முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஒரு வாரக் கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஒரு வாரக் கொண்டாட்டம் தேசிய நவீன ஓவியக் காட்சிக் கூடத்தில் இன்று தொடங்கியது

சர்வதேச மகளிர் தினத்தை தேசிய நவீன ஓவியக் காட்சிக் கூடம் மார்ச் 7 முதல் 12 வரை  ஒரு வார காலத்திற்குக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் மையப்பொருள் “அனைவருக்கும் டிஜிட்டல்: பாலின சமத்துவத்துக்கான புதிய கண்டுபிடிப்பும், தொழில்நுட்பமும்” என்பதாகும்.

“புகைப்படக் கலையைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பிலான கண்காட்சியுடன் இன்று இந்தக் கொண்டாட்டங்கள் தொடங்கின. இந்தக் கண்காட்சியில் 60க்கும் அதிகமான சமகால பெண் புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

பெண் ஓவியர்களுக்கான ஓவியப் பயிலரங்கிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் திரையிடுதல், உரைகள், குழந்தைகளுக்கான சிறப்புப் புத்தக வெளியீடு போன்றவற்றுக்கும் அருங்காட்சியகம் ஏற்பாடு செய்துள்ளது.2023 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தையொட்டி 10 நகரங்களில் பல்வேறு போட்டிகளுக்கு கேலோ இந்தியா ஏற்பாடு செய்துள்ளது ; பிரபல விளையாட்டு வீராங்கனைகள் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

2023 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தையொட்டி 10 நகரங்களில் பல்வேறு போட்டிகளுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறையின் சார்பில்  கேலோ இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச நிகழ்வு ஒன்றைக் கொண்டாட இத்தகைய விளையாட்டு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதனை நடத்த மத்திய அமைச்சகம் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

தேசியத் தலைநகர் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மார்ச் 10 அன்று நடைபெறும் தொடக்க நிகழ்வில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கலந்துகொள்வார். இந்தப் போட்டித் தொடர் மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறும். இந்த நிகழ்வுகளில் சுமார் 15,000 விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.

இந்திய ஹாக்கி வீராங்கனை ராணி, குத்துச்சண்டை வீராங்கனை நிக்கத் ஸரின் உட்பட நாட்டின் பிரபல விளையாட்டு வீராங்கனைகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் பெண்களை உற்சாகப்படுத்தும் வீடியோக்களை பதிவு செய்திருப்பதோடு, இவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

கோகோ, மல்யுத்தம், வாள்வீச்சு, வில்வித்தை, நீச்சல், கூடைப்பந்து, ஜூடோ, தடகளப் போட்டிகள், யோகாசனம், வூஷு உள்ளிட்ட விளையாட்டுக்கள் இந்தப் போட்டிகளில் இடம் பெறும். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க இயலாத விளையாட்டு வீராங்கனைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற வாய்ப்பு இல்லாத இடங்களிலும் விளையாட்டுப் போட்டிகளை  உறுதி செய்வதும் இந்தப் போட்டித் தொடரின் முக்கிய நோக்கமாகும்மகளிருக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்த சர்வதேச மகளிர் தின கருத்தரங்கு

பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் குறித்த அமர்வு

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரி, அம்பத்தூர் ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவம் என்ற 3 நாள் கருத்தரங்கு 2023 மார்ச் 6, முதல் அம்பத்தூரில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கருத்தரங்கின் 2-வது நாளான இன்று, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமாகக் கலந்துகொண்டனர். இன்றைய இரண்டாம் அமர்வில் மகளிருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்ட விழிப்புணர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பார்வையற்ற வழக்கறிஞர் கற்பகம் கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்புக்கென உள்ள சட்டங்கள் குறித்து விளக்கினார். போக்சோ சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது, விசாகா சட்டம் எப்படி இயற்றப்பட்டது என்பது பற்றிய தகவல்களை அவர் தெரிவித்தார்.

தெரிந்த விவரங்களை மறைப்பதும், போக்சோ சட்டத்தின்படி ஆறுமாத தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  பணியிடங்களில் பாலின ரீதியாக நடக்கும் துன்புறுத்தல்கள் விசாகா சட்டத்தின் கீழ் வரும் என்று கூறிய அவர், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பற்றியும் விளக்கினார்.  மாணவ மாணவியரின் சட்டம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் அளித்த வழக்கறிஞர் கற்பகம், எந்தக் கட்டத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆணவக் கொலைகளும், கொலை தான் என்று குறிப்பிட்ட அவர், இந்திய சட்டங்களின்படி, விவாகரத்து உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொண்டு கருக்கலைப்பு செய்வதை தடுப்பதற்காக பிரத்யேக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மகளிர் அதிகாரம் அளித்தலில் ஒரு தடை என்ற தலைப்பில், சென்னை மாநகரக் காவல்துறை துணை ஆணையர்  டாக்டர் ஜி வனிதா உரையாற்றினார்.  குடும்பத்தில் பலவீனமான குழந்தைகளைத் தாயார் நன்கு கவனித்து உணவூட்டுவது   போல, சமுதாயத்தில் பலவீனமானவர்களாகக் கருதப்படும் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும், ஒரு காலத்தில் வீட்டுக்குள் அடங்கிக் கிடந்த பெண்கள் இப்போது அதிக அளவில் வெளியே வந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும், வேலைகளுக்கும் சென்று வருவதாக அவர் குறிப்பிட்டார். 

இருப்பினும், பாலின சமத்துவம் என்பது இன்னும் ஏட்டளவில்தான் உள்ளது என்று கூறிய அவர், மகளிர் அதிகாரம் அளித்தலை சமுதாயம் தான், குறிப்பாக ஆண்கள்தான் மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெருங்குற்றங்கள் எவை எவை என்று பட்டியலிட்ட டாக்டர் ஜி வனிதா, திராவக வீச்சு, வரதட்சணைக் கொலை, ஆணவக்கொலை, பாலின துன்புறுத்தல், கடத்தல், பெண்களைக் கடத்துதல், பெண்களைக் கேலி செய்தல், இணையவழிக் குற்றங்கள், பின்தொடர்ந்து துன்புறுத்துதல், ஆபாச படங்கள் ஆகியவை இந்தப் பெரிய குற்றங்களில் அடங்கும் என்று தெரிவித்தார். அந்தக் குற்றங்களின் தன்மையை விவரித்த அவர், பெண்களைப் பற்றிய சமுதாயத்தின் மனநிலையில் மாறுதல் ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தினார். 2021-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, தேசிய குற்ற விகிதம் 4,28,278-ஆக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், பெண்களுக்கு ஆதரவளிப்பதை வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.   

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவு என்று தெரிவித்த அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக கூடுதல் தலைமை இயக்குநர் தலைமையில் தனிக்குழு  இருப்பதாகத் தெரிவித்தார். பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவதற்கு உள்ள தடையை தூக்கி எறிய வேண்டும் என்றும் அதற்கு ஆண்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் மாணவ மாணவியரின் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்.பெண்களுக்கு அறிவு சார்ந்த பாலியல், இனப்பெருக்க உரிமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது: திருமதி கீதா இளங்கோவன்

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு சமூகக் கட்டமைப்பில் மாற்றம் அவசியம்: டாக்டர் ரசியா பர்வீன்

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது ஒவ்வொரு தேசத்திற்கும் இன்றியமையாதது: திருமதி ஷீபா ராணி

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவை சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம்  மற்றும் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரி, அம்பத்தூர் இணைந்து சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்  பாலின சமத்துவம் என்ற 3 நாள் கருத்தரங்கு மார்ச் 6, 2023 முதல் நடைபெற்று வருகிறது.

இந்தக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் முதல் அமர்வில் மகளிருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்டங்களும், கொள்கை நடவடிக்கைகளும் என்ற தலைப்பில்   எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான  திருமதி கீதா இளங்கோவன், ராணி  மேரி கல்லூரி, வரலாற்றுத்துறை தலைவர் டாக்டர் ரசியா பர்வீன், அரசு யோகா & இயற்கை மருத்துவமனை, மருத்துவ அதிகாரி திருமதி ஷீபா ராணி ஆகியோர் தங்களது முக்கிய கருத்துக்களை முன்வைத்தனர்.

திருமதி கீதா இளங்கோவன் பேசுகையில், “உடல் உழைப்பிற்கான ஆயுதம்”. பெண்களுக்கு அறிவு சார்ந்த பாலியல், இனப்பெருக்க உரிமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது.   இதற்கு அறிவியலில் இருந்தே  தொடங்குவது மிகப் பொருத்தமாக இருக்கும். அப்போது தான் அறிவியல் சார்ந்த விஷயங்கள் பற்றி தெளிவுப்படுத்த முடியும். இந்தியாவில், சுமார் 40 சதவீத பெண்களுக்குத் தான் நாப்கின் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பெண்களுக்கு தங்களுக்கான இணையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை இருக்கின்றதா?  நமது சமூக கட்டமைப்பில் பெண்கள் தங்களுக்கானதை பெறுவதற்கு அடிப்படை உரிமை வழங்கப்படவில்லை. சாதியின் பெயரால் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது.  பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்படி உரிமை உண்டு. ஆனால் இந்த சமூகம் அதனை வழங்க மறுக்கிறது” என்றார்.

சரி ஆண்களுக்காவது அடிப்படை உரிமை அளிக்கப்படுகின்றதா என்றால் அதுவுமில்லை என்று பொருள்படும் அளவிற்கு இந்த சமூகக் கட்டமைப்பு உள்ளது.  பெண்கள் வயதுக்கு வரும் போது அவர்களின் தாய்மார்கள் தேவையான அடிப்படை ஆலோசனைகளை வழங்கிவிடுகின்றனர்.  ஆனால் ஆண்பிள்ளைகளின் நிலைமை அவ்வாறு இல்லை. எங்காவது ஆண்பிள்ளைகளிடம் அவர்களது தந்தை வயது மாற்றம் குறித்து கலந்துரையாடுகிறார்களா என்றால் இல்லை.  எனவே ஆண் பிள்ளைகளுக்கு உடல் பற்றிய அறிவு சமபந்தமாக முறையாக ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அது போலவே, திருமணம், பாலியல் சார்ந்த அறிவு போன்றவைகள் முறையாக அளிக்கப்பட வேண்டும் என்றார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இந்த சமூகக் கட்டமைப்பில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்களுக்கு அனைத்து வகையான சமூக அவலங்களையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களின்  உணர்வுகளுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும் என்றார்.

அடுத்ததாக பேசிய ராணி மேரிக் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் டாக்டர் ரசியா பர்வீன், “மக்களின் மனப்பான்மையிலேயே ஒருதலைப்பட்ச உணர்வு உள்ளது. சாதி, மத அடிப்படையில், பெண்களுக்கு பாலின சமத்துவம் அளிக்கப்படவில்லை. ஒரே மாதிரியான போக்கு மனப்பான்மையுடன், இந்த சமூகம் இருப்பதன் விளைவாக ஆண் – பெண் சமத்துவமின்மை இல்லாத நிலை உள்ளது. பெண்களுக்கு ஞாபக ஆற்றலும், பார்க்கும் திறனும் அபார சக்தி கொண்டது. பெண்களுக்கு தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தி அவர்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொணர முடியாத நிலை உள்ளது. பெண்கள் தங்களது கடமைகளை உணர்ந்து அதிக அளவில் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து ஆண்களின் ஆதரவோடு சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

இன்றைய கால கட்டத்தில் மனிதன் மிகவும் சுயநலப் போக்குடன் செயல்பட்டு வருகிறான்.  அதிகாரம் அளிக்கப்படுவது என்பது ஒவ்வொருவரின் உள் உணர்விலிருந்து வெளிப்பட வேண்டும். அதற்கு  இந்த சமூக கட்டமைப்பில்  மாற்றம் ஏற்பட வேண்டும். பெண்கள் தங்களுக்கு எது வேண்டுமோ அதை உறுதிபட கேட்க வேண்டும். 

முதல் அமர்வில் இறுதியாக பேசிய அரசு  யோகா & இயற்கை மருத்துவமனை, மருத்துவ அதிகாரி திருமதி ஷீபா ராணி,  “பெண்களுக்கு அனைத்து வகையிலும் ஏற்படக் கூடிய பிரச்னைகளை, ஆண்கள் நன்கு உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.   பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது ஒவ்வொரு தேசத்திற்கும் மிக அவசியமாகும் என்றார்.பெண்களுக்கு அறிவு சார்ந்த பாலியல், இனப்பெருக்க உரிமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது: திருமதி கீதா இளங்கோவன்

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு சமூகக் கட்டமைப்பில் மாற்றம் அவசியம்: டாக்டர் ரசியா பர்வீன்

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது ஒவ்வொரு தேசத்திற்கும் இன்றியமையாதது: திருமதி ஷீபா ராணி

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவை சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம்  மற்றும் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரி, அம்பத்தூர் இணைந்து சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்  பாலின சமத்துவம் என்ற 3 நாள் கருத்தரங்கு மார்ச் 6, 2023 முதல் நடைபெற்று வருகிறது.

இந்தக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் முதல் அமர்வில் மகளிருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்டங்களும், கொள்கை நடவடிக்கைகளும் என்ற தலைப்பில்   எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான  திருமதி கீதா இளங்கோவன், ராணி  மேரி கல்லூரி, வரலாற்றுத்துறை தலைவர் டாக்டர் ரசியா பர்வீன், அரசு யோகா & இயற்கை மருத்துவமனை, மருத்துவ அதிகாரி திருமதி ஷீபா ராணி ஆகியோர் தங்களது முக்கிய கருத்துக்களை முன்வைத்தனர்.

திருமதி கீதா இளங்கோவன் பேசுகையில், “உடல் உழைப்பிற்கான ஆயுதம்”. பெண்களுக்கு அறிவு சார்ந்த பாலியல், இனப்பெருக்க உரிமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது.   இதற்கு அறிவியலில் இருந்தே  தொடங்குவது மிகப் பொருத்தமாக இருக்கும். அப்போது தான் அறிவியல் சார்ந்த விஷயங்கள் பற்றி தெளிவுப்படுத்த முடியும். இந்தியாவில், சுமார் 40 சதவீத பெண்களுக்குத் தான் நாப்கின் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பெண்களுக்கு தங்களுக்கான இணையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை இருக்கின்றதா?  நமது சமூக கட்டமைப்பில் பெண்கள் தங்களுக்கானதை பெறுவதற்கு அடிப்படை உரிமை வழங்கப்படவில்லை. சாதியின் பெயரால் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது.  பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்படி உரிமை உண்டு. ஆனால் இந்த சமூகம் அதனை வழங்க மறுக்கிறது” என்றார்.

சரி ஆண்களுக்காவது அடிப்படை உரிமை அளிக்கப்படுகின்றதா என்றால் அதுவுமில்லை என்று பொருள்படும் அளவிற்கு இந்த சமூகக் கட்டமைப்பு உள்ளது.  பெண்கள் வயதுக்கு வரும் போது அவர்களின் தாய்மார்கள் தேவையான அடிப்படை ஆலோசனைகளை வழங்கிவிடுகின்றனர்.  ஆனால் ஆண்பிள்ளைகளின் நிலைமை அவ்வாறு இல்லை. எங்காவது ஆண்பிள்ளைகளிடம் அவர்களது தந்தை வயது மாற்றம் குறித்து கலந்துரையாடுகிறார்களா என்றால் இல்லை.  எனவே ஆண் பிள்ளைகளுக்கு உடல் பற்றிய அறிவு சமபந்தமாக முறையாக ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அது போலவே, திருமணம், பாலியல் சார்ந்த அறிவு போன்றவைகள் முறையாக அளிக்கப்பட வேண்டும் என்றார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இந்த சமூகக் கட்டமைப்பில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்களுக்கு அனைத்து வகையான சமூக அவலங்களையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களின்  உணர்வுகளுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும் என்றார்.

அடுத்ததாக பேசிய ராணி மேரிக் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் டாக்டர் ரசியா பர்வீன், “மக்களின் மனப்பான்மையிலேயே ஒருதலைப்பட்ச உணர்வு உள்ளது. சாதி, மத அடிப்படையில், பெண்களுக்கு பாலின சமத்துவம் அளிக்கப்படவில்லை. ஒரே மாதிரியான போக்கு மனப்பான்மையுடன், இந்த சமூகம் இருப்பதன் விளைவாக ஆண் – பெண் சமத்துவமின்மை இல்லாத நிலை உள்ளது. பெண்களுக்கு ஞாபக ஆற்றலும், பார்க்கும் திறனும் அபார சக்தி கொண்டது. பெண்களுக்கு தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தி அவர்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொணர முடியாத நிலை உள்ளது. பெண்கள் தங்களது கடமைகளை உணர்ந்து அதிக அளவில் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து ஆண்களின் ஆதரவோடு சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

இன்றைய கால கட்டத்தில் மனிதன் மிகவும் சுயநலப் போக்குடன் செயல்பட்டு வருகிறான்.  அதிகாரம் அளிக்கப்படுவது என்பது ஒவ்வொருவரின் உள் உணர்விலிருந்து வெளிப்பட வேண்டும். அதற்கு  இந்த சமூக கட்டமைப்பில்  மாற்றம் ஏற்பட வேண்டும். பெண்கள் தங்களுக்கு எது வேண்டுமோ அதை உறுதிபட கேட்க வேண்டும். 

முதல் அமர்வில் இறுதியாக பேசிய அரசு  யோகா & இயற்கை மருத்துவமனை, மருத்துவ அதிகாரி திருமதி ஷீபா ராணி,  “பெண்களுக்கு அனைத்து வகையிலும் ஏற்படக் கூடிய பிரச்னைகளை, ஆண்கள் நன்கு உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.   பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது ஒவ்வொரு தேசத்திற்கும் மிக அவசியமாகும் என்றார்.சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய தர அமைவனம் சார்பில் “இர

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ் ) அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது

ஒவ்வொரு ஆண்டும், சமூகத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் பெண்களின் சாதனைகள் மற்றும் அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்களை அங்கீகரிக்க மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடும் உலகளாவிய தினமாகும். பாலின சமத்துவத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைக்கான அழைப்பையும் இந்த நாள் குறிக்கிறது. பெண்களின் சாதனைகளைக் கொண்டாட அல்லது பெண்களின் சமத்துவத்திற்காக அணிதிரள்வதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகின்றது .

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய தர நிர்ணய அமைவனம் , தென் மண்டல அலுவலகம், சென்னை இன்று மற்றும் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

BIS, இன்று, 07 மார்ச் 2023, VHS (Voluntary Health Services ), பல்நோக்கு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை உடன் இணைந்து இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தது. இந்த இரத்த தான முகாமை ஸ்ரீ யுஎஸ்பி யாதவ், விஞ்ஞானி-F  மற்றும் துணை இயக்குநர் ஜெனரல் (தெற்கு மண்டலம்) தொடங்கி வைத்தார். Smt.G.பவானி, விஞ்ஞானி-E  மற்றும் தலைவர் (சென்னை கிளை அலுவலகம்) அனைத்து ஊழியர்களையும் இரத்த தானம் செய்ய ஊக்குவித்தார். இந்த நிகழ்வில் BIS இன் சுமார் 30 ஊழியர்கள் தங்கள் இரத்தத்தை தானம் செய்தனர்.

நாளையும் , சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு BIS 08 மார்ச் 2023 அன்று ஊழியர்களுக்காக பல்வேறு உள் நிகழ்ச்சிகள்/கலாச்சார நிகழ்ச்சிகள்/விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...