விண்வெளித்துறை நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து ரூ.470 கோடி மதிப்பீட்டில் புவி அறிவியல் செயற்கைக்கோள், நிசார்-ஐ உருவாக்கியுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்
நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து ரூ.470 கோடி மதிப்பீட்டில் புவி அறிவியல் செயற்கைக்கோள், நிசார்-ஐ உருவாக்கியுள்ளது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இரட்டை அதிர்வெண் ரேடார் ஒப்புமை செயற்கைக்கோளை வடிவமைத்து, மேம்படுத்தி தொடங்குவது தான் நிசார் செயற்கைக்கோளின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் மேற்பரப்பு சிதைவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், நிலப்பரப்பு உயிரி அமைப்பு, இயற்கை ஆதார வழித்தடங்கள் போன்றவற்றை விரிவாக தெரிந்துகொள்வது தொடர்பான புத்தம்புது செயல்பாடுகளை ஏற்படுத்த முடியும்.
இந்த தகவலை மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்