சதவிகிதம் என்கிற அளவுக்கும் கூடுதலாக அதானி குடும்பத்தினர் வசம் பங்குகள் இருக்கின்றன. இது, 13- முதல் 16 சதவிகிதம் வரை கூடுதலாக இருக்கலாம் என ஹிண்டன்பர்க் அறிக்கை சொல்கிறது.

நிறுவனத்தின் முதன்மைப் பதவி17 ல் அதானி குடும்பத்தினரே இருக்கின்றனர். ஒரு பொதுக் கம்பெனி மாதிரி இல்லாமல் குடும்பக் கம்பெனி மாதிரி தான் அதானி நிறுவனங்கள் இருக்கின்றன. அதானி குழும நிறுவனங்கள் பெற்றிருக்கும் கடன், அவை சார்ந்த துறையின் சராசரி கடன் அளவைவிட கூடுதலாகவே இருக்கின்றன. இந்தக் கடன்களைத் திரும்பச் செலுத்தும் திறன் அந்த நிறுவனங்களுக்கு இல்லை.

அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு, அந்நிறுவனங்களின் தொழிலுக்குத் தொடர்பே இல்லாத அளவில் இருக்கிறது. பங்குச் சந்தையைப் பொருத்தவரை ஒரு நிறுவனத்தின் தொழில் வளர்ச்சியைப் பொறுத்துத் தான் பங்கு மதிப்பு நிர்ணயிக்கப்படும். ஆனால், தொழில் வளர்ச்சி பெரிதாக இல்லாத சூழலிலும் பங்கு மதிப்பு மட்டும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆக, இதில் ஏதோ மோசடி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்' இப்படி அடுக்கடுக்காக அந்த அமெரிக்க நிறுவனம் குற்றச்சாட்டுகளை வைக்கவே, அதானி நிறுவனப் பங்குகள் கடுமையான சரிவைத் தொடர்ந்து  சந்தித்து வருகின்றன.

அதானி குழுமம் மற்றும் அதற்காக அரசாங்கம் காட்டும் சலுகைகள் பற்றி யெல்லாம் இந்திய ஊடகங்களில் எப்போதாவதுதான் செய்திகள் வரும், வருகின்றன.

அதேசமயம், எதிர்க்கட்சிகள் அவ்வப்போது அதானி மீதான குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துப் பேசியும் வருகின்றன. என்கிற போதும், மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருக்கும் நெருக்கத்தின் காரணமாக அதானி நிறுவனத்துக்கு எதிரான செய்திகள் விரிவாக வெளியில் பேசப்படவில்லை என்பது தான் உண்மை. 'நாங்கள் இந்தியாவில் இல்லை. அதனால் எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை' என்கிற அடிக் குறிப்புடனேயேதான் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களில் அதானி போர்ட் நிறுவனம் தவிர மற்ற எந்த நிறுவனத்தின் வர்த்தக மாடலும் தற்போது மதிப்பிடப்பட்டுள்ள சந்தை மதிப்புக்குத் துளியும் ஒப்பிட முடியாததாகவே இருக்கிறது. அந்த அளவுக்கு மதிப்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக அதானி கிரீன் நிறுவனத்தின் உற்பத்தித்திறன் 2000 மெகாவாட் மட்டுமே இதன் சந்தை மதிப்பு ரூ.2.35 லட்சம் கோடி. ஆனால், என்.டி.பி.சி நிறுவனத்தின் உற்பத்தித் திறன் 60,000 மெகாவாட். அதன் சந்தை மதிப்பு ரூ.1.61 லட்சம் கோடி மட்டுமே.

 அதானி தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது" அதானியின் 413 பக்க அறிக்கைக்கு ஹிண்டன்பர்க் பதிலானது 

ஷெல் கம்பெனிகளின் (லெட்டர் பேட் கம்பெனிகள் என்றும் சொல்லலாம்) சொர்க்கபுரி என்றழைக்கப்படும் மொரிஷியஸ், கரிபியன், சைப்ரஸ் தீவுகள் உள்ளிட்ட நாடுகளிலிருந்து செய்யப்பட்ட எஃப்ஐஐ முதலீடுகளால் (வெளிநாட்டு முதலீடு), அதானி குழும நிறுவனங்கள் பலவற்றின் பங்கு விலை செயற்கையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக அதானி தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடச் செய்து மக்களையும் அதன் பங்குகளில் முதலீடு செய்யத் தூண்டியிருக்கின்றனர். அதானி குழும நிறுவனங்களில் ரூபாய்.87 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்திருக்கிறது அரசாங்க நிறுவனமான எல்.ஐ.சி. அப்படியிருக்க மக்களும் பணம் பண்ணும் ஆசையில் முதலீடு செய்வார்கள் தானே!

இப்படி, அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை அனைத்தும் பல மடங்கு செயற்கையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனால், தற்போதைய விலை வீழ்ச்சியில் பல மடங்கு அந்தப் பங்குகள் சரிந்தாலும் அவற்றில் முதலீடு செய்யாமல் இருப்பது தான் மக்களுக்கு நல்லது" அதானி குடும்பத்துக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் சலுகைகள், செபி கண்டும் காணாமல் து இருப்பது பற்றி யெல்லாமும் அமெரிக்க நிறுவனம் அந்த 88 கேள்விகளாக எழுப்பியுள்ளது. அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, பிரதமர் நரேந்திர மோடியின் மிகமுக்கியமான நண்பர். அவருடைய தயவுடன் தான் கடந்த காலங்களில் குஜராத் மாநிலத் தேர்தல் மற்றும் இந்திய பொதுத்தேர்தல்களை கட்சி பிரமாதமாகச் சந்தித்துத் தொடர் வெற்றிகளைக் குவித்தது.

இந்த நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தற்போது பூதாகரமாக வெடித்து வெளி வரத்துவங்கியிருப்பதால், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் இந்தியபஹ பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு  என்ன மாதிரியான வரவேற்பு மற்றும் விளைவுகளை ஏற்படுத்தும். என்பதே தற்போது அரசியல் பார்வையாளர்கள் நிலை,  நாட்டின் சௌகிதார் பிரதமர் நரேந்திர மோடி என்ன எதிர்வினையாற்றுவார் என்பதையெல்லாம் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...