தொழில்நுட்பப் புரட்சியால் இணையவழிக் குற்றங்கள் தொழிற் துறையை உருமாற்றியுள்ளது.
புதிய சேனல்களைத் திறந்துள்ளது. இது சமூகச் சீரழிவின் உச்சம் வெப் கேமரா இணையதளங்கள், சந்தா சேவைகள் மற்றும் தகவமைக்கப்பட்ட காணொளித் தளங்களைப் பயன்படுத்தி பல ஆபாசப்பட நட்சத்திரங்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் சுயாதீனமாக செயல்பட தொழில்நுட்பம் உலகில் அனுமதிக்கிறது. தங்களின் தனிப்பட்ட பெயரை பிரபலமடையச் செய்ய பலரும் தங்களின் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்துகின்றனர்.
அடல்ஸ் ஒன்லி எனும் வயது வந்தோருக்கான உள்ளடக்கங்களை பதிவிடும் ஒருவர், புதிய காணொளிக் காட்சிகளை வெளியிடும் போது, அதனை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஒருவரின் கணக்கு நீக்கப்படும் போது, ரசிகர்களோடு அவருக்கும் இருக்கு தொடர்பும், வியாபாரத் தொடர்பும் உலகில் அணைத்துப் பகுதியிலும் துண்டிக்கப்படுகின்றன. இதனால், அவர்களுக்கு வருகின்ற வருவாய் இழப்போடு, வாழ்க்கையும் பதிக்கப்படுகிறது.
பல பதிவுகள் கற்பனைக்கு சிலவற்றையே விட்டு செல்கின்றன. ஆனால், பதிவிடுவதற்கான வழிகாட்டு நெறிகள் தெளிவில்லா நிலையிலும், செயல்படுத்துவதில் தொடர்ச்சி இல்லாமலும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.கோடை காலத்தில் "போல் டான்சர்" போன்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிடப்பட்ட உள்ளடக்கங்களுக்கு எதிராக இன்ஸ்டாகிராம் ஒரு நடவடிக்கை எடுத்தது. ஆனால், பின்னர் மன்னிப்புக் கோரி அதன் கொள்கையை மாற்றிக் கொண்டது. ஆனாலும், தனது விதிமுறைகளுக்கு எதிராக பதிவிடப்படும் மற்றும் பகிரப்படும் உள்ளடக்கங்களை, ஹேஷ்டேக்குகளை இது தடை செய்கிறது. சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இதுவே தீவிரமான தணிக்கை என்கின்றனர் விமர்சகர்கள். இதனால், பாலியல் தொழிலாளர்கள், பாலியல் கல்வி அளிப்போர் மற்றும் போல் நடனமாடும் சமூகம் பாதிக்கப்படுவதாகவும் அயல் நாடுகளில் கூறுகின்றனர்.
புகழ்பெற்ற பிரபலங்கள் தங்களின் புகைப்படங்களைப் பதிவிடும் போது, பிகினி உடையில் அவர்கள் தங்களின் காணொளியை பதிவிட முடியவில்லை. உங்களுக்கு ஆதரவு அளிக்கப்படவில்லை. நீங்கள் செய்வதற்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது" என்கிறார் அயல் நாட்டில் வாழும் போல் நடனப் பெண் கலைஞர் இந்தச் சூழல் தற்போது இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இன்ஸ்டோகிராம் பதிவுகள் குறித்த புகார் ஒன்று நமது பார்வைக்கு வந்தது அந்தப் புகார் மனு புதுக்கோட்டை மாவட்ட பூஜியக் குற்றப்பிரிவில் சமூக ஈடுபாடுள்ள இழுப்பூரில் வசிக்கும் ஒரு இளைஞரான வீர.சரத்பவார் என்பவர் தனது புகார் மனுவில் "பெண்களை மறைந்திருந்து வீடியோ பதிவு செய்து அதை ஆபாசமான கருத்துக்களுடன் பல இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருவதாகவும் .அதில் பெண்கள் உடை மாற்றம் குளியல் கூட அடங்கியுள்ளதெனவும் இவ்வகையான பக்கங்களால் ஆயிரத்திற்கும் மேற்படியானவர்கள் பாதிக்க பட்டிருப்பதாகவும் . இவ்வகையான பக்கங்களின் எண்ணிக்கையே பத்தாயிரத்துக்கும்க்கும் அதிகம் உள்ள. இவ்வகையான பக்கங்களில் பிரபலமான ஆறு பக்கங்களைச் சுட்டிக்காட்டி அதன் விபரத்தை சேகரித்து அந்த பக்கங்களை இயக்கும் அட்மின்களைக் கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட பூஜியக் குற்ற காவல் பிரிவில் சமூக நலன் காக்கும் நோக்கத்துடன் இழுப்பூரில் வசிக்கும் வீர.சரத் பவார், என்ற இளைஞர் அவரது நண்பர்களான ஏ.முகமது யூசுப் ஆகியோருடன் சென்று புகார் அளித்துள்ளார். இந்த பக்கங்களின் அட்மின்களை உடனடியாக கைது செய்து அவர்களின் மொபைலில் உள்ள அனைத்து பெண்களின் விடீயோக்களை நீக்கம் செய்து பக்கங்களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்து நமது நாட்டில் பெண்கள் மற்றும் இளைய சமூகத்தின் கலாச்சார பண்பாட்டைப் அதன் பாதுகாப்பை உறுதிபடுத்திடவேண்டும் எனவும் நம்மிடம் தெரிவித்தார், அதன்படி இதன் பேரில் காவல்துறையின் நடவடிக்கை வருமா என்பது குறித்து இனிமேல் தான் தெரியவரலாம் . இதில் என்ன மாதிரி நடவடிக்கை தேவை,அதில் உள்ளடகங்கிய நேர்முகக் குற்றவாளிகள் யார் அல்லது மறைமுகக் குற்றவாளி யார் யார்மீது நடவடிக்கை தேவை,குற்றம் செய்த பக்கங்களின் விபரம் கண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க நமது நாட்டிற்கு அப்பால் நடக்கும் குற்றங்களை சட்டத்தில் வழி தடுக்க வாய்ப்பு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை வரும் என்றே அந்த இளைஞர்களின் நம்பிக்கை அதை நாமும் வரவேற்போம்.
கருத்துகள்