தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆம் நிதி ஆண்டு நிதிநிலை
அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார், தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
2023-24 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று பல முக்கியமான அறிவிப்புகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவையில் வெளியிட்டார்.
கரிநாளில்..எம கண்ட நேரத்தில் தாக்கலான பட்ஜெட் உரையில், நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் மகளிர் உரிமைத்தொகைத்' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும்.
நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4 லிருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. ரூபாய் 4,236 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூபாய் 40 லட்சத்திலிருந்து ரூபாய் 50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தாம்பரம், ஆவடி, கோயமுத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi நிறுவி சேவைகள் வழங்கப்படும். வருவாய் பற்றாக்குறை இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயில்களின் பெருந்திட்டப் பணிகள் ரூபாய் 485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
வரப்போகும் நிதியாண்டில் 400 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு விழா நடத்தப்படும், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத்தலைவிகளுக்கு, வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் ரூபாய் 1000 உரிமைத்தொகை வழங்கப்படும், என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பில் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் சிலர் வட இந்தியர் விவகாரத்தை வைத்து சிலர் அரசியல் செய்யப் பார்க்கிறார். சிலர் அதை வைத்து மோதலை ஏற்படுத்தவும் பார்க்கிறார்கள். அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதை தடுத்து நிறுத்தியுள்ளோம். அது தொடர்பாக வதந்தி பரப்பிய நபர்கள் உடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பேர் மீது வழக்கும் பதியப்பட்டு உள்ளதில் தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டு பிரச்சனைகளை சரி செய்துள்ளது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பீகார் மாநில அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்பட்டு வடஇந்திய மக்களுக்குத் தேவையான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது, என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பின் இடையில் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருந்த நிலையில் பட்ஜெட் உரையிலேயே நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதற்கெதிராக அவையில் அப்போதிருந்த பாரதிய ஜனதா கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினரும் எதுவும் பேசாமல் அமைச்சரின் உரையை கேட்டுக்கொண்டிருந்தனர்.
வட இந்தியர் பாதுகாப்பு விவகாரம் தமிழ்நாட்டில் உச்சம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூகவளைதளங்களில் கடந்த சில நாட்களாக பொய்யாக பல காணொளிக்காட்சிகள் வேகமாகப் பரவியது அதன் காரணமாகவே நிதியமைச்சர் உரையில் குறிப்பிட்டதாகும்.மதுரை மையப்பகுதியில் நிலத்துக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் மதுரையில் ரூபாய்.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமெனவும் நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் பல வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனால் போக்குவரத்து நெரிசலின்றி பலர் பயணம் செய்கின்றனர். சென்னையைப் போலவே கோயமுத்தூரிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் அதற்காக 2023-24 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய்.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் 2025 ஆம் ஆண்டில் நிறைவுபெறும். மதுரையின் மையப்பகுதியில் நிலத்துக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.கோயமுத்தூரில் ரூபாய்.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமென நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுமென நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்