ரூ.95.15 லட்சம் மதிப்புடைய 1796 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றினார்கள்
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி, 03.04.2023 அன்று அபுதாபியில் இருந்து வந்த ஆண் பயணியை சோதனை செய்ததில் அவர் தமது பையில் மின் மோட்டாருக்குள் மறைத்து வைத்திருந்த 95.15 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1796 கிராம் எடை உடைய தங்கம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அப்பயணி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் திரு மேத்யூ ஜாலி தெரிவித்தார்.
கருத்துகள்