ஒரு குறிப்பிட்ட பகுதியின் தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு தற்காலத்தில் புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்குகிறது. 1999 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புவிசார் குறியீட்டுச் சட்டம் 2003 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படும் நிலை உள்ளது. புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் சம்பந்தப்பட்ட பொருளை வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ போலியாகவோ பயன்படுத்துவதைத் தடுக்கலாம். தமிழ்நாட்டில் பல பொருட்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
இப்பொது வேலூர் மாவட்டம் இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இலவம்பாடி முள் கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய முட்கள் நிறைந்த நாட்டுக் கத்தரிக்காய் இனம். இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் பளபளப்பாக இருக்கும்.
ஒரு கத்தரிக்காயின் சராசரி எடை 40 கிராம் வரை வரும். இவற்றில் புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்ற கத்தரி வகைகளை விட சுவையாகவும் இருக்கும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்தி இந்தக் கத்திரிக்காய் எனும் தாவர இனத்திற்கு உண்டு. செடியின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் முட்கள், பயிரை மிகவும் தனித்துவமாகவும், அடையாளம் காணக்கூடியதாகவும் ஆக்குகிறது.
கருத்துகள்