3.422 கிலோ தங்கம், 25.2 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் சுங்கத்துறை பறிமுதல்
1.83 கோடி மதிப்புள்ள 3.422 கிலோ தங்கம், 25.2 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல்
உளவுத்துறை தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் 13.04.2023 அன்று அபுதாபியில் இருந்து எதிஹாட் நிறுவன விமானம் எண் EY-270 - ல் சென்னை வந்த நான்கு ஆண் பயணிகளை தடுத்து நிறுத்தினர். அவர்களை சோதனையிட்டதில், ஒவ்வொருவரும் உள்ளாடையில் ஒரு தங்கச் சங்கிலியை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்களின் உடலில் ரப்பர் பேஸ்ட் வடிவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது, அதை பறிமுதல் செய்து சோதனையிட்டதில், 3,065 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கம் கிடைத்தது. மொத்தம், ரூ.1.83 கோடி மதிப்பிலான 3.422 கிலோ தங்கம் மீட்கப்பட்டு, சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவர்களது பொருட்கள், அதாவது மொபைல்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ரூ.25.2 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் ஆகியவையும் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
2 பயணிகள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்