முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மலர் மரியாதை செலுத்தினார்


டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மலர் மரியாதை செலுத்தினார்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மலர் மரியாதை செலுத்தினார்”, என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாபா சாஹேப் அம்பேத்கரின் வாழ்க்கைப் பயணம் - வாழ்க்கை, வரலாறு மற்றும் பணிகள்

பாபா சாஹேப் அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார். பெற்றோருக்கு இவர் 14 ஆவது மற்றும் கடைசி குழந்தையாவார்.

டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர், சுபேதார் ராம்ஜி மலோஜி சக்பாலின் மகனாவார். அம்பேத்கரின் தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சுபேதாரராகப் பணிபுரிந்தார். பாபா சாஹேபின் தந்தை, துறவி கபீரை பின்பற்றுபவராகவும் நன்கு படித்தவராகவும் திகழ்ந்தார்.

பாபா சாஹேப் அம்பேத்கரின் தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற்ற போது அவருக்கு இரண்டு வயதாகியிருந்தது. ஆறு வயதாக இருந்த போது  அவரது தாயார் காலமானார். பாபா சாஹேப் தனது தொடக்கக் கல்வியை பம்பாயில் பயின்றார். இந்தியாவில் தீண்டாமை என்பதை தமது பள்ளி நாட்களிலிருந்தே அவர் கடும் அதிர்ச்சியுடன் உணரத் தொடங்கினார்.

டாக்டர் அம்பேத்கர் தனது பள்ளிக் கல்வியை சத்தாராவில் பயின்றார். துரதிருஷ்டவசமாக தமது தாயாரை டாக்டர் அம்பேத்கர் இழந்ததால், அத்தையின் பராமரிப்பில் அவர் வாழ்ந்தார். பின்னர் அவர்கள் பம்பாய் இடம் பெயர்ந்தனர். பள்ளிக் காலம் முழுவதும் தீண்டாமைக் கொடுமையால் டாக்டர் அம்பேத்கர் அவதியுற்றார். பள்ளி இறுதி வகுப்பு (மெட்ரிகுலேஷன்) முடித்த பின்னர் 1907 ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் நடைபெற்றது.

டாக்டர் அம்பேத்கர் தமது பட்டப்படிப்பை பம்பாய் எல்ஃபின்ஸ்டன் கல்லூரியில் பயின்றார். இந்தப் படிப்பிற்காக அவர் பரோடாவின் மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட்டின் உதவித்தொகையை பெற்றார். பட்டப்படிப்பு முடித்த பின்னர் பரோடா சமஸ்தானத்தில் பணியாற்ற வேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. பரோடாவில் பணியாற்றிய போது அவரது தந்தையை இழந்தார். 1913 ஆம் ஆண்டில் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல டாக்டர் அம்பேத்கர் தேர்வு செய்யப்பட்டார். இது அவரது கல்வியில் திருப்புமுனையாக அமைந்தது.


எம் ஏ (முதுநிலை) மற்றும் முனைவர் (பிஹெச்டி) பட்டங்களை கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்து முறையே 1915 மற்றும் 1916 ஆம் ஆண்டுகளில் அவர் பெற்றார். மேலும் படிப்பதற்காக அவர் லண்டன் சென்றார். அங்கு கிரேஸ் இன் சட்டக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்ததுடன் லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளியில் டி எஸ்சி படிக்கவும் அவருக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் பரோடா திவானால் அவர் இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்பட்டார். பின்னர் பார் அட் லா மற்றும் பிஎஸ்சி பட்டங்களையும் அவர் பெற்றார். ஜெர்மனியின் பான் பல்கலைக் கழகத்திலும் சில காலம் அவர் பயின்றார்.

1916 ஆம் ஆண்டில் அவர், "இந்தியாவில் சாதிகள் - அவற்றின் செயல்பாடு, தோற்றம் மற்றும் வளர்ச்சி" என்ற கட்டுரையை வாசித்தார். 1916 ஆம் ஆண்டில் "இந்தியாவிற்கான தேசியப் பங்கு - வரலாற்று மற்றும் பகுப்பாய்வு ஆராய்ச்சி" என்ற தமது ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து பிஹெச்டி பட்டத்தை அவர் பெற்றார். இது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, "பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதி உருவாகிக்கம்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த உயரிய பட்டத்தைப் பெற்ற பிறகு இந்தியா திரும்பிய அவர், பரோடா மகாராஜாவின் ராணுவச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரை நிதியமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற நீண்ட கால பார்வையுடன் இந்த நியமனம் செய்யப்பட்டது.

உதவித்தொகை காலம் நிறைவடைந்த பின்னர் 1917 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாபா சாஹேப் பரோடா நகருக்கு திரும்பி பணியில் இணைந்தார். குறுகிய காலம் அங்கு இருந்த அவர் 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார். தீண்டாமையின் அடிப்படையில் அவர் எதிர்கொண்ட கொடுமைகள் அவரை பணியிலிருந்து விலகச் செய்தது.

டாக்டர் அம்பேத்கர் பம்பாயிக்குத் திரும்பி சிடென்ஹாம் கல்லூரியில் அரசியல் பொருளாதார போராசிரியராகப் பணியில் சேர்ந்தார். நல்ல படிப்பறிவை பெற்றிருந்ததால் மாணவர்களிடம் அவர் வரவேற்பைப் பெற்றார். எனினும் லண்டனில் மீண்டும் சட்டம் மற்றும் பொருளாதார படிப்பைத் தொடர்வதற்காக அந்தப் பணியிலிருந்து அவர் விலகினார். இதற்காக கோலாப்பூர் மகாராஜா அவருக்கு நிதியுதவி செய்தார். 1921 ஆம் ஆண்டு தமது ஆய்வுக் கட்டுரையை எழுதினார். "பிரிட்டிஷ் இந்தியாவில் ஏகாதிபத்திய நிதி அளித்தலில் மாகாண பரவலாக்கம்" என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையைச் சமர்பித்து லண்டன் பல்கலைக் கழகத்தில் இருந்து எம்எஸ்சி பட்டத்தை அவர் பெற்றார். பின்னர் சில காலம் ஜெர்மனியின் பான் பல்கலைக் கழகத்தில் அவர் பயின்றார். 1923 ஆம் ஆண்டில் "ரூபாயின் சிக்கல்கள் அதன் தோற்றம் மற்றும் தீர்வு" என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையைச் சமர்பித்து டிஎஸ்சி பட்டத்தை அவர்  பெற்றார். 1923 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.   

1924-ல் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்தபின் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்கான  சங்கத்தை அவர் தொடங்கினார். இதன் தலைவராக சர் சிமன்லால் ஸ்டெதால்வத் தலைவராகவும், டாக்டர் அம்பேத்கர் அவைத்தலைவராகவும் இருந்தனர். ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையே கல்வியைப் பரப்புவதும், பொருளாதார நிலையை மேம்படுத்துவதும் அவர்களின் கோரிக்கைகளை சமர்ப்பித்தலும், இந்த சங்கத்தின் உடனடி நோக்கங்களாக இருந்தன.

புதிய சீர்திருத்த கண்ணோட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்க 1927 ஏப்ரல் 3-ல் பகிஷ்கிரித் பாரத் என்ற செய்தித்தாள் தொடங்கப்பட்டது.

1928-ல் பம்பாய் அரசு சட்டக்கல்லூரியில் அவர் பேராசிரியரானார். 1935 ஜூன் 1 அன்று இதே கல்லூரியின் முதல்வரானார். 1938-ல் பதவி விலகும் வரை இதே பதவியில் இருந்தார்.

1935 அக்டோபர் 15 அன்று ஒடுக்கப்பட்ட மக்களின் மாகாண மாநாடு நாசிக் மாவட்டம் யேலாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், “நான் இந்துமதத்தில் பிறந்தேன். ஆனால், ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்” என்ற இந்துக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை அவர் வெளியிட்டார். அவரது முடிவை ஆயிரக்கணக்கானோர் ஆதரித்தனர். 1936-ல் பம்பாய் மாகாண மஹர் மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்து மதத்திலிருந்து வெளியேறும் யோசனையை முன்வைத்தார்.

1936 ஆகஸ்ட் 15 அன்று ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்க சுதந்திர தொழிலாளர் கட்சியை தொடங்கினார். இது பெரும்பாலான தொழிலாளர்களை கொண்டிருந்தது.

1938-ல் தீண்டப்படாதவர்களின் பெயரில் மாற்றம் செய்யும் மசோதா ஒன்றை காங்கிரஸ் அறிமுகம் செய்தது. இதனை டாக்டர் அம்பேத்கர் விமர்சித்தார். பெயரை மாற்றுவது, பிரச்சனைக்கு தீர்வாகாது என்பது அவரது கருத்தாகும்.

1942-ல் இந்திய கவர்னர் ஜெனரலின் நிர்வாக சபைக்கு தொழிலாளர் துறை உறுப்பினராக  அவர் நியமிக்கப்பட்டார். 1946-ல் வங்கத்தில் இருந்து அரசியல் நிர்ணய சபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே காலத்தில், சூத்திரர்கள் யார்? என்ற நூலினை வெளியிட்டார்.

சுதந்திரத்துக்கு பின், 1947-ல் நேருவின் முதலாவது அமைச்சரவையில்  சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். ஆனால், 1951-ல் காஷ்மீர் பிரச்சனை, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, இந்து சட்ட மசோதாவில் நேருவின் கொள்கை ஆகியவற்றில் நமது கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இந்தியாவின் அரசியல் சட்ட வரைவில் அவரது பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக 1952-ல் ஒலிம்பிய பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 1955-ல் மொழிவழி மாநிலங்கள் குறித்த எண்ணங்கள் என்ற நமது புத்தகத்தை வெளியிட்டார்.

1953 ஜனவரி 12 அன்று உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இருந்து  டாக்டர் பி ஆர் அம்பேத்கர் டாக்டர் பட்டம் பெற்றார். அதேசமயம், “நான் இந்துவாக இறக்கமாட்டேன்” என்று 1935-ல் யேலாவில் அறிவித்ததை 21 ஆண்டுகளுக்கு பின், உண்மை என நிரூபித்தார். 1956 அக்டோபர் 15-ம் தேதி அன்று நாக்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க விழாவில் அவர் புத்த மதத்தை தழுவினார். 1956 டிசம்பர் 6 அன்று அவர் உயிரிழந்தார்.

1954-ல் நேபாளத்தின் காட்மாண்டுவில் “ஜெகதிக் புத்த மத சபையில்” உள்ள  புத்த பிட்சுகள் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கருக்கு “போதிசத்வா”  என்ற பட்டத்தை வழங்கினர். இதன் சிறப்பு என்னவென்றால், அவர் உயிரோடு இருக்கும் போதே, போதிசத்வா பட்டம்  வழங்கப்பட்டதாகும்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கும், விடுதலைக்கு பிந்தைய சீர்திருத்தங்களுக்கும் அவர் பங்களிப்பு செய்துள்ளார். இது தவிர, இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கத்தில் பாபா சாகேப் குறிப்பிடத்தக்க பணியை செய்துள்ளார். ஹில்டன் யங் கமிஷனுக்கு பாபா சாகேப் சமர்ப்பித்த கருத்து அடிப்படையில், இந்த மத்திய வங்கி உருவாக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கரின் ஒளிமயமான வரலாறு அவர்  ஆய்வு மற்றும் செயல்பாட்டின் மனிதராக விளங்கியதை காட்டுகிறது. முதலில் அவர் பொருளாதாரம், அரசியல், சட்டம், தத்துவம், சமூகவியல் ஆகியவற்றில் சிறந்த ஞானத்தை பெற்றிருந்தார். இவர் பல சமூக பிரச்சனைகளை எதிர்கொண்டார். அவர் தமது வாழ்நாள் முழுவதையும்  கற்றல், ஆய்வு செய்தல், நூலகங்கள் என்று கழிக்கவில்லை. அதிக வருவாய் ஈட்டும் உயர் பதவிகளை அவர் நிராகரித்தார். தமது சகோதாரர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தில் இருந்ததை அவர் ஒரு போதும் மறக்கவில்லை. தமது வாழ்நாளின் எஞ்சிய பகுதியை சமத்துவம். சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவற்றுக்கு அர்ப்பணித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக  அனைத்து சிறந்த வழிகளிலும் முயற்சி செய்தார்.

அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்ததற்கு பின் அவரது முதன்மையான பங்களிப்பு பற்றியும், அதன் பொருத்தப்பாடு பற்றியும் ஆய்வு செய்வதும், பகுப்பாய்வு செய்வதும் அவசியமாமனது, முறையானது.  ஒரு கருத்தின் படி, மூன்று விஷயங்கள் இன்றும் கூட, மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. இன்றும் கூட, இந்திய பொருளாதாரமும், இந்திய சமூகமும் பல பொருளாதார சமூக பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் நமக்கு வழிகாட்டும்.

டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் நினைவு தினம் நாடு முழுவதும் மகாபரிநிர்வாண் என அனுசரிக்கப்படுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...