உயரதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்புக் கேட்டு மனு,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவு
வனத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அரசு உயரதிகாரி ஒருவர் பினாமிகள் மூலமாக அபகரித்துள்ளதாகப் பொது நல மனு தாக்கல் செய்து வழக்குத் தொடர்ந்தவர் காவல் பாதுகாப்புக் கோரித் தொடர்ந்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம் பூலாத்தூர் கிராமம் ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "கொடைக்கானல் வட்டம் மலைப்பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான 1.85 ஏக்கர் நிலத்தை அப்போது பணியிலிருந்த குன்னூர் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநரான அம்பலவாணன் அவரது பினாமிகள் மூலமாக வாங்கியதாக
குற்றம் சாட்டி தாக்கல் செய்த பொதுநலமனு
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வனத் துறைக்குச் சொந்தமான அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது. இந்த முறைகேட்டுக்கு அப்போதைய தின்டுக்கல் பதுவு மாவட்டம் வத்தலக்குண்டு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். அதற்காக போலி வில்லங்க சான்றிதழ்களும் தயாரிக்கப்பட்டன. அது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை நடத்திய குற்றப்பிரிவு புலணாய்வுக் காவல்துறை ஆவண மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்த நிலையில், அம்பலவாணனின் தூண்டுதலின் பேரில் சிலர் புகாரத தாரர் மீது பொய்யான புகார் கொடுத்து வருவதாகவும். அந்தப் புகார்களின் மீது சம்பந்தப்பட்ட பொதுநல வழக்கு மனுதாரருக்கு காவல் நிலையத்தில் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் .அவருக்கு மிரட்டல்கள் வருவதாகவும். எனவே, அவருக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரியிருந்தார். அந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், தாண்டிக்குடி காவல் ஆய்வாளர் ஆகியோர் இந்த மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டார். இதில் பொது நீதி யாதெனில்எங்கு நோக்கினும் ஊழல் குற்றங்கள் பேருந்து ரயில் மற்றும் இதர இடங்களில் அக்கிரமங்கள் சட்ட விதி மீறல்கள் நடைபெறுவதை நேரில் புகார் கொடுக்க பொதுமக்கள் அஞ்சும் நிலைக்கு காவல்துறையில் உள்ள சில ஊழல் வாதிகள் மூலம் பொய வழக்குகள் வருமே என்ற பயம் 90 சதவீத மக்களிடம் உள்ளது ஆகவே கண்முன் நடக்கும் நிகழ்வைக் கண்டும் காணாதது போல் ஏன் நமக்கு இந்த வம்பு சாட்சியாகவும் காவல்துறையினர் அழைக்கும் போது செல்லவேண்டிய நிலை எந்த நேரத்லும் வரச் சொல்லுவார்கள் நம்மையும் எதிரியாக பாவிக்கும் நிலை என்று கருதி செல்வது தான் ஊழல் ஒழிப்பு கண் இழந்த நிலையே உள்ளது , இதனால் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும் வீடியோ ஆதரங்களைக்கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்வதும் அவசியமாகிறது, குற்றம் நிகழும் இடத்துக்கு காவல்த்துறை வந்தாலும் அங்கு சாட்சியம் சொல்ல யாரும் முன் வராத சூழலே உள்ளது நீதி கண் விழிப்பது குற்றங்களைத் தடைசெய்யும்
கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களை எல்லாம் எவ்வளளோ அழகா பாதுகாக்கிறார்கள் என்ற குற்றசயசாட்டும் பலமாக வருகிறது ஒரு நேர்மையான, முழு அதிகாரம் கொண்ட விஜிலென்ஸ் ஆணையரை நியமிக்காமல் ஊழல்வாதிகளை காப்பாற்றும் பகுதி நேர ஆணையராக நியமித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்,
புகார்களை விசாரணைக்கு எடுக்காமல் காலம் தாழ்த்துவதும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் புகார்கள் மீது விசாரணை நடத்த அனுமதி தராமல் இழுத்தடிப்பதும் என ஊழல்களை மூடி மறைக்கும் ஊழல்வாதிகளை பாதுகாக்க தனி கவனம் செலுத்துகிற நிலை மாற வேண்டும்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பேசிய பேச்செல்லாம் காத்தோடு போயாச்சு. ஊழல் வழக்குகளை தடுத்து ஊழல் செய்த உயர் அதிகாரிகளை காப்பாற்ற ஒரு IAS அதிகாரிகள் குழு தமிழகத்தில் செயல்படுகிறதா என்ற அச்சம் ஊழல் தடுக்க முன்வருவோருக்கு இருக்கும் பயம்
ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்றி ஊழலை வளர்ப்பதற்கு காரணமில்லாத விஜிலென்ஸ் நிர்வாகம் தேவை.
கருத்துகள்