ஓய்வூதியயர்களின் குறைதீர்வு முகாம் தமிழகத்தைச் சேர்ந்த DoT & BSNL ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான ஓய்வூதிய குறை தீர்வு முகாம், 03.03.2023 அன்று 1000 மணி முதல் 1300 மணி வரை, மதுரை - 625 002, கோரிப்பாளையத்தில் உள்ள ஹோட்டல் நார்த் கேட்டில் நடைபெற்றது.
DoTயின் 28 களப் பிரிவுகளில் ஒன்றான, சென்னை, தமிழ்நாடு வட்டம், தகவல் தொடர்பு கணக்கு முதன்மைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், ஓய்வூதியம் பெறுவோரின் குறைகளை, காலாண்டு அடிப்படையில், ஓய்வூதிய குறை தீர்வு மன்றம் மூலம் தீர்த்து வைப்பதற்கு இந்த சிறப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு வட்டம், தகவல் தொடர்பு கணக்கு முதன்மைக் கட்டுப்பாட்டாளர் அலுவலக ஓய்வூதிய குறை தீர்வு மன்றத்தை தகவல் தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளர், திரு சித்தரஞ்சன் பிரதான், அவர்கள் தொடக்கிவைத்து தலைமை தாங்கி நடத்தினார். இந்த மன்றத்தில் தகவல் தொடர்பு கணக்கு இணைக் கட்டுப்பாட்டாளர் (ஓய்வூதியம்), திருமதி கௌதமி பாலஸ்ரீ, தகவல் தொடர்பு கணக்கு இணைக் கட்டுப்பாட்டாளர் (PDA), திரு சஞ்சித் குமார், தகவல் தொடர்பு கணக்கு துணைக் கட்டுப்பாட்டாளர் (ஓய்வூதியம்), திரு ஏ.ஜி.மணி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த மன்றத்தில், ஓய்வூதியர் சங்கங்களின் பிரதிநிதிகள், தனிப்பட்ட ஓய்வூதியதாரர்கள், BSNL பிரிவுகள், ஓய்வூதியம் வழங்கும் வங்கி CPPC களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு வட்டத்தின் பொது மேலாளர் அலுவலகம் (அஞ்சல் கணக்குகள் மற்றும் நிதி) அதிகாரிகள் உட்பட, மொத்தம் 76 பேர் பங்கேற்றனர். திரு ஏ.ஜி.மணி, தகவல் தொடர்பு கணக்கு துணைக் கட்டுப்பாட்டாளர் (ஓய்வூதியம்), தனிப்பட்ட ஓய்வூதியதாரர்களின் குறைகளை ஒவ்வொன்றாக, ஓய்வூதியதாரர்கள் திருப்திப்படுத்தும் வகையில் தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவித்தார்.
ஓய்வூதிய குறை தீர்வு மன்றத்தில் மொத்தம் 81 எண்ணிக்கையிலான புகார்கள் அதாலத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அனைத்து 81 குறைகளும் தீர்க்கப்பட்டுள்ளன, அதாவது பெறப்பட்ட குறைகளில் 100% தீர்வு காணப்பட்டது.
கருத்துகள்