மணல் கடத்தியதால் புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டப்பட்டுக் கொலை,
புகார் மீது வழக்கு பதிவு செய்ததால் பணியில் இருந்த போது படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தூத்துக்குடி முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி உதவியும் கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிக்கை விபரம் வருமாறு 'தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவகுண்டம் தாலுகா முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அலுவலகத்தில் பணியிலிருந்த போது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தலை, கைகளில் காயமடைந்த லூர்து பிரான்சிஸ் திருநெல்வேலி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர். சிகிச்சை பலனின்றிக் காலமானார். அவரைத் தாக்கி கொலை செய்தவர்களில் ராமசுப்பு என்ற நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ராமசுப்பு, மற்றொரு நபருடன் இணைந்து லூர்து பிரான்சிஸை வெட்டினார் என்றும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது லூர்து பிரான்சிஸ் பொறுப்புணர்வையும் கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகிறது; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என. அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசு சார்பாக லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார் என தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூறப்படும் தகவலாவது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலுகா வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலரான லூர்து பிரான்ஸிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் ரோந்து சென்றிருந்ததாகவும் அப்போது, ராமசுப்பு என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்தி சென்றதாகவும் அதனைப் பார்த்த லூர்து பிரான்சிஸ், உடனடியாக முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், லூர்து பிரான்சிஸ் அவர் பணி செய்த அலுவலகத்தில் வழக்கமான பணியிலிருந்தபோது, திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த இருவர், அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த முறப்பநாடு காவல்துறையினர் ஒருவரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்,
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து பின்னர் அங்குள்ள செய்தியாளர்களிடம் பேசிய போது குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் எனக் கூறினார்.
லூர்து பிரான்சிஸின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லூர்து பிரான்சிஸின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மணல் கொள்ளை மாஃபியா, நில மோசடி மாஃபியா, மோட்டல் ஊழல் மாஃபியா, ஒப்பந்ததாரர் மாஃபியா, சுங்கச்சாவடி சின்டிகேட் மாஃபியா, சுகர் சின்டிகேட் மாபியா, என பலவகை உண்டு இது எல்லாம் சாமானிய மக்கள் இதுவரை அறியாத ஒன்று, என முழுவதும் மாஃபியா கும்பல்களின் கட்டுப்பாட்டில் சென்று கொண்டிருக்கிறது. அரசு அலுவலகம் உள்ளேயே நுழைந்து அரசு பணியாளரைக் கொலை செய்து விட்டு செல்லும் அளவிற்கு இந்த மாஃபியா கும்பல்களுக்கு துணிச்சல் வந்த காரணம் அரசியல் தான்.
மாபியா கும்பல்களை எதிர்க்கும் துணிச்சல் கொண்ட நேர்மையான அரசு அதிகாரிகள் இல்லாத நிலை இந்த சபாடினேட் சர்விஸ் நபர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதமிருக்கிறது என்ற வினா அரசு ஊழியர் மத்தியில் எழுகிறது அரசு கொடுக்கும் 1 கோடி ரூபாய் அந்த உத்தரவாதத்தைக் கொடுக்காதே. என்ன செய்யப் போகிறீர்கள்? என்ற வினாவும் அவர்கள் மத்தியில் தற்போது வருகிறது. முழுமையான விசாரணை முடியும் முன்பு எதுவும் கூறமுடியாது மேலும் தமிழ்நாட்டில் ஆற்று மணல் கடத்தி பல நூறு கோடிகளை கப்பம் கட்டி எடுத்து அரசியல் காரணமாக ஊழல் செய்து கொடுத்த பல கோடிஸ்வரர்கள் மாவட்டம் தோறும் உண்டு , ஆனால் அந்த மணல் திருடர்களுக்கோ இராஜ மரியாதை தான் காரணம் எங்கும் மாமூல் ,எதிலும் மாமூல் இப்போது ஒரு நேர்மையான கிராம நிர்வாக அலுவலரை தூத்துக்குடி மாவட்டத்தில் வெட்டிய குற்றவாளி இரண்டு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர் என்பதே இதில் ஹைலைட்டாகிறது.
கருத்துகள்