கொவிட்-19 மேலாண்மைக்காக மருத்துவமனை உட்கட்டமைப்பின் கொவிட் தயார் நிலைக் குறித்து உறுதி செய்வதற்காக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சென்றார்
கொவிட்-19 மேலாண்மைக்காக மருத்துவமனை உட்கட்டமைப்பின் கொவிட் தயார் நிலை குறித்து உறுதி செய்வதற்காக புதுதில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இன்று நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சென்றார்.
இது குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மருத்துவமனையில் உள்ள வசதிகளைக் கண்டறிந்து தாம் ஊழியர்களுடன் உரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் துறைத்தலைவர்கள் மற்றும் ஊழியர்களுடனும் டாக்டர் மாண்டவியா உரையாடினார். மருத்துவர்கள், செவிலியர்கள், பாதுகாப்புப் பிரிவு மற்றும் தூய்மைப் பணிப்பிரிவு தலைவர்களுடன் அவர் உரையாடி கருத்துக்களைக் கேட்டறிந்தார். அனைவரும் கொவிட் வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு
கேட்டுக்கொண்டார். தவறான தகவல்களை தடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்