அன்னியச் செலாவணி (ஹவாலா) பண மோசடி தொடர்பான வழக்கில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத் தலைவர் வர்கீஸின் ரூபாய். 305.84 கோடி மதிப்பிலான அசையும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் மீறியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. விளம்பரம் மூலம் பிரபலமான நகைக் கடையான ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தில் ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அதன் ரூபாய்.305.84 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து முடக்கியுள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறியதாகவுண் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவிலிருந்து ஹவாலா மூலம் துபாய்க்கு பெரும் தொகையை கை மாற்றியதும், பின்னர் ஜோய் ஆலுக்காஸ் வர்கீஸ் என்பவருக்கு சொந்தமான 100 சதவீதம் துபாயில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரி எல்எல்சி நிறுவனத்தில் முதலீடு செய்ததும் இந்த வழக்கு தொடர்பானது தான் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய் கிழமையன்று, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தனது ரூபாய். 2,300 கோடி ஐபிஓவை திரும்பப் பெற்றது. அதன் நிதி முடிவுகளில் கணிசமான மாற்றங்களை இணைக்க கூடுதல் நேரம் தேவை என்று கூறியது. திருச்சூர் ஷோபா நகரிலுள்ள நிலம் மற்றும் குடியிருப்புக் கட்டிடம் அடங்கிய ரூபாய். 81.54 கோடி மதிப்பிலான 33 அசையாச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூபாய் 91.22 லட்சம் மதிப்புள்ள மூன்று வங்கிக் கணக்குகள், ரூபாய்.5.58 கோடி மதிப்புள்ள மூன்று நிரந்தர வைப்புத்தொகைகள் மற்றும் ரூபாய். 217.81 கோடி மதிப்புள்ள ஜோய் ஆலுக்காஸ் பங்குகளும் அமலாக்கத் துறை இயக்குநரகத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்