முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மே மாதம் 10 ஆம் தேதி கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் களநிலவரம்

 மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு நடக்கும் பலப் பரிட்சையில் வெல்லவது சுலபமில்லை என்பதே வரும்  களநிலவரம்  


கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  116 இடங்களை பெற்றது. 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 103 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. அத் தேர்தலில்  எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டதால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் எச். டி.தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளத்தின் சார்பில் குமாரசாமி முதலமைச்சரானார். 


 அவர் தலைமையிலான அரசு 14 மாதங்கள் மட்டுமே நீடிக்க முடிந்தது. காங்கிரஸுடன் இணைந்து  மதசார்பற்ற ஜனதாதளத்தின்  சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ராஜினாமா செய்த நிலையில்  மீண்டும் அத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தி அதில் 12 இடங்களில் பாஜக வென்றதால் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்தது. கடும் விமர்சனத்துக்குள்ளான போதும்  எடியூரப்பா முதலமைச்சரானார்.‌ ஆயினும் எடியூரப்பாவுக்கும்  பி.எல். சந்தோஷுக்குமிடையே நிகழ்ந்த பனிப்போரில் கர்நாடகா மாநில பாரதிய ஜனதா கட்சி  மிகவும் பாதிப்படைந்து பலஹீணப்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.‌ அதன் காரணமாக  எடியூரப்பாவின் நிம்மதியுடன் சேர்த்து முதல்வர் பதவியும் பறிபோனது.  எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து இறக்கிவிட்டு பசவராஜ் பொம்மையை கர்நாடக மாநில முதல்வராக்கினார்கள். 



கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியிலும், ஜாதியிலும் முக்கிய தலைவராகவே பார்க்கப்பட்ட  எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிய விதத்தை கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினரே விரும்பாத நிலை.‌ எடியூரப்பாவை ஆதரித்த லிங்காயத்து சமூக மக்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கும் உள்ளாகி விட்டனர்.‌ 



இதெல்லாவற்றையும் விட. தற்போது ஆளும் முதல்வர் பசவராஜ் பொம்மை அரசின் மீது  எண்ணற்ற ஊழல் புகார்கள் குவித்தும் உள்ளது. "40 சதவீதம் கமிஷன் அரசு" என்ற அளவுக்கு கர்நாடகாவில் ஊழல் தாண்டவம்  தான் வரும் 2023 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றாகவே தெரியும். இதில் கடந்த முறை அமித்ஷா கர்நாடகாவுக்கு வந்த போது எடியூரப்பா மலர்க்கொத்து தர விழையும் போது அதை மறுத்து மலர்க்கொத்தை எடியூரப்பாவிடம் இருந்து பிடுங்கி அவரது மகனிடம் கொடுத்து தனக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதை எடியூரப்பா ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை. ஆடு பகை குட்டி உறவு என்கிற பாஜகவின் அரசியல் யுக்தியை அப்போது முதல் யாருமே ரசிக்கவில்லை.‌ என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.‌ அதன் காரணமாக 

கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியினர் தங்களுக்கு எடியூரப்பா ஆதரவு அதிமுக்கியம் எனக்கருதி தனித்தனியாக  எடியூரப்பாவின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்டு அவரது ஆதரவு கோருகின்றனர். எடியூரப்பாவின் இரு மகன்களான ராகவேந்திரா விஜயேந்திராவுக்க்கும் முக்கியத்துவம் அளிப்போமென்று கர்நாடகா பாரதிய ஜனதா கட்சித் தலைமை வாக்குறுதி கொடுத்துள்ளதாம்.‌ இருப்பினும் இதுவரை எடியூரப்பாவை தீவிரமாக ஆதரித்து வந்த லிங்காயத்து சமூக மக்களும்,  மடாதிபதிகளும், தொழிலதிபர்களும் தற்போது கட்சி மாநில அளவில் உள்ள சந்தோஷ் மீதுள்ள கோபத்திலிருப்பது கண்கூடு. எந்தக் கட்சியும் சாராத பொதுமக்களும் கூட பசவராஜ் பொம்மை அரசின் தொடர் ஊழல் முறைகேடுகளால் கடும் அவதியுற்று ஆளும் பாரதிய ஜனதா கட்சியின்  அரசு மீது கடுமையான கோபத்திலுள்ளனர்.  




கர்நாடகா சட்டமன்றத் தொகுதி எண்ணிக்கை 224. தனி மெஜாரிட்டிக்கு 113 தேவை. 

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை ஆறு பகுதிகளாக பிரித்து ஆராய்ந்தால் . 

முதலாவதாக . பெங்களூர்  நகர்ப்பகுதியில் வரும் 28 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த முறை பாரதிய ஜனதா கட்சி இங்கு 10 தொகுதிகளை வெற்றி காண்பதே சிரமம் என்பதே உண்மை நிலை.‌

அடுத்ததாக மைசூரு - மாண்டியா- ராம்நகர் - தும்கூர் - ஹசன் பகுதிகளிலில் 64 தொகுதிகளில் இங்கு எப்போதும் மதசார்பற்ற ஜனதாதளத்தின் ஆதிக்கம் . ஆனால் பாரதிய ஜனதா கட்சியும் இம்முறை இங்கு 10 லிருந்து 12 தொகுதிகள் வரை  ஜெயித்தால் அதுவே அதிகம். காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்தின் வாக்கு வங்கியும் அதிகரித்துள்ளது. ஆயினும் பல தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின்  எதிர்ப்பு வாக்குகளை ஜனதாதளம் காங்கிரஸ் இரண்டும் சரிபாதியாகப் பிரிக்கும் போது அத்தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி  குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.‌ ஆனால் இம்முறை பாரதிய ஜனதா கட்சி பல தொகுதிகளில் தோல்வி அடையும் நிலைதான் தெரிகிறது.

மூன்றாவதாக மகாராஷ்டிரா கர்நாடகா  எல்கையில்  பாகல்கோட், பெல்ஹாம், பிஜாப்பூர், ஹவேரி, தார்வார், கடக் பகுதிகளில் 50 தொகுதிகள் உள்ளது.‌ இங்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் நிலையில் இம்முறை மகாராஷ்டிரா கர்நாடகா இடையே உள்ள எல்லைத்தகராறு காரணமாக பாரதிய ஜனதா கட்சி பல தொகுதிகளில் தோல்வியடையும் நிலை தான் காணப்படுகிறது. 

நான்காவதாக  ஹைதராபாத் கர்நாடகா பகுதிகளான பெல்லாரி குல்பர்கா, பிதார் உள்ளிட்டவற்றில் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு பாரதிய ஜனதா கட்சிக்கு ரெட்டியார் சமூக மறைமுக ஆதரவு உண்டு. இரும்புத்தாது சுரங்க ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்கள் உதவி கிடைத்தால் மட்டுமே பாஜக இங்கு ஜெயிக்கும். 

ஐந்தாவதாக. மத்திய கர்நாடகத்தில் 23 தொகுதிகள் உள்ளன. இங்கு 7 லிருந்து 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி  வெற்றி பெறலாம்.

ஆறாவதாக . கடற்கரைக் கர்நாடகப்பகுதியில் 19 தொகுதிகள் உள்ளன. இங்கும் பாரதிய ஜனதா கட்சி பல தொகுதிகளில் தோல்வி பெறும்  என்ற நிலையில்.‌ 3 லிருந்து 5 தொகுதிகள் ஜெயித்தாலே அது அதிகம்.‌ மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பாஜக 60 லிருந்து 70 தொகுதிகள் ஜெயிக்கவே கடுமையாகப் போராட வேண்டுய நிலையில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.‌ அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் மதசார்பற்ற ஜனதாதளத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். 

எனவே எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில்  இம்முறை ஜெயிப்பது பாரதிய ஜனதா கட்சிக்கு குதிரைக் கொம்புதான். கடந்த 2018 தேர்தலில் வெற்றி பெற்ற 103 இடங்களாவது தக்கவைக்குமா என்பது கூட சந்தேகமே என்று கர்நாடகவில்  அக்கட்சியினரே அஞ்சுகின்றனர்.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை பாஜக அதிகமான இடங்களில் தோல்வி அடைந்து 60 லிருந்து 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று அரசியல் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். இதை எப்பாடுபட்டாவது மாற்ற பிரதமர் நரேந்திர மோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பஹீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். அதில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்  அண்ணாமலைக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் மிகமுக்கியப் பணியை கொடுத்துள்ளனர். 

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை பாஜக ஜெயிக்க வேண்டும் என்றால் பணத்தை தண்ணீர் போல செலவு செய்தால் மட்டுமே சாத்தியம் என்று கருதி தமிழ்நாட்டில் பாஜகவின் கருவூலமாக விளங்கும் தொழிலதிபர்கள், கல்வி வியாபாரிகள், தலைவர்கள் மற்றும் சிலபல தனி நபர்களிடமிருந்து கணிசமான நிதியுதவியை நாடியுள்ளனர். இதைக் கச்சிதமாக செய்து முடிக்க குறிப்பிட்ட சிலரை பிரத்யேகமாக நியமித்துள்ளதாக கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது என்று கர்நாடகா தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஒரே பேச்சாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...