தமிழ்நாட்டில் 6 மின் திட்டங்களுக்கான பணிகளின் நிலவரம்
தமிழ்நாட்டில் ஆறு மின் திட்டப்பணிகள் விரைவில் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் கே ஆர் என் ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடசென்னை அனல்மின் திட்டம் 3-வது கட்டம், (800 மெகாவாட்), எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் திட்டம் (2x660 மெகாவாட்), உடன்குடி எஸ்டிபிபி முதல் கட்டம் (2x660 மெகாவாட்), எண்ணூர் அனல் மின் திட்டம் (660 மெகாவாட்), குந்தா மின் திட்டம் (4x125 மெகாவாட்), கொல்லிமலை புனல்மின் திட்டம் (20 மெகாவாட்) ஆகியவற்றின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு, பல்வேறு நிலைகளில் உள்ள இந்தப் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டங்களுக்கான செலவு மதிப்பீடு மாற்றியமைக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள்