முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமரின் விஸ்வகர்மா திறன் கௌரவிப்பு குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு

‘பிரதமரின் விஸ்வகர்மா திறன் கௌரவிப்பு (பிஎம் விகாஸ் )’ குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நிகழ்த்திய உரை (தமிழாக்கம்)



வணக்கம்!

கடந்த சில நாட்களாக, பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒவ்வொரு பட்ஜெட்டுக்குப் பிறகும் பங்குதாரர்களிடம் பட்ஜெட் குறித்துப் பேசுவதை நாங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் கூடியவரை விரைவாகவும்  கவனம் செலுத்தும் வகையிலும் பட்ஜெட்டை எவ்வாறு அமல்படுத்த வேண்டும்? பங்குதாரர்கள் என்ன ஆலோசனைகளை வழங்குகிறார்கள்? அவர்களின் பரிந்துரைகளை அரசு எவ்வாறு செயல்படுத்த வேண்டும்? என்பதற்கான சிந்தனை அமர்வுகள் மிக நன்றாக நடக்கின்றன. பட்ஜெட்டுடன் நேரடித் தொடர்புள்ள அனைத்து வர்த்தகம் மற்றும் தொழில்துறையினருடனும் சங்கங்களுடனும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், பழங்குடியினர், நமது தலித் சகோதர சகோதரிகளுடனும் மற்றும் ஆயிரக்கணக்கான பங்குதாரர்களுடனும் கலந்துரையாடியதில் சிறந்த ஆலோசனைகள் வெளிவந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அரசிற்கும் பயனுள்ள ஆலோசனைகள் கிடைத்துள்ளன. மேலும், இம்முறை பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில், பட்ஜெட்டில் என்ன இருந்திருக்க வேண்டும் அல்லது இருந்திருக்கக் கூடாது என்று விவாதிக்காமல், இந்த பட்ஜெட்டை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான வழிகள் குறித்து அனைத்துப் பங்குதாரர்களும் திட்டவட்டமாக விவாதித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

பிரதமரின்  விஸ்வகர்மா திறன் கௌரவிப்புத் திட்டம்  அல்லது சுருக்கமாக  பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்பது  இந்த சிந்தனையின் விளைவு. இந்த பட்ஜெட்டில் பிரதமரின் விஸ்வகர்மா திட்ட அறிவிப்பு பரவலான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது; ஊடகங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நண்பர்களே!

கைவினைஞர்கள், உள்ளூர் கைவினைப் பொருட்களை சிறிய அளவில் உற்பத்தி செய்வதிலும், பொதுமக்களுக்கு அவர்களின் ஈர்ப்பைத் தக்கவைப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் அவர்களின் பங்களிப்பு  சமூகத்தின் தயவில் விடப்பட்டது, மேலும் அவர்களின் பங்கு குறைத்து மதிப்பிடப்பட்டது.

இப்போது  திறன் உள்கட்டமைப்பு அமைப்பை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நாம் மாற்றியமைக்க வேண்டும்.  முத்ரா திட்டம்  மூலம் வங்கி உத்தரவாதம் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை அரசு தற்போது வழங்குகிறது. இந்தத் திட்டம் நமது  கைத்தொழில் செய்யும்  நண்பர்களுக்கு அதிகபட்ச நன்மையை உறுதிசெய்ய வேண்டும். நமது டிஜிட்டல் கல்வியறிவு இயக்கங்களில், கைத்தொழில் செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நண்பர்களே!

இன்றைய கைவினைஞர்களை நாளைய  தொழில்முனைவோராக மாற்றுவதே எங்கள் நோக்கம். இதை மனதில் வைத்து, கவர்ச்சிகரமான வடிவமைப்பு, பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் மூலம் அவர்கள் தயாரிக்கும் தயாரிப்புகளை மேம்படுத்தவும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இதில், வாடிக்கையாளர்களின் தேவைகளும் கவனிக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் உள்ளூர் சந்தையை மட்டுமல்ல, உலகச் சந்தையையும் குறிவைத்து வருகிறோம். இன்று இங்கு கூடியிருக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் நமது கைவினைஞர் நண்பர்களுடன் கைகோர்த்து, அவர்களின் விழிப்புணர்வை அதிகரித்து, அவர்கள் முன்னேற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக, நீங்கள் அனைவரும் முடிந்தவரை இந்தக்  கைவினைஞர்களுடன் இணைந்திருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்; மேலும் அவர்களை அணுகி அவர்களின் கற்பனைகளுக்கு சிறகுகளை அளியுங்கள்.

நண்பர்களே!

கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை மதிப்புச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம்தான்  நாம் அவர்களை மேம்படுத்த முடியும். அவர்களில் பலர் நமது எம்எஸ்எம்இ துறைக்குப் பொருட்கள் வழங்குவோராகவும், தயாரிப்பாளர்களாகவும் மாறலாம். கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியை அவர்களுக்கு வழங்குவதன் மூலம், பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக அவர்களை உருவாக்க முடியும். இந்த மக்களை அவர்களின் தேவைகளுடன் இணைப்பதன் மூலம் தொழில்துறை உலகம் உற்பத்தியை அதிகரிக்க முடியும். அவர்களுக்குத் திறன் மற்றும் தரமான பயிற்சியையும் தொழில்துறை வழங்க முடியும்.

நண்பர்களே!

இன்று இணையவழிக் கருத்தரங்கின் கடைசி அமர்வு. இதுவரை, பட்ஜெட்டின் வெவ்வேறு பகுதிகள் குறித்து 12 இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளோம். இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கவுள்ளது. அனைத்து எம்.பி.க்களும் புதிய நம்பிக்கை மற்றும் புதிய ஆலோசனைகளுடன் நாடாளுமன்றத்திற்கு வருவார்கள். பட்ஜெட் நிறைவேற்றப்படும் வரை செயல்பாட்டில் புதிய உற்சாகம் காணப்படும். இந்தச் சிந்தனை அமர்வுகள் தனித்துவமான முயற்சியாகும்; இது ஒரு பயனுள்ள முயற்சி; மொத்த நாடும் ஒவ்வொரு மாவட்டமும் இதனுடன் இணைந்திருக்கின்றன. நேரத்தை ஒதுக்கி இந்த இணையவழிக் கருத்தரங்கை  செழுமைப்படுத்தியவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இன்று வருகை தந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதுவரை இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தி, அதை முன்னெடுத்துச் சென்ற மற்றும் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...