9 மற்றும் 10-ம் வகுப்புகளில் இடைநிற்றலை குறைப்பதற்காக மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் மூலம் பழங்குடியின மாணவர்களுக்காக 10-ம் வகுப்பு வரையிலான கல்வி உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது
9 மற்றும் 10-ம் வகுப்புகளில் இடைநிற்றலை குறைப்பதற்காக மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் மூலம் பழங்குடியின மாணவர்களுக்காக 10-ம் வகுப்பு வரையிலான கல்வி உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொடக்க கல்வி முதல் இரண்டாம் நிலை கல்வி வரையிலான இடைநிற்றல் குறைந்துள்ளது. அம்மாணவர்கள் 9 மற்றும் 10-ம் வகுப்பில் கற்பது அதிகரித்துள்ளது.
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறையின் அறிக்கையின் படி, கடந்த 2019-20-ம் ஆண்டில் 1 வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பழங்குடியின மாணவர்களின் மொத்த சேர்க்கை வீதம் 102.08 ஆக இருந்தது. அதே போல் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் படித்தவர்களின் சதவீதம் 2012-13-ம் ஆண்டில் 62.4 சதவீதமாக இருந்த நிலையில், 2019-20-ம் ஆண்டில் 76.7 சதவீதமாக அதிகரித்தது.
இத்தகவலை மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு பிஸ்வேஸ்வர் துடு மக்களவையில் தெரிவித்தார்.
கருத்துகள்