இந்தியாவின் பாரம்பரியம் இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த ஆவணப் படத்தை டிடி நேஷனல் டிடி தொலைக்காட்சியில் காணும் வாய்ப்பு
‘இந்தியாவின் பாரம்பரியம்' என்ற தலைப்பிலான ஆவணப்படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் காணுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
‘இந்தியாவின் பாரம்பரியம்' (Dharohar Bharat Ki) என்ற தலைப்பிலான இரண்டு பாகங்களை கொண்ட தூர்தர்ஷன் ஆவணப்படத்தைக் காணுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அவணப் படம் ஏப்ரல் 14 மற்றும் 15 அன்று இரவு 8 மணிக்கு டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.
தூர்தர்ஷனின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து, பிரதமர் கூறியிருப்பதாவது:
“நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அனைத்தையும் தியாகம் செய்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், சீருடையில் பணியாற்றுபவர்களின் வீரத்திற்கும், நமது பாரம்பரியத்திற்கும் ஓர் அஞ்சலி.
இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த ஆவணப் படத்தை டிடி நேஷனல் @DDNational தொலைக்காட்சியில் ஏப்ரல் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் இரவு 8 மணிக்குக் காணுங்கள். #DharoharBharatKi”
கருத்துகள்