முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி எடப்பாடி கே.பழனிச்சாமி வசமான அதிமுக

உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி


2022 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  11 ஆம் தேதியில் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கி அந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம்  உபர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனிநீதிபதி, ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசயசாமி  தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லுமென தீர்ப்பு வழங்கியது.




அந்த இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் 2023 ஜனவரி மாதம் 11ஆம் தேதி ஒத்திவைத்திருந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.


ஓ.பன்னீர் செல்வமஹ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை தேர்வு செய்தது செல்லும். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும், ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவிலிருந்து நீக்கியதும் செல்லும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக எடப்பாடி கே.பழனிச்சாமி வசமாக கொண்டு செல்லப்படடது. பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஓபன்னீர் செல்வம்  தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. ஈரோடு இடைக்காலத் தேர்தல் பிப்ரவரி  27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்..

மேலும், எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு அணியாக பிரிந்து அதிமுக முன்னால் முதல்வர்  ஜெ.ஜெயலலிதா மறைவிற்குப் பின்  பல பிரிவுகளில் பிளவுபட்டுக்  கிடக்கிறது. இதில், யாருக்கு அதிமுக சொந்தம் என்பதையும் இன்றைய தீர்ப்பு தீர்மானித்ததால், தமிழக அரசியலில் இப்போது அதிமுக பாதை இனி எடப்பாடி கே.பழனிச்சாமி வசமான நிலை  ஏற்பட்டுள்ளது. இதில் ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி தரும் முடிவே அதிமுக எதிர்காலமாக மக்கள் ஜனநாயகத்தில் பார்க்கப்படுகிறது.ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இந்த தீர்ப்பு குறித்த கருத்தை முன்வைத்த வைத்திலிங்கம் இது தங்களுக்குச்  சாதகமான தீர்ப்பு எனத் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் இடையிலான ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்தது. எடப்பாடி கே. பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக்கும் நோக்கத்தில் 2022 ஜூன் மாதம் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை கூட்ட அனுமதியளித்தாலும், அதில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றத் தடை விதித்தது.

அதனைத் தொடர்ந்து கூடிய பொதுக்குழுவில் தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றாமல் ஒத்தி வைப்பதாக அறிவித்தது எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு.  தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் . தரப்பின் அடுத்தடுத்த முட்டுக்கட்டைகள், வழக்குகளைக் கடந்து ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டியதை.

 அடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்ததை தொடர்ந்து பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.

இப்படி இரு தரப்பினும் மாறி மாறி நடத்திய சட்டப்போராட்டத்திற்கு  தீர்வு கிடைத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை  வெளியிட்ட உச்சநீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி கூடிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.  தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தவர். தெரிவித்ததாவது, "சென்னை ஐகோர்ட் நீதியரசர்கள் சொன்னதை போன்று உச்சநீதிமன்றம் பொதுக்குழுவை கூட்டியது செல்லும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால் சிவில் கோர்டில் இருக்கும் வழக்கை எங்களுடைய கருத்து கட்டுப்படுத்தாது என்று சொல்லி இருக்கிறார்கள்.




பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று சொல்லவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். முழு தீர்ப்பையும் பார்த்துவிட்டு பேசுவோம். சிவில் கோர்டை எங்கள் கருத்து கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது என்றால் இது எங்களுக்கு சாதகமான தீர்ப்புதான்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



அதாவது உச்சநீதிமன்றம் செல்லும் என்று தீர்ப்பளித்த பொதுக்குழுவில்தான் எடப்பாடி கே.பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்தது, ஓ.பனனீர் செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியது,


ஜெ.ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்பது ரத்து போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவிக்காததுடன் சிவில் கோர்டை இந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தாது



என்று தெரிவித்ததன் மூலம் அதில் தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்த முடியும். என்பதே அவர்கள் கருத்து இடைத் தேர்தல் நடைமுறைகள் உள்ள நிலையில் இந்த தீர்ப்பு


தற்போது வந்தது ஈரோட்டில் தாக்கத்தை உறுவாக்குமா என்பதே பலரும் பேசும் கருத்தாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...