ரூ.2.18 கோடி மதிப்புடைய 4.167 கிலோ தங்கம், 17.5 லட்சம் மதிப்புடைய 20 ஐ ஃபோன் ஆகியவற்றை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 11.04.2023 அன்று துபாயில் இருந்து வந்த இரண்டு ஆண் பயணிகளை சோதனைச் செய்ததில் அவர்கள் இருவரும் பசை வடிவிலான தங்கத்தை நான்கு பொட்டலங்களாக கணுக்காலில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களுடைய பைகளை சோதனையிட்டதில் 17.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய 20 ஐஃபோன்களை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டு அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மற்றொரு சம்பவத்தில் துபாயில் இருந்து வந்த ஆண் பயணி ஒருவரை அதிகாரிகள் சோதனைச் செய்ததில், 1,228 கிராம் எடையிலான தங்கக் கட்டிகளை முழங்காலில் அவர் மறைத்து வைத்திருந்தை அறிந்து அதை பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில் பயணிகள் வருகை அரங்கிற்கு அருகே கழிப்பறையில் 974 கிராம் எடையுள்ள ஒரு கிலோ தங்கக் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து மூன்று பயணிகளும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இத்தகவலை சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் திரு மேத்யூ ஜாலி தெரிவித்தார்.
கருத்துகள்