ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி கே. பழனிச்சாமி அணி முன்னாள் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசும்
ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
தங்கள் தரப்பு வேட்பாளர்களை அறிவித்தன் மூலம் பாஜக தனது நிலைப்பாட்டை வெளிக்காட்டியே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.கலகம் பிறந்தால் நியாயம் கிடைக்கும் என்ற பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ அது அதிமுகவுக்குப் பொருந்தும்
அதிமுக உடைந்து அமமுக வந்தது பாஜக வின் தலையீடு தான் காரணம் அதே அதிமுக இப்போது இரண்டாகி பன்னீர்செல்வம் அணி எனவும் பழனிச்சாமி அணி எனவும் வருவதற்கு காரணம் பாஜக தான் லாயிட்ஸ் சாலையில் இருந்து கமலாலயத்தில் இயங்குவதாகவே அதன் தொண்டர்கள் கவலை கொண்ட நிலையில்,
முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா முதுமை காரணமாக நோயவாய்ப்பட்டு மறைந்த நிலையில் அவதூறுகள் பறப்பிய பலரும் இப்போது உண்மை உணர்ந்து தாங்கள் ஐந்து துண்டாக உடைத்த அதிமுக என்ற கண்ணாடியை மீண்டும் ஒட்டவைக்கும் முயற்சியில்
இறங்கவேண்டிய நிலை வரும்போது அதில் உடைந்த துண்டுகள் சில ஒட்ட மறுப்பதில் மாற்றுக்கட்சியினர் அவர்களின் அடிமைக் கட்சி போல நடத்துவது அந்தக் கட்சியின் பல தொண்டர்கள் விரும்பாத நிலை இருந்து அவர்கள் அதன் பொதுச் செயலாளர் சசிக்கலா நடராஜன் பக்கத்தில் இருந்து வந்த நிலை.
இப்போது அக் கட்சிக்கு இடைத்தேர்தல் போல ஒரு இக்கட்டான நிலை கொங்கு பகுதியில் வரும் என்பதை அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்காத நிலையில் தற்போது அவர்கள் கட்சியின் இணைந்து செயல்படும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது
இது சசிக்கலா நடராஜனுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டும். மேலும் இப்போது நாளை எடப்பாடி கே.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன.சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, (உச்சநீதிமன்றத்தில் - Case Title: Thiru K. Palaniswamy Versus M. Shanmugam & Ors. Case Number: SLP (C) No(s). 11237/2022.) மட்டும் தான் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள தனால், உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளின் அமர்வு வழங்கிய தீர்ப்பை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில், உச்ச நீதிமன்றம் முழுமையாக விசாரித்த பிறகு அதன் தீர்ப்புக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். தேர்தல் ஆணையம் தற்போது எதிர்மனு தாக்கல் செய்துள்ளதில் எடப்பாடி கே.பழனிச்சாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகத் தெரிய வருகிறது ஆகவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை ,தானாக முடிவெடுத்தாலும் சரி, அதில் பாரதிய ஜனதா கட்சி தலையீடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இரட்டை இலைச் சின்னம் ஓ.பன்னீர் செல்வத்திற்கோ , எடப்பாடி கே.பழனிச்சாமி உள்ளிட்ட இருவருக்குமேவோ கிடைக்க வாய்ப்பில்லை என்பதே நிலவரம்.
இதில் சசிக்கலா நடராஜன் மனுவும் அடக்கம் , ஆக இரட்டை இலை சின்னம் தற்போது கிடைக்க வாய்ப்பு இல்லை எனபதால் இதுவரும் சார்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட வேண்டிய நிலை வரலாம் என்பதே தற்போதுள்ள நிலை அதன்பின் தான் அமமுக வேட்பாளர் போட்டியில் தொடருவாரா அல்லது அமமுக எனும் அதிமுக பிரிவு முதல் அணி தனிக்கட்சி என்ற முறையில் அதன் பொதுச் செயலாளர்
டி.டி.வி.தினகரன் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்த அந்த அணியின் வேட்பாளரை ஆதரித்து தனது வேட்பாளரை விலக்கிக்கொண்டு ஆதரிப்பாரா என்பதும் இனிமேல் தான் பிப்ரவரி 8 ஆம் தேதிக்குப் பின் தெரியும்..
11.07.2022. ஆம் தேதியில் நடந்த பொதுக்குழுவின் தீர்மானத்தை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஏற்று கொள்ள முடியாது என இந்தியத் தேர்தல் ஆனையம் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பதில் தாக்கல்.செய்துள்ள நிலையில்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைக்காலத்தேர்தல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் . மேலிடம் வழங்கிய ஆலோசனைகளை அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலர் எனக் கூறிவரும் எடப்பாடி கே.பழனிசாமி நிராகரித்து விட்டதாகவே தெரிகிறது
'கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காததே காரணம்' என தற்போது கூறிவரும் விழுப்புரம் சி.வி.சண்முகமும் தர்மபுரி கே.பி முனுசாமி போன்றவர்கள் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த மாதிரி சந்தர்ப்பவாத நிலைப்பாடு கொண்டுள்ளதும்
வெளிப்படையாகவே பேசக்கூடிய கே.ஏ.செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன் டி.ஜெயகுமார் ஓ.எஸ்.மணியன் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அ.தி.மு.க. எடப்பாடி கே.பழனிச்சாமி ஆதரவு நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான மன நிலையில் இருப்பதை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். கூட்டணியை தொடர்ந்தாலும் அ.தி.மு.க. -- பா.ஜ.க இடையே இணக்கமான சூழல் இப்போது இல்லை.
இரண்டு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்ட பின் நிலைமை மேலும் மோசமானது. அ.தி.மு.க.வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க நினைப்பதாக பலரும் குற்றம்சாட்டி பேசியும் வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தவிர மற்றவர்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி பேசுவதில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் காங்கிரஸ் சட்டமன்றப்பேரவை உறுப்பினர் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 27- ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த்த் தொகுதியில் 2021-ஆம் ஆண்டில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்ததால் மக்கள் செல்வாக்கு இல்லாத த.மா.கா. சார்பில் அதன் இளைஞரணித் தலைவர் யுவராஜா என்பதாலும் போட்டியிட்ட கூட்டணியால் வென்றார தற்போது அதிமுக இரண்டாம் கட்டத்
தலைவர்களால் 'கட்சி பிளவுபட்டு இரட்டை இலைச் சின்னம் கிடைப்பது சந்தேகம் என்ற நிலையில் அ.தி.மு.க. இரண்டு அணியாகவும் அமமுக தனியாகவும் போட்டியிடுவது எதிரிகள் பலமில்லாத நிலையில் தி.மு.க.வுக்கு பெரும் சாதகமாகிடும். எனவே இந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா . சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளனர்.இதையும் ஏற்க மறுத்த எடப்பாடி கே பழனிசாமி 'இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.
தனி சின்னத்தில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிப்போம். அப்போது தான் உட்கட்சி பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர முடியும்' என திட்டவட்டமாகக் கூறி விட்டார். பாரதிய ஜனதா கட்சி . மேலிடம் முன்வைத்த ஆலோசனைகளை நிராகரித்து அ.தி.மு.க. வேட்பாளராக தென்னரசுவை பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க.வினர் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தைக் கூட பயன்படுத்தாத சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அமித்ஷா பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோருடன் ஆலோசிக்க தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டில்லி சென்றார்., கூட்டணியை எடப்பாடி கே.பழனிசாமி கைவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், பழனிசாமி தரப்பினால், தேர்தல் அலுவலகமும் திறக்கப்பட்டது.
'அ.தி.மு.க., பணிமனை' என்ற பெயரில் இருந்த அலுவலகம், நேற்று 'தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இயங்கி வரும் நிலையில், அ.தி.மு.க., எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு, தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில், தேர்தல் பணிமனை திறந்திருப்பது கேள்விக்குறியானது.மேலும், பிரசார பேனர்களிலும் பிரதமர் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் புகைப்படங்களை தவிர்த்திருந்தனர்.அதனால், பா.ஜ.க, கூட்டணியில் இருந்து எடப்பாடி கே.பழனிசாமி விலகி விட்டாரா; புதிய பெயரில் புதிய கூட்டணியை உருவாக்க எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளாரா என, பல கேள்விகள் எழுந்த நிலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பேனர் மீது, ஸ்டிக்கர் ஒட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி என, மறைத்து மாற்றினர்.
கருத்துகள்