முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தைப்பூசம் நட்சத்திரத் திருநாள் பழனியில் கோலாகலம்

தைப்பூசம்  நட்சத்திரத் திருநாளை முன்னிட்டு போகர் வழிபாடு செய்த ஸ்ரீ தண்டாயுதபாணியாகிய தமிழ் முருகக் கடவுளை வழிபட்ட பழனி மலைக்கு 


 பாதயாத்திரையாகக் காவடி கட்டி கடந்த ஒருவார காலமாகச் செல்லும் தமிழ்நாட்டின்  மக்கள் வழி நெடுகிலும் பக்திப்பரவசம்       "நெஞ்சம் உருகா நிதிப்பெருக்கரோ எனக்கோர்

தஞ்சம்? முருகா, தனிமுதல்வா, – செஞ்சதங்கைத்

தாள் உடையாய், தென் பழனிச் சண்முகா, பன்னிரண்டு

தோள் உடையாய், நீயே துணை.’..........முருகப்பெருமான்  மெய்க்கீர்த்தி கூறும்   செப்புப்பட்டயம் 

வரி 8 லிருந்து 11 வரை. 



“உ ஸ்ரீபுற தகன பரமேஷ்வரன் குமாரன்,அரு பரவி

அமரர் சிறை மீட்ட தேவர்கள் தேவன்,தெய்வலோக நாயகன்

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன், கோகநகனை

சரசமாடி குட்டி குடுமி நெஷ்ட்டை போக்கி கோல பரமபதம்

கொடுத்த குமார கெம்பீரன்”  முருகன் வீரம் குறித்த மெய்கீர்த்தி ..

வரி 11 முதல் 13 வரை 




“கொக்கறு வரையாழி கொட்ட ராவுத்தன்

வக்கிரமிகு அசுரேசர் வடநீரொப்பன்

உக்கிர மயிலேறிவரும் உத்தண்ட தீரன்,

பக்கரைப் பகட்டரக்கர் பட்டிட படைக் களத்தில்

கொக்கறித்துடல் கிழித்த குக்குடக் கோடிக் குமாரன்”  எனும் வரி 13 முதல் 18 வரை 




“கூளி கொட்ட குகைப்பிசாசுகள்

தொக்கநிற்ற தாளமொற சூரன் மாழுவதற்க்கு

பாரிய நீலிய கச்சை கட்டி

பாரவே லெடுத்த பராக்கிரம சேவுக தீரன்

அசுரர் குலைகாரன், அமராபதி காவலன்,

தோடு சிரி காதினான்,தோகைமயில் வாகனன்,

சீதரன் திருமருகன், சிவா சுப்ரமணியன்,

சண்டப்பிரசண்டன், அன்பர் கொரு மிண்டன்,

உத்தண்ட தேவாதிகள் கண்டன்,

ஆறாறு நூறாறு அஷ்ட்ட மங்கலம்

ஆவினங்குடி பழனிக்கதிபன்,

பகுத்தப் பிரியன், பகுத்தச் சீலன்,

பார்வதி புத்திரன்,விக்கின விநாயகன்,

தெய்வ சகோதரன்,எல்லாத் தேவர்க்கும்

வல்லபனாகிய ஸ்ரீவீரப் பழனிமலை சுவாமியார்

திருவுளப்படிக்கு வீரவாகு தேவர் அருளிப்படல்”


யாகம சாலையும் அந்தணர் வெளிவியும் தண்ணீர் பந்தலும் தர்ப்ப சாயூச்சமும் இப்படி தருமத்துக்குள்ளாய் நடந்து வருகிற சாலியவாகனம் சகார்த்தம் 1450 கலியுக சகார்த்தம் 4629 செல்லா நின்ற துன்முகி வருஷம் தையி மாசம் 19 தேதி சுக்குர வாரமும்,சதுர்த்தியும் உத்திர நட்செத்திரமும் பெற்ற சுபதினத்தில் கொங்கு வய்காபுரி நாட்டில் சண்முகநதி தீர்த்த வாசமாய் பழனிமலை மேல்

தெய்வேந்திர வம்சத்தார்

 செப்புப்பட்டயம் சாட்சிகள் வரி 38 முதல் 44 வரை உள்ளதில்,


ஆறு காலமும் அனந்த வடிவுமாய் மகாபூசை கொண்டருளிய சர்வ பரிபூரணச் சச்சிதானந்த பறபிரம மூர்த்தியாகிய பாலசுப்பிரமணிய சுவாமியார் சன்னதி முன்பதாய் இஷ்தானியம் சின்னோப நாயக்கர் சரவணை வேல் தபராசபண்டிதர் பழனியப்ப நம்பியார் அறவளர்த்த நம்பியார் பாணிபாத்திர உடையார் பழனிக்கவுண்டன் தலத்து கணக்கு விருமையான பிள்ளை குமாரவேலாசாரியார் மர்ருமுண்டாகிய தானம் பரிகலத்தார் முன்பதாயி தெய்வேந்திர வம்மிஷத்தார்கள் அனைவோருக்கும் கூடி தெய்வேந்திர மடம் ஆலயம் பழனி மலை உடையாருக்கு சத்திய சாட்சியாய் எழுதி கொடுத்த தரும சாதினமாகிய தாம்பூர சாதீன பட்டையம்  கூறும்




சோழநாட்டின் மகுட வைசியர்கள் பாண்டிய நாட்டிற்கு புலம்பெயர்ந்த பின்னர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை, கண்டனூர்,  தேவகோட்டை  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார் எனும்  கடந்த 200 ஆண்டுகளாகப் பாரம்பரியமிக்க வைரவேல், காவடிகளுடன் பழநி மலைக்கு பாதயாத்திரையாகச் சென்று வழிபடும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நகரத்தார் காவடி ஜனவரி மாதம் 29 ஆம் தேதியில் குன்றக்குடியிலிருந்து பழநிக்கு வைரவேல், உடன் 291 காவடிகளுடன் பாதயாத்திரையாகப் புறப்பட்டவர்கள் நேற்று முன்தினம் நத்தம் வந்தடைந்தனர். காலை  நத்தம் வாணியர் பஜனை மடத்தில் தங்கிய நகரத்தார் காவடி காலையில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் காவடிச் சிந்து நடைடப்பாட்டுப்பாடி  காவடிகளுடன் பழநி மலை நோக்கிப் புறப்பட்டனர். பிப்ரவரி மாதம் .4-ஆம் தேதி தைப்பூசத்தன்று மலைக்கோயிலைச் சென்றடைபவர்கள்,





சுவாமியை வழிபட்ட பின்னர் ஒரு நாள் பழநியில் தங்கி விட்டு மீண்டும் பாதயாத்திரையாகவே ஊர் திரும்புவார்கள். நகரத்தார்களுக்கு மன்னர் நாயக்கர்கள் காலத்தில் எட்டு அறப்பட்டையங்கள் கி.பி. 1600 ஆம் ஆண்டு முதல் கி.பி. 1805 வரையுள்ள காலத்தில் எழுதப் பட்டுள்ளன. அவைகளின் விவரம் பின் வருமாறு.

ஏடுகளின் பெயர் காலம்

1. பழனிக்கோயில் நடப்பு அட்டவணை கி. பி. 1600

2. ஏழுநகரத்தார் தருமசாசனம் கி. பி. 1608

3. ஏழுநகரத்தார் தருமசாசனம் கி. பி. 1766

4. ஏழுநகரத்தார் தருமசாசனம் கி. பி. 1788

5. பிரான்மலை ஆதீனம் நடப்பு அட்டவணை கி. பி. 1770

6. ஆதீனம் பட்டாபிடேக அட்டவணை கி. பி. 1610

7. மடவாலயத் தருமசாசனம் கி. பி. 1805

8. நிரம்ப வழகிய தேசிகர் பட்டயம் கி. பி. 1627

இவற்றுள் முதலில் குறிப்பிடப்பட்ட பழனிக்கோயில் நடப்பு அட்டவணை என்ற பட்டயத்தில் நகரத்தார்கள் பழனி வேலாயுத சாமிக்குக் காவடி எடுத்த வரலாறு விளக்கமாகத் தரப்பட்டுள்ளது  பழனியிலுள்ள முருகப் பெருமானுக்கு காவடிகள் சமர்பிக்கும் வரை, காவடிக்கு பூஜை நடக்கும். ஒவ்வொரு காவடியிலும் முருகன் பழனி ஆண்டவர் இருப்பதாக நம்பப்படுகிறது. குன்றக்குடியில் துவங்கி பல இடங்களில் பூஜை நடக்கிறது.

அதில்  முதல் நாள் இரவு - மருதிப்பட்டி இரண்டாம் நாள் இரவு - சமுத்திரப்பட்டி மூன்றாம் நாள் இரவு - இடைச்சி மடம் நான்காம் நாள் இரவு - செம்மடப்பட்டி ஐந்தாம் நாள் இரவு - கலிங்கப்பய்யா ஊரணி ஆறாம் நாள் - அன்னதான மடத்தில் முதல் பூஜை ஏழாம் நாள் - அன்னதான மடம் மற்றும் தைப்பூசத்தில் இரண்டாம் பூஜை எட்டாம் நாள் - அன்னதான மடத்தில் மூன்றாம் பூஜை ஒன்பதாம் நாள் - அன்னதான மடத்தில் நான்காம் நாள் பூஜை மற்றும் பழனி மலைக்கோயிலில் உள்ள முருகனுக்கு காவடி பிரசாதம் பத்தாம் நாள் - அன்னதான மடத்தில் ஐந்தாம் நாள் பூஜை பதினோராம் நாள் - அன்னதான மடத்தில் ஆறாம் நாள் ஆடுபடி பூஜை பன்னிரண்டாம் நாள் - சந்தன அபிஷேகமும் முடித்து காவடியும் சொந்த ஊருக்கு கால்நடை பயணமாகத் திரும்பத் தொடங்கும். சைவ மத நம்பிக்கையும் கடவுள் வழிபாடும் பிரிக்க முடியாத ஒன்றாகும். இதில் கடவுளை வணங்குவோர், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடியும்  வணங்கியும்  வருவதுண்டு. சிலர் என்ன தான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், வீட்டிலேயே கும்பிட்டு விட்டு, அத்தோடு தன் கடமை முடிந்தது என்று விட்டு விடுவார்கள். சிலர் கோவிலுக்குச் சென்று கடவுளை மனமுருக தரிசித்துச்  செல்வார்கள். நகரத்தார் காவடி என்பது பழனியில் உள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக நகரத்தார்  செட்டிநாடு பகுதியில் ( சிவகங்கை மாவட்டத்தில் ஐந்து  வட்டங்களிலும்  புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று வட்டங்களிலும் அடங்கிய 76 ஊர்களிலும் உள்ள மக்கள் தைப்பூச விழாவில் பங்கேற்பார்கள் . நகரத்தார் காவடியில் இரண்டு வெவ்வேறு குழுக்கள் பழனியை நோக்கிப் பயணித்து பழனிக்கு சில கிலோமீட்டர்கள் முன்னதாகவே இணையும். மேலவட்டகைக் காவடி மற்றும் கீழ்வட்டகை காவடி.

செட்டிநாட்டு ஊர்களிலுள்ள மக்கள் அந்தந்த ஊர்களிலிருந்து புறப்பட்டு தைப்பூசத்திற்கு முன் 8 ஆம் நாள் இரவு குன்றக்குடியை அடைகின்றனர் . ஊர் முழுவதுமிருந்து வரும் காவடிகள் குன்றக்குடியில் திரண்டு, மறுநாள் காலை வேல் தலைமையில் அனைத்துக் காவடிகளும், இறுதியில் பச்சைக் காவடியும் அனைத்து காவடிகளும் தொடங்கும்.

அது மிகவும் பாரம்பரியம் கொண்ட அடிப்படை விதிகள் வகுத்து எழுதப்பட்ட பட்டயத்தின் அடிப்படையில் , ஒருவர் காவடியைத் தூக்கி தோளில் வைப்பதற்கு முன் குளிக்க வேண்டும். தோளில் காவடியுடன் நடக்க ஆரம்பித்தவுடன் தண்ணீர் குடிக்கவோ சிறுநீர் கழிக்கவோ கூடாது. அப்படிச் செய்ய வேண்டுமானால், காவடியைத் தோளில் போடுவதற்கு முன் மீண்டும் குளிக்க வேண்டும். காவடி ஏந்துபவர் வெள்ளை வேஷ்டி அணிந்து பழனியில் முருகப்பெருமானுக்கு காவடி படைக்கும் வரை அதே வேஷ்டியில் தான் இருக்க வேண்டும்.   என்பது ஐதீகம்.     ‘ஞான விரகு அறியா நானும் சில தமிழால்

வானவர் ஏத்தும் பழனி வந்தானைத் – தானவரை வென்றானை வாழ்த்த விரைப் பாதிரி வனம் சேர் கன்று யானை மாமுத்தோன் காப்பு.’    அதேபோலவே 363 ஆண்டு காலம் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் பகுதியில் பரமத்தி வேலூர் பக்தர்களின்  காவடிகள் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை, காவடிகள் என மூன்று ஊர் ஒன்று சேர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தக் காவடிகள் கட்டி பூஜை செய்து உணவு வழங்கிப் புறப்பட்டுச் செல்வார்கள். அப்படி  பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தற்போது 30 வருடமாக பாத யாத்திரையாக இப்போது அணைவரும் செல்கிறார்கள். இதில், எடப்பாடியைச் சேர்ந்த பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. அதாவது பாரம்பரிய முறைப்படி முன்னோர்கள் கற்றுக் கொடுத்தது போல் காவடிகள் கட்டிச் செல்லும் வழியில், ஒவ்வொரு இடத்திலும் பூஜைகள் செய்து இவர்களுக்கென்று பழனியில் சிறப்புப் பூஜைகள் வைத்து வழிபாடு நடக்கும் கோயமுத்தூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சித் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தலைமையில் கோயமுத்தூரிலிருந்து பழனிக்கு பாத யாத்திரை செல்வதன் படி ஈச்சனாரி விநாயகர் கோவிலில் முன்பிருந்து தொடங்கிய பாத யாத்திரையில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுச் செல்கிறார்கள்.பாதயாத்திரையை அக்கட்சியின்  மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்து, துவக்கி வைத்தார். (இதேபோல கடந்த இருபதாண்டு முன் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அறியப்பட்ட என்.சுதாகரன் பிரபலமானது நம் நினைவுக்கு வந்தது) முருகனைப் பல வழிகளிலும் வழிபடலாம் என்றாலும் பக்தி மார்க வழிபாடே சிறந்த மார்கம். பாத யாத்திரை என்ற நடைப் பயணம் அதில் ஒரு மார்கம். கடவுளின் அருளைப் பெறுவதற்காகவே உண்மையில் பாத யாத்திரை செய்கின்றனர். ஒவ் ஒருவருக்கும் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளன. அப்போது  வணங்குவதின் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை அவர் களைந்து விடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கலியுக வரதன் என்ற அவரை வணங்குகின்றனர்.     


             "வேறோ, விளக்கும் விளக்கொளியும்? வேறிரண்டு

கூறோ, நவரசமும் கூத்தாட்டும்? – நாறும் மலர்க்

கள் உயிர்க்கும் தென் பழனிக் கந்தன், குருபரன்

உள் உயிர்க்கு வேற்றுமை ஆமோ?’  என்பதே அடியேன் கருத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...