எல்லோருக்கும் தெரிய வந்த உண்மையை மறைக்க எத்தனை மெனக்கெடல்!
வேங்கை வயல் வலையர் என்ற முத்தரையர் மக்களும் ஆதிதிராவிடர்களில் ஒரு பிரிவு மக்கள் வாழும் ஊரில் குடிநீர் தொட்டியில் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில் நான்கைந்து மாதமாகக் குற்றவாளியைத் தேடுகிறார்கள்
முதலில் ஒரு கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்தலைமையில் 11 பேர் கொண்ட குழு களத்தில் இறங்கி புலன் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் ஆதிதிராவிட பட்டியல் பிரிவு இளைஞர்களையே பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் மிரட்டி குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்ய நிர்பந்தித்தார்கள் எனவும் அரசு வேலை வாங்கித் தருகிறோம் ஒத்துக் கொள்ளுங்கள் என ஆசை வார்த்தை காட்டினார்கள் எனவும்,
இத் தகவல் வெளியே தெரிய வந்தவுடன் சிபிசிஐடியின் 10 குழுக்களை களத்தில் இறக்கி அவர்களும் நான்கு மாதமாக 147 பேரிடம் விசாரித்துள்ளார்கள்,
இதற்கிடையில் ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் வந்தது,
சரி, இவ்வளவும் நடத்தியதில் கண்டுபிடித்துவிடுவார்களே எனப் பார்த்தால், இவை யாவும் உண்மையான குற்றவாளியைக் காப்பாற்றும் முயற்சியோ என சந்தேகிக்கும் படியான அடுத்த நகர்வும் செல்வதாகவே பலரும் பேச
இந்தச் சூழலில் வேங்கை வயல் நீர்தேக்கத் தொட்டியில் நீர் பகுப்பாய்வு செய்ததில் அந்தக் கழிவுகள் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்களுடையது என கண்டறிந்துள்ளார்களாம்
அதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த 9 பேர், காவேரி நகர் மற்றும் முத்துக்குடியைச் சேர்ந்த தலா ஒருவர் என சந்தேகிக்கும் ஒன்பது பேருக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தப் போகிறார்களாம்
இதெல்லாம் எதற்கென்று தெரியவில்லை.
குடிநீர் தொட்டியில் இருந்த கழிவு யாருடையது என்பதைக் கண்டறிவதற்காக என்றால், இதைவிட அறிவார்ந்தவர்கள் வேறு எங்குமே இருக்க முடியாது.
கிராமங்களில் திறந்த வெளியில் யார் வேண்டுமானாலும் இயற்கை உபாதை காரணமாக கழித்துச் செல்வர்! அப்படிக் கழித்துச் சென்ற அப்பாவிகளை எல்லாம் டிஎன்.ஏ சோதனைக்கு உட்படுத்தி தண்டிக்க முயற்சிப்பது
அந்தக் கழிவை வாரி எடுத்துச் சென்று குடிநீர் தொட்டியில் போட்டவன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அப்படிப் போடும்படி கட்டளையிட்டவன் யார் என்பதும் தான் தெரிய வேண்டிய விடை!
உண்மையில் இதற்கான விடையை அந்த கிராமத்தை சேர்ந்த மக்களே கண்டறிந்து வெளிப்படுத்திவிட்டனர்.
ஊரில் பெரிய மனிதனைப் போல வேடமிட்டுத் திரியும் அந்த முத்தான ஐயா தான் இரண்டு சிறுவர்களை வைத்து கழிவுகளை அள்ளி வரச் செய்து மேல்நிலை குடிநீர் தொட்டியில் போடவும் வைத்துள்ளார் என்பது பட்டவர்த்தனமாக அந்த மனிதரின் ஜாதியைச் சேர்ந்தவர்களாலேயே வெளியிடப்பட்டும் விட்டது.
அந்த உண்மையை மறைக்கத் தான் இத்தனை சூழ்ச்சிகள் நடக்கின்றனவோ என்னவோ என பலருக்கும் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது எளிதில் எப்போதோ கண்டறியப்பட்டுவிட்ட நிலையில், அதை மறுதலித்து வலிந்து ஒரு பொய்யை கட்டமைக்கத் தான் எத்தனையெத்தனை கூத்துக்கள் ! ஆஹா ஜாதி வாக்குகள் தான் காரணமா.
கருத்துகள்