சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியில் நடந்த கபடிப் போட்டியில் விளையாடிய 16 வயதுச் சிறுவன் தலையில் அடிபாட்டு உயிரிழந்தார்,
காரைக்குடி, செஞ்சை பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று மதியம் நடைபெற்ற கபடி விளையாட்டுபஹ போட்டியில் வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த பிரதாப் எனும் 16 வயதுச் சிறுவன் பங்கேற்று விளையாடிய கபடிப் போட்டியில் ஏற்பாட்டாளர்கள் ரப்பர் சீட்டு விரித்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் பிரதாப் விளையாடிய போது சக விளையாட்டு வீரர்கள் அவரைப் பிடித்த போது தலைகுப்புற விழுந்ததில் தலையின் பின்புறம் பலத்த அடி ஏற்பட்டது. உடனடியாக எழுந்தவர், தனியாகப் போய் உட்கார்ந்த ஐந்து நிமிடத்தில் மயங்கி விழுந்தார். அதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் சக விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காரைக்குடி நகர் தெற்கு காவல்நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்