குந்தி மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள கும்லா வட்டத்தில் செயல்படும் மகிளா விகாஸ் மண்டலின் வருடாந்திர பொதுக்குழுவில் 15,000க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றதற்கு பிரதமர் பாராட்டு
ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள கும்லா வட்டத்தில் செயல்படும் மகிளா விகாஸ் மண்டலின் வருடாந்திர பொதுக்குழுவில் 15,000க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
குந்தி மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள பால்கோட் (கும்லா) வட்டத்தில் செயல்படும் மகிளா விகாஸ் மண்டலின் வருடாந்திர பொதுக்குழுவில் 15,000க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டதாக மத்திய பழங்குடி விவகாரங்கள் துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா வெளியிட்டிருந்த தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பிரதமர் பதிலளித்திருந்தார். 944 மகிளா மண்டலைச் சேர்ந்த பெண்கள் இதில் கலந்து கொண்டனர்
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. அதிகரித்து வரும் பெண்களின் பங்கேற்பு, அவர்களது அதிகாரம் மற்றும் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.”
கருத்துகள்