பெங்களூரைச் சேர்ந்த இதயநோய் நிபுணர், அவரது மகன் ஆகியோரின் மறுபயன்பாட்டு நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார்
கழிவிலிருந்து செல்வம், மறுபயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பெங்களூரைச் சேர்ந்த மூத்த இதயநோய் நிபுணர் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் ஆகியோரின் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
மற்றவர்களும் அதே போன்ற முயற்சிகளை மேற்கொண்டு கழிவிலிருந்து செல்வம், மறுபயன்பாடு குறித்த சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.
தமது மகனுடைய ஒவ்வொரு கல்வி ஆண்டு நிறைவிலும், அவருடைய நோட்டுப் புத்தகங்களில் உள்ள எழுதப்படாத தாள்களை எடுத்து அதை ஒன்றாக சேர்த்து இயல்பான பணி மற்றும் பயிற்சிக்காக பயன்படுத்துவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதை ட்விட்டரில் குறிப்பிட்டு எழுதியுள்ள மருத்துவருக்கு ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"இது நீடித்த வாழ்வுக்கான மிகப்பெரிய செய்தியுடன் கூடிய சிறந்த குழு முயற்சி. உங்களுடைய மகன் மற்றும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
மற்றவர்களும் அதே போன்ற முயற்சிகளை மேற்கொண்டு கழிவிலிருந்து செல்வம், மறுபயன்பாடு குறித்த சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்."
கருத்துகள்