நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் சாணார்பாளையம் சிவப்பிரகாசம். மகன் மாரிமுத்து எனும் மோகனக் கண்ணன் (வயது 40) திருமணமாகாத. மாற்றுத்திறனாளியானவர்
தற்போது திருச்செங்கோடு அருகிலுள்ள கூட்டபள்ளியில் வசிக்கிறார்.
கடந்த 13 ஆண்டுகளாக மோகன கண்ணன் தான் ஒரு வழக்குரைஞர் எனக் கூறி நம்ப வைத்து, குமாரபாளையம் நீதிமன்றத்திற்குச் சென்று வந்ததுடன், பலரிடம் பணம் வசூலித்தாராம். இந்த நிலையில் இவருடைய நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சக வழக்குரைஞர்கள் குமாரபாளையம் வழக்கறிஞர் சங்கத்தின் மூலம் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் காவல் ஆய்வாளர் ரவி மற்றும் காவலர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று அவரிடம் விசாரித்ததில் அவர் தனது வழக்கறிஞர் சான்றிதழ் சென்னையிலுள்ளதென்றும், பதிவெண் தெரியவில்லை என்றும் முதலில் தெரிவித்தார். அதையடுத்து காவல்துறை தீவிரமாக விசாரித்ததில், மோகனக் கண்ணன் ஒரு பதிவெண்ணைக் கொடுத்தார். ஆனால் அது வேறு ஒரு வழக்குரைஞருடையதென்பது தெரியவந்தது.
மேலும் மோகன கண்ணன் 6-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவர் கடந்த 13 ஆண்டுகளாக வழக்குரைஞர் எனக் கூறி மோசடி செய்தது தெரியவந்தது. அதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறை நேற்றிரவு குமாரபாளையம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் அடைத்தனர்.
கருத்துகள்